அறிவுக்கு விருந்து – 17.6.2019 (திங்கள்)

                                     குறளறிவோம்-  8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வரதராசனார் உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
Translation:
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

சிந்தனைக்கு 

ஒழுக்க நெறி கந்தலாடை உடுத்தியவனுக்கும், பட்டாடை உடுத்தியவனுக்கும் ஒரே மாதிரியானதுதான்.

தமிழ் அறிவோம் 

     ஒத்தச் சொற்கள்
                        அறம்                     தர்மம்
                        அறம்            -           அறநெறி

பழமொழி

 * குதிரை நல்லது சுழி கெட்டது  *

விளக்கம் – குதிரை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் உடலில் சுழி சரியில்லையென்றால் அதனை யாரும் வாங்க மாட்டார்கள்.

            அதுபோலவே ஒருவன் நல்ல திறமைசாலியாகவும் பலசாலியாகவும் இருந்தாலும் அவன் குணம் சரியில்லாவிட்டால் நம் அருகில் வைத்துக்கொண்டு இருப்பது நமக்கு ஆபத்தாம்.

Enrich your   vocabulary
             
·         Bodyguard                 -           மெய்க்காப்பாளன்
·         Bogus                         -           பொய்யான
·         Boil                              -           கட்டி, கொதிக்கவைத்தல்
·         Bold                            -           தைரியமான
·         Bolt                             -           தாழ்ப்பாள்
·         Bomb                          -           எறிகுண்டு
·         Bomber                      -           குண்டுவீசும் விமானம்
·         Bonafide                     -           உண்மையான
·         Bond                           -           பத்திரம்
·         Boody                         -           மூடன்

Opposite Words

Much               x          Little
Morning          x          Evening

Proverb

*If you want something done right, you have to do it yourself*

Meaning:  Don’t depend on someone else to do a good job; do it yourself.
Example : “I asked my roommate to wash the dishes, but they ended up super filthy! I guess it’s true what they say: if you want something done right, you have to do it yourself.”

இனிக்கும் கணிதம்



 




விடை = 126

அறிவோம் அறிவியல் 
மனிதனைப் போல குறட்டைவிட்டுத் தூங்கும் விலங்கு - யானை

தினம் ஒரு மூலிகை   - அக்ரூட்

அக்ரூட் அல்லது அக்கருட்டு அல்லது அக்கரோட்டு அல்லது அக்குரோட்டுஎன்பது யுக்லன்சு ரிசியா லின் (Juglandaceae regia linn) வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.

மருத்துவ ப் பயன்கள்
அக்ரூட் எடை மேலாண்மைஉணவில் ஒரு பகுதியாக அமைக்க முடியும்தூக்கத்தைத் தூண்டுகிறதுஉங்கள் முடிக்கு மிகவும் சிறந்தது:  இதய நோய்களைத் தடுக்கிறதுநீரிழிவைத் தடுக்கிறது.

உங்கள் தோலை ஒளிரச் செய்கிறது: அக்ரூட்டில் தோலை இலவச உடற்கூறுகளின் சேதத்திலிருந்து தடுக்கும் மற்றும் சுருக்கங்கள், வயதாகும் அறிகுறிகள் ஆகியவற்றைத் தடுக்கும் வைட்டமின் பி மற்றும் ஆண்டியாக்சிடேன்டுகள் நிறைந்துள்ளன.

டிமென்ஷியாவைத் தூர வைக்கிறது. கணைய புற்றுநோயைத் தடுக்கிறது ஒரு புதிய ஆய்வு. நீங்கள் நீண்ட காலம் வாழ உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்தது. மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

உயிர்ச்சத்து பி12  (விட்டமின் பி12)

இதனுடைய வேதியியல் பெயர் சையனோ கோபாலமைன். இது மூளை மற்றும் நரம்பு செயல்பாட்டிலும், இரத்த உருவாக்கத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது பொதுவாக விலங்குகளிடமிருந்து பெறப்படுகிறது. இறைச்சி, ஈரல், நட்சத்திரமீன், பால் மற்றும் பால்பொருட்கள், முட்டை ஆகியவற்றில் காணப்படுகிறது.

இதனுடைய குறைபாட்டினால் கடுமையான பாதிப்புகளை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படலாம். மனச்சோர்வு, அயற்சி, ஞாபகமறதி, தற்கொலை எண்ணங்கள் போன்றவையும் இதன் குறைபாடால் ஏற்படலாம். ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 0.0024 மில்லிகிராம்ஆகும்.


வரலாற்றுச் சிந்தனை 

       இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?  
         காண்டாமிருகம், யானை, புலி.

தன்னம்பிக்கை கதை

உங்களை நம்புங்கள்
தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித க்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.
சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது, பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.
உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள் இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்.
தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்.
வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கமாக வையுங்கள்.
இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான். நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள் இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்.

இணையம் அறிவோம் – பொதுஅறிவு தகவல்கள் அடங்கிய தளம்  https://upscgk.com/

Jolly Phonics Lessons
https://play.google.com/store/apps/details?id=com.gilbertjolly.teachphonics.teachers&hl=en_US

முல்லை - கல் இவர் முல்லை | ஓவியம் வரைவது எப்படி




No comments:

Post a Comment