அறிவுக்கு விருந்து – 24.6.2019 (திங்கள் )


அறிவுக்கு விருந்து – 24.6.2019  (திங்கள் )
குறளறிவோம்-  13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
Translation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.
சிந்தனைக்கு
பேசுபவன் விதைக்கிறான்.  கேட்பவன் அறுவடைசெய்கிறான்.
தமிழ் அறிவோம்
     ஒத்தச் சொற்கள்
                        அந்தரங்கம்          -           மர்மம்
                        அந்தரங்கம்          -           மறைமுகம்
                        அந்தரங்கம்          -           கமுக்கம்

பழமொழி  
* அகல் வட்டம் பகல் மழை *      

விளக்கம் : அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டு  அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.

இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.

 Enrich your   vocabulary
·         Desparity....வித்தியாசம் am
·         Disown.....கைவிடு 
·         Displace....இடம்பெயர் 
·         Displease....வெறுப்பூட்டு 
·         Disqualify....தகுதியற்றதாக்கு 
·         Disregard....அவமதிப்பு 
·         Dispense.....கைவிடு 
·         Dispose.....அனுப்பிவிடு 
·         Disprove.....பொய்யாக்கு 
·         Dispossess.....அபகரித்துக்கொள் 

Opposite Words
            Light   x          Dark
            Light   x          Heavy

மொழிபெயர்ப்பு

AMARANTH – முளைக்கீரை
ARTICHOKE – கூனைப்பூ

Proverb

*The grass is always greener on the other side of the fence*

Meaning : The grass is always greener” is a proverb that teaches us it’s not good to be jealous (to want what other people have). It may seem like everyone around you has “greener grass,” meaning nicer cars, better jobs, etc.
இனிக்கும் கணிதம்
கணிதம் அழகின் உருவம்
அழகிலா கணிதம் என்று ஒன்றில்லை.

கணித அறிஞர்  ஹார்டி
(இங்கிலாந்து)
அறிவோம் அறிவியல்
தாமஸ் ஆல்வா எடிசன்  இவர் அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பிசினெஸ் மேன்.மனிதர்களின் வாழ்கையை இன்னும் சுலபமாக பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் இவர். போனோகிராப், மோஷன் பிக்சர் கேமரா , நடைமுறை மின்சார ஒளி விளக்கை  கண்டுபிடித்தவர்.  இவர் தனது வாழ்நாள் முழுவதும் 1093 கண்டுபிடிப்புகளை அமெரிக்காவில் நிகழ்த்தி அதற்கு முழு காபீட்டையும் பெற்றிருக்கிறார்நம்ம வீட்ல கலர் கலரா லைட் எரியுதுனா அதுக்கு இவர் தான் மிக முக்கிய காரணம். 
அறிவியல் துளிகள்
விரல்களில் ங்கள் ர்வது இயற்கை. அதில் ஆட்காட்டி விரலில் மிகநிதானமாகவும், டுவிரலில் மிகவேகமாகவும் ருமாம்.
தினம் ஒரு மூலிகை   - எட்டி   
நாக்ஸ் வாமிகா, விஷம் கொட்டை, சிமேன் ஸ்ட்ரைகோனஸ் மற்றும் குவாக்கர் பொத்தான்கள் என்றும் அழைக்கப்படும் ஸ்ட்ரைகோனஸ் மரம் (Strychnos nux-vomica L.), இந்தியா,மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் தாயகமாக கொண்ட ஒரு இலையுதிர் மரமாகும். இது திறந்தவெளி வாழ்விடங்களில் வளரும் லொகானியேசியே குடும்பத்தை சார்ந்த  ஒரு நடுத்தர மரம் ஆகும். அதன் இலைகள் முட்டை மற்றும் 2-3.5 அங்குலங்கள் (51-89 மிமீ) அளவுள்ளன.
இது மரத்தின்  வட்டத்திற்குள் விதைகளிலிருந்து பெறப்பட்ட மிகையான நச்சு, தீவிர கசப்பான அல்கலாய்டுஸ் ஸ்டிரைச்னைன் மற்றும் புரோசின் ஆகியவற்றை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது, பச்சை நிற ஆரஞ்சு பழம். விதைகளில் சுமார் 1.5% ஸ்ட்ரைக்னின்கள் உள்ளன, மற்றும் உலர்ந்த பூக்கள் 1.0% கொண்டிருக்கும். இருப்பினும், மரத்தின் பட்டை கூட புளுசினையும் பிற விஷத்தன்மை உடைய கூட்டுப்பொருள்களை கொண்டுள்ளது.
மாற்று மருத்துவத்தில் பல நிலைமைகளுக்கு சிகிச்சையாக ஸ்ட்ரைநினோஸ் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மருத்துவ சான்றுகளால் இந்த கூற்றுகள் நிறுபிக்கப்படவில்லை.
பல நாடுகளில் ஸ்ட்ரைநினின் பயன்பாடு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது,  Strychnos nux-vomica ஒரு சிறிய தடித்த தண்டு ஒரு நடுத்தர அளவு மரம் ஆகும்.  அடர்த்தியானது, கடினமான வெள்ளை மற்றும் சொரசொரப்பானது. கிளைகள் மேல் ஒழுங்கற்ற மற்றும் ஒரு மென்மையான சாம்பல் பட்டை மூடப்பட்டிருக்கும். இளம் தளிர்கள் ஒரு பளபளப்பான மேலுறை கொண்ட  பச்சை நிறம் ஆகும். இந்த இலை எதிரிலை அடுக்கம் அமைவுகொண்டது, குறுகிய இலைக்காம்பு, நீள்முட்டை வடிவமானது, ஒரு பளபளப்பான படலம் மற்றும் இருபுறமும் மென்மையானவை. இலைகள் 4 அங்குல (10 செமீ) நீளமும், 3 அங்குல (7.6 செமீ) அகலமும் கொண்டவை. மலர்கள் ஒரு புனல் வடிவத்துடன் ஒரு வெளிர் பச்சை நிறம் கொண்டவை. அவைகள் குளிர் பருவத்தில் பூக்கின்றன மற்றும் வெறுக்கதக்க வாசனை கொண்டது. பழம் ஒரு மென்மையான மற்றும் கடினமான ஓடு கொண்ட ஒரு பெரிய ஆப்பிள் அளவு வடிவம் கொண்டது. பழத்தின் சதை பழுக்கும் போது செந்நிறம், மென்மையான மற்றும் வெண்மையானது,  மெல்லிய பொருளைக் கொண்டிருக்கும் ஐந்து விதைகள் கொண்ட ஜெல்லி போன்ற கூழ்ம பொருளால் ஆன்து.
புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பரந்தளவிலான பல நோய்களுக்கு சிகிச்சையாக இருக்கும்  ஸ்ட்ரைகோனஸ் மூலிகை மருத்துவத்தில் ஊக்குவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையுமின்றி இது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. விதைகள் ஸ்டைக்நினைன் விஷத்தை கொண்டிருக்கின்றன என்பதால், வழக்கமான மருந்துகள் அதை ஒரு மருத்துவமாக பரிந்துரைக்கவில்லை. இது அங்கீகரிக்கப்படாத மூலிகைகளின் கமிட்டி  மின் பட்டியலில் உள்ளது, ஏனென்றால் அது பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படவில்லை, பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும்     இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை.
உயிர்ச்சத்து அட்டவணை

 

வரலாற்றுச் சிந்தனை

இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் காளிதாசர்

 

தன்னம்பிக்கை கதை  -  பாதையை மாற்றிய பயணச்சீட்டு


சுமன் எப்போதும் அந்த தனியார் பஸ்ஸில் பள்ளிக்கு செல்லவே விரும்புவான். காரணம் அது எப்போதும் பெரும் கூட்டமாக இருக்கும். அரசுப் பேருந்தில் செல்ல இலவச பஸ் பாஸ் இருந்தாலும், பள்ளி துவங்கும் நேரத்துக்குச் செல்ல தனியார் பேருந்தே ஒத்து வந்ததால் அதிலேயே சென்று வந்தான்.
வீட்டில் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தினமும் டிக்கெட்டுக்காக பணம் கொடுத்து விடுவார்கள். அதுதவிர, அவன் அவ்வப்போது கேட்கும் பணமும் மகம் சுளிக்காமல் கொடுக்கப்படும். காரணம், அவன் எண்ணம் முழுவதும் படிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், தங்கள் மகன் வருங்கலாத்தில் ஒரு பெரிய கல்விமானாக வரவேண்டும் என்றும் பெற்றவர்கள் விரும்பினார்கள்.
ஒவ்வொரு ஸ்டாபிங்கிலும் பஸ் நிற்கும்போது இறங்கிவிடுவான். நடத்துனரின் விசில் சத்தம் கேட்டு பஸ் கிளம்பும்போது வேகமாக ஓடி படியில் நின்று பயணிப்பான். நடத்துநர் திட்டுவதைக் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டான். ஆனால் எப்போதும் பயணச்சீட்டு வாங்கியதே இல்லை. கூட்டமாக இருப்பதால் நடத்துநராலும் யார் யார் டிகெட் எடுத்தார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. எப்போதாவது அவனைப் பார்த்து டிக்கெட் கேட்டால் ஏற்கனவே வாங்கி விட்டேனே என்று கூறி விடுவான். இப்படியாக பஸ்சில் டிக்கெட் எடுக்காமலும், பெற்றவர்களிடம் செலவுக்காக கேட்டு வாங்கும் பணத்திலும் பள்ளிக்கு செல்லாமல் கட் செய்துவிட்டு நண்பர்களோடு சினிமாவுக்கு சென்று விடுவான். தவறான பழக்கங்களுக்கும் அடிமை ஆனான். இப்படிப் பெற்றவர்களின் ஆசைக்கு நேர் விரோதமாக இருந்ததோடு, நல்லொழுக்கம் போதிக்கும் கல்விக்கே அவன் ஒரு களங்கமாக விளங்கினான். இப்படியாக அவனுடைய பொழுது ஜாலியாகக் கழித்து கொண்டிருந்தது.
அன்றும் வழக்கம்போல் பயணம் தொடர்ந்தது. அப்போது வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் ஏறினார். சுமன் படியில் நின்று கொண்டிருந்தான். ஒரே கூட்டம். நடந்துனர் டிக்கெட்...டிக்கெட்...என்று கேட்டுத் தொந்தரவு செய்யவே, அன்று ஏமாற்ற வோண்டாம் என்று நினைத்த சுமன் மூன்று ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டான். அப்போது அந்த பெரியவர் டிக்கெட்டுக்கான பணத்தை நீட்டினார். நடத்துனர் அவன் அருகில் இருந்ததால் பெரியவரின் அருகில் இருந்தவர்கள் ஒருவர் கை ஒருவர் மாற்றி கடைசியில் பணத்தை வாங்கி சுமனிடம் கொடுத்து, “தம்பி, பெரியவருக்கு மூன்று ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொடுப்பாஎன்றார்.
நடத்துனர் முன்புறம் பார்த்து டிக்கெட் கேட்பதில் ஈடுபட்டிருந்தார். அதற்குள் அவன் இறங்க வேண்டிய இடமும் வந்தது. சட்டென தன்னிடம் இருந்த மூன்று ரூபாய் டிக்கெட்டை எடுத்து பெரியவரிடம் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை பெருமையுடன் தன் பையினுள் நுழைத்தான், ‘ஆகா, இன்னிக்கு நாம முழிச்சது நரி முகத்துல போல இருக்கு... இல்லாட்டி நாம டிக்கெட் வாங்கினாலும் ஏன் அனாவசியமா செலவு செய்றதேன்னு சொல்லாம சொல்லி அந்த டிக்கொட்டுக்கான பணத்தை பெரியவர் மூலமாக கடவுள் நமக்கு கிடைக்க வெச்சிருப்பாரா...’ என்று நினைத்துக் கொண்டு அவன் ஸ்டாப்பில் இறங்கவும், டிக்கெட் பரிசோதகர் வரவும் சரியாக இருந்தது. “தம்பி, உன் டிக்கெட்டைக் கொடு?”
சார் வந்து...” என்று சொல்லியபடி பையினுள் கையைவிட்டு பாசாங்கு செய்தான். “என்ன கிடைச்சுதா?” “இல்ல சார், கூட்டத்துல எங்காச்சும் விழுந்திருக்கு மோன்னு நினைக்கிறேன்...”
இத்தனை பேரும் கூட்டத்துலதானே நின்னுகிட்டு வந்தாங்க. உன்னோட டிக்கெட் மட்டும் எப்படி காணாமப் போச்சு?” “இல்ல சார், உண்மையிலேயே நான் டிக்கெட் வாங்கினேன்  அப்படின்னா டிக்கெட்க் காட்டு, இல்லாட்டி 500 ரூபாய் அபராதம் கட்டிட்டு போ’ “சார்...சார்...அவ்வளவு பணம் இல்லீங்க. வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்என்று கெஞ்சினான் சுமன். “அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்பட்ச்சுடுவோம். என்ன சொல்ற...?
அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?” பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன். “ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார். அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.
அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றே. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.
நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர்  அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.

 

செயலி -    Basic English for BeginnersCover art

இணையம் அறிவோம்  -  http://www.tnpsclink.in/p/tnpsc-study-material.html
 
போங்கம்  | ஓவியம் வரைவது எப்படி –
https://www.youtube.com/watch?v=Dy76_CT6dYI


1 comment:

  1. சிறந்த பணி..வாழ்த்துகள்..

    ReplyDelete