அறிவுக்கு விருந்து – 4.6.2019 (செவ்வாய்)


சிந்தனைக்கு
            நீ சுமக்கின்ற நம்பிக்கை
            நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்

தமிழ் அறிவோம் 
 
ஒத்தச் சொற்கள்
                        அணை        -           வரம்பு
                        அணை        -           கட்டியணை         

*பழமொழி*  
* உரலில் தலையை விட்டு விட்டு உலக்கைக்குப் பயப்படலாமா? *

விளக்கம் 

ஒருவன் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ  ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுவிட்டு   அதை எதிர் நோக்கிப் போராடாமல் அஞ்சக்கூடாது. துணிந்து நின்று போராடி வெற்றி கொள்ள வேண்டும்.

*PROVERB*
*Don’t bite the hand that feeds you*

MEANING :  Don’t make someone angry or hurt someone who is helping you or paying for you

EXAMPLE : “You had a fight with your boss? Are you stupid? Don’t bite the hand that feeds you.”

தினம் ஒரு மூலிகை    ----  நொச்சி

நொச்சியில் (Vitex negundo) வெண்ணொச்சி. கருநொச்சி, நீலநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. ‘ வெண்ணொச்சி வெள்ளை நிறக் கிளைகளுடன் காணப்படும். இது மரமாக ஆற்றோரங்களில் சுமார் 30 அடி உயரம் வளரக்கூடியது. நொச்சியில் கிளை இல்லாத மார்கள் ஆறு ஏழு அடி உயரங்கூட வளரும். பழங்காலத்தில் இந்த நொச்சி மார்களை வெட்டிப் படல் கட்டி வீடுகளுக்கு வேலி அமைத்துக்கொள்வர். நொச்சிப்பூ நீண்ட கொத்தாக மயிலை நிறத்தில் பூக்கும். இதன் இளமையான மார்களைக் கொண்டு மண் சுமக்க உதவும் தட்டுக்கூடைகள் பின்னிக்கொள்வார்கள்.
 நொச்சிப்பூ சூடி மதிலைத் தாக்கும் போர் நொச்சித்திணை என வகுக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

வெண்ணொச்சியானது சிறுமர வகையைச் சார்ந்தது. இது மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளைகலாக, ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். நீலமணி நிறத்தில் நொச்சியின் மலர் இருக்கும்.

மருத்துவப் பயன்கள்

இயற்கை மருத்துவத்தில் நொச்சி பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, சருமப் பிரச்சனைகளுக்குநிவாரணம் அளிக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. இயக்குநீர் குறைபாடுகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு, நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் தடுக்க முடியும்.

Enrich your   vocabulary

·        Sickle          ....      கதிர் அரி வாள்
·        Slege           ......    முற்றுகை 
·        Shrink         .....     சுருங்குதல் 
·        Shrub          .....     புதர்
·        Silence        ...       அமைதி similar......ஒரே  மாதிரி   தோற்றம் 
·        Sufficient    ....      போதுமானது 
·        Sort            ...       பிரித்தல் 
·        Magnificient.......  மிகப்பெரிய 
·        Miser          ....      கருமி 


இனிக்கும் கணிதம்



அறிவியல் அறிவோம்

“அனஸ்தீசியா” (உணர்வு நீக்கி) மருந்துகளை ஆலிவர் ‘வென்டால் ஹோம்ஸ்’ என்ற விஞ்ஞானிதான் முதன்முதலில் தயாரித்தார்.  


உயிர்ச்சத்து பி  (விட்டமின் பி)

நீரில் கரையக்கூடிய எட்டுவகை உயிர்ச்சத்துக்கள் அடங்கிய கூட்டுக்குழுமம் ஆகும். வளர்சிதைமாற்றங்களின் தேவைக்கு உயிர்ச்சத்து பி குழுமம் இன்றியமையாத பங்கினை வழங்குகின்றது. ஒவ்வொரு "பி" உயிர்ச்சத்தும் தம்முடன் ஒரு சிறப்பு எண்ணைக் கொண்டுள்ளது (.கா.: பி1, பி6, பி12 ....).

வைட்டமின் ‘B’ ன் பொதுவான பயன்கள்
  • உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.
  • எலும்பு, தசை இவற்றின் உறுதிக்கு வைட்டமின் ‘B’ பயன்படுகிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.
  • மூளையின்சுறுசுறுப்புக்கும், செயல்பாட்டிற்கும்வைட்டமின் ‘B’ அதிகம்உதவுகிறது.
  • நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி செயல்பட வைக்கிறது. இரத்த சோகை எனும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
  • உணவு செரிமானத்தில் அதிக பங்கு வகிக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீர்களை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. அறிவு வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் அதிகம் உதவுகிறது.
வரலாற்றுச் சிந்தனை

        மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார்.

தன்னம்பிக்கை கதை,
 
*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்

சார் பின்னாடி போய் உட்காருங்க

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!! 
 
*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,
உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*
 
*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!* 

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*. 

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!* 

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?* 

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

 

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.*


No comments:

Post a Comment