அறிவுக்கு விருந்து – 20.6.2019 (வியாழன்)
குறளறிவோம்- 11 - வான்சிறப்பு
வான்நின்று உலகம்
வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உலகத்தை வாழ
வைப்பது மழையாக
அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.
மு.வரதராசனார் உரை:
மழை
பெய்ய
உலகம்
வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும்
உயிர்களுக்கு அமிழ்தம் என்று
உணரத்தக்கதாகும்.
Translation:
The world its course maintains
through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Thus rain is known the true ambrosial food of all that lives.
Explanation:
By the continuance of rain the world
is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
சிந்தனைக்கு
மிகப்பெரிய உண்மைகள்
மிக எளிமையானவை, அதைப்போலத்தான் பெரிய மனிதர்களும்.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அமைதி - அடக்கம்
அமைதி - நிசப்தம்
அமைதி - மௌனம்
பழமொழி
*அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை*
விளக்கம்
: உறவுகள்
தொலைவில் இருந்தால்
எப்போதாவது சந்திக்கும்
போது அவர்களிடத்தில் சண்டை
குறைவாக இருப்பதையும்,
பக்கத்தில் இருக்கும்
உறவுகளிடம் எப்போதுமே
பழக வாய்ப்பு இருப்பதால்
அடிக்கடி ஏதும்
பிரச்சனை வருவதையும்
அன்றாடம் நாம்
காணலாம்.
அதே போலவே, எப்படிப்பட்ட
உறவானாலும் கொஞ்சம்
மரியாதை கொடுத்து
நடத்தினால் பிரச்சனை
வராமலும் நெருங்கி
வர வர மரியாதை
இல்லாமல் போவதால்
சில நேரம் பிரச்சனை
வருவதையும் காணலாம்
இதையே அகல இருந்தால்
நிகள உறவு, கிட்டவந்தால்
முட்டப் பகை.
என்ற பழமொழி உணர்த்துகிறது.
Enrich your vocabulary
·
Burette - அளவைக்குழல்
·
Bulletin - அறிக்கைதாள்
·
Bulldog - பெரியவகை
நாய்
·
Bullion - வெள்ளிக்கட்டி
·
Buoy - மிதத்தல்
·
Bund - அணைக்கட்டு
·
Bungle - தவறுசெய்
·
Bumper - பெரிய
·
Bully - கொடுமைப்படுத்துபவன்
·
Bulky - பருமமான
·
Bug - மூட்டைப்பூச்சி
Opposite Words
High x Deep
High x low
Proverb
* You can lead a horse to water, but you can’t
make him drink it*
Meaning : You
can try to help someone by giving good advice, but you can’t force them to
accept it or follow it.
Example : “She
tried to help her brother find a job by improving his resume, but he didn’t do
anything with it. I guess you can lead a horse to water, but you can’t make him
drink it.”
இனிக்கும் கணிதம்
3+4=9
5+6=41
1+3=?
விடை – 10
அறிவோம்
அறிவியல்
ஃபிளமிங்கோ பறவைகள் இரு கால்களால் நிற்கும் நிலையை காட்டிலும் ஒரு காலில் நிற்கும் போது குறைந்த அளவிலான ஆற்றலை செலவழிப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தினம் ஒரு மூலிகை - ஈச்சை
ஈச்ச மரம் (Phoenix sylvestris (sylvestris - Latin, of the
forest), silver date palm, sugar date palm அல்லது wild date palm) என்பது பூக்கும் தாவர
இனத்தைச்சேர்ந்த ஒரு
பனைக்
குடும்பத் தாவரமாகும். இவை
பெரும்பாலும் தெற்கு
பாகிஸ்தான், இந்தியா, இலங்கை,
நேபாளம், பூட்டான், மியான்மர், வங்கதேசம் ஆகிய
இடங்களில் காணப்படுகிறது.
மேலும் மொரிசியசு, சாகோஸ்
அரிப்பிளாகோ, புவேர்ட்டோ ரிக்கோ,
லீவர்டு தீவுகள்ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. இவை
1300 மீட்டர் உயரம்
வரை
சமவெளிகளில் வளரக்கூடியவை. இதன்
பழங்கள் மூலமாக
ஒயின்,
ஜெல்லி
ஆகியவை
தயாரிக்கப்படுகின்றன. இந்த
மரங்களில் இருந்து கள்,
பதநீர்
ஆகியவை
இந்தியா, வங்கதேசம் ஆகிய
நாடுகளில் இறக்கப்படுகின்றன. வெல்லமும் தயாரிக்கப்படுகின்றன. இதன்
ஓலைகளைக் கொண்டு
பை,
பாய்,
துடப்பம் ஆகியவை
செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இயல்பாக காணப்படும் இம்மரம் தோற்றத்தில் பேரீச்ச மரத்தை
ஒத்தது.
இம்மரங்களில் ஆண்
மரங்கள், பெண்
மரங்கள் என
உண்டு.
பெண்
மரங்களில் மட்டும் பழங்கள் உருவாகும், ஆண்
மரங்களில் பழங்கள் உண்டாகாது. இந்த மரத்தை
இலங்கையில் உள்ள
சிங்கள
மக்கள்
வால்
இந்தியா (wal Indi", "val Indi",(වල්ඉංදි ) என அழைக்கின்றனர்.
இம்மரங்கள் 4 முதல்
15 மீட்டர் உயரம்
வரை
வளரக்கூடியன. மரத்தின் விட்டம் 40 செ.மீ வரை இருக்கும். இதன்
ஓலை
மட்டை
மூன்று
மீட்டர் வரை
நீளம்
கொண்டு
சற்றே
வளைந்தவாறு இருக்கும். இதன்
மட்டையிலும் இலைகளின் முனையிலும் முட்கள் கொண்டிருக்கும். இந்த
மரங்களில் ஆண்மரங்கள் உண்டு
ஆண்மரங்கள் மஞ்சள்
கலந்த
வெண்மையாக பூக்கள் பூக்கக்கூடியன. இதன்
காய்கள் மஞ்சள்
நிறத்துடன் இருக்கும் பழுக்க
ஆரம்பித்த பிறகு
சிவப்பு வண்ணமடைந்து இறுதியில் பழுப்பு நிறத்தை அடையும். இதன்
பழங்கள் உண்ணத்தக்கது.
உயிர்ச்சத்து இ (விட்டமின் இ)
இதனுடைய வேதியியல் பெயர் டொக்கோஃபெரோல், டொக்கோ ட்ரையீனால் என்பதாகும். உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், இரத்தம் உறைதலைத் தடுக்கும். கண்புரையைத் தடுக்கும்.
இது எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், கொட்டைகள், பழங்கள் போன்றவற்றில் காணப்படுகின்றது. இதனுடைய குறைபாட்டால் நரம்பியல் கோளாறு, தள்ளாட்டம், இரத்தமுறிச்சோகை ஆகியவை
ஏற்படும். இதனை
அதிகமாக உட்கொள்ளும்போது மூளை
நரம்புகளில் இரத்த
கசிவினை உண்டாக்கும்.
ஒரு
நாளைக்கு தேவையான அளவு
15 மில்லிகிராம் ஆகும்.
வரலாற்றுச் சிந்தனை
இந்தியாவின் கிளி
என்று அழைக்கப்படுபவர் அமிர்குஸ்ரு.
தன்னம்பிக்கை கதை - ஒப்புக் கொண்டபடி செய்
வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு
விடுதி
நடத்திவந்தாள். காலையில் அவள்
விடுதியில் கிடைக்கும் அப்பம்
மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த
விடுதிக்கு வரும்
அனைவரும் அதனை
விரும்பிக் கேட்டுவாங்கி உண்பர்.
அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும்
துணைப்
பொருள்களாக அளிப்பாள்.
ஒரு சமயம்
சர்க்கரை விலை
சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிறமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட
அவள்
விரும்பவில்லை. எனவே,
‘அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை’
எனக்
கூற
விரும்பினாள்.
கடைக்கு வழக்கமாக வந்து
சாப்பிடும் ஒருவரை
அழைத்து. ‘அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’
என
அறிவிப்பு அட்டை
ஒன்றை
எழுதிவரச் சொன்னாள். அவர்
அதன்
அடிப்படையில்
“இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
“இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
காலையில் சாப்பிடவந்த ஒருவர்
ஓர்
அப்பம்
வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர்
அப்பம்
கேட்டார். அவள்
இரண்டாவது அப்பம்
கொடுத்தாள். அவர்
“அம்மா!
அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு”
எனக்
கேட்டார்.
அம்மூதாட்டி “அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று
கேட்டாள். அப்பம்
வாங்கியவர் “பார்த்தேன்! படித்தேன்! அதன்
பிறகுதான் சர்க்கரை கேட்டேன்” என்று
கூறினார்.“அதைப்
படித்துவிட்டுமா கேட்கிறீர்?” என்றாள் அம்மூதாட்டி.“ஆமாம்...
அறிவிப்பு அட்டையில் என்ன
எழதி
இருக்கிறது? ‘இன்று
முதல்
அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’
என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான்
சர்க்கரை கேட்கிறேன்” என்றார்.
“ஐயா! அப்படியா பொருள்
கொள்கிறீர்கள்? சரி!
உங்களுக்கு இன்று
சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை
அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி
விடுகிறேன்” என்று
கூறினாள்.அறிவிப்பு அட்டை
எழுதியவரை அழைத்தாள். ஐயா,
அறிவிப்பு அட்டையில் “அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை”
என
எழுதிவிடுங்கள் என்றாள். அந்த
நாள்
முதல்
அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி
விற்கத் தொடங்கினாள். காலைச்
சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.பகலுணவு வழங்குவதில் ஒரு
புதிய
சிக்கல் ஏற்பட்டது.
அன்று மதியம்
வழிப்போக்கன் ஒருவன்
அந்த
உணவு
விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து
பணம்
கொடுத்துவிட்டு, “அம்மா,
எனக்கு
அதிகமான பசியாக
இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு
சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு”
என்றான்.
மூதாட்டி “நீ
கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு
சோறு
போடுகிறேன்” என்று
கூறினாள். ஒரு
வாழை
இலையை
விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு
சாதம்
மட்டும் உருட்டி அவன்
இலையில் போட்டாள்.
அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், “இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்?” என்றான்.“நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ!” என்று சொன்னாள்.
அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், “இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்?” என்றான்.“நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ!” என்று சொன்னாள்.
“அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான்
கொடுத்த ஐந்து
பணத்தைத் திருப்பிக் கொடு,
நான்
போகிறேன்” என்றான் வழிப்போக்கன். உணவு
விடுதிக்கு உரியவள் ஐந்து
பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள்.
வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச்
சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி
முறையிட்டான். நீதிபதி உணவு
விடுதி
நடத்தி
வந்த
மூதாட்டிக்கு ஆள்
அனுப்பி அழைத்துவரச் செய்தார்.
விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, “ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன்” என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள்.
விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, “ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன்” என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள்.
அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு,
நீதிபதி மரியாதை ராமன்
புன்னகை தவழ,
“அம்மா!
நீ
என்ன
ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு
சோறு
போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ
போட்ட
இந்த
சோற்றுப் பருக்கை ஒன்றே
ஒன்றாவது இருக்கிறதா பார்!
ஆகவே,
வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது
எலுமிச்சங்காய் அளவு
பருமன்
உள்ள
ஒரு
சோற்றுப் பருக்கையையாவது போடு”
என்று
தீர்ப்பு வழங்கினார்.
சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு
விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி “அந்த
அளவு
பருமனாகும் சோற்றுக்கு உரிய
அரிசிக்கு நான்
எங்கே
போவேன்?
என்று
கூறி,
வழிப்போக்கன் கொடுத்த ஐந்து
பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!
செயலி - Phonics Sounds For Kids
இணையம் அறிவோம்
புன்னை | ஓவியம் வரைவது எப்படி –
No comments:
Post a Comment