அறிவுக்கு விருந்து – 25.6.2019 (செவ்வாய்)

அறிவுக்கு விருந்து – 25.6.2019  (செவ்வாய்)
குறளறிவோம்-  14 (வான்சிறப்பு)

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: மழை என்னும் வருவாய் வளம்  குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மு.வரதராசனார் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
Translation:
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.
Explanation:
   If the abundance of wealth imparting rain diminish, the labor of the plough must cease
சிந்தனைக்கு
நடுக்கடலில் கப்பல் மாலுமிக்குத்தான் சொந்தம். 
தமிழ் அறிவோம்

     ஒத்தச் சொற்கள்
                        அபயம்        -           அடைக்கலம்
                        அபயம்        -           ஏதம்
                        அபயம்        -           கேடு
பழமொழி 

* அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு*

விளக்கம் : சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும். எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.


Enrich your   vocabular
  • ·         Seedling....முளைத்த பிஞ்சு செடி 
  • ·         Segregate.....பிரித்தல் 
  • ·         Seize.....பிடுங்குதல் 
  • ·         Sensible.....அறிவுள்ள 
  •       Senate.....நிர்வாகக்குழு 
  • ·         Segment..பகுதி 
  • ·         Senior....மூத்தவர் 
  • ·         Selfish....சுயநலமான
  • ·         Semester.....அரையாண்டுப்பகுதி 
  •       Sediment......கசடு 


Opposite Words
            Health             x          Disease
            Healthy           x          ill 

மொழிபெயர்ப்பு
ASPARAGUS                   தண்ணீர்விட்டான் கிழங்கு
BEET ROOT                     செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு

Proverb
* Don’t judge a book by its cover*
Meaning :  This proverb teaches you not to make judgments about other people because of how they look or dress. A book with a boring or plain cover could be amazing. The same is true with people. A person might look like an athlete or fool, but there is probably a lot more to them than clothes suggest.

இனிக்கும் கணிதம்

வியப்பூட்டும் ராமானுஜரின்மேஜிக் ஸ்கொயர்எனப்படும் மாயாஜால சதுரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்த மேஜிக் ஸ்கொயரில் வியப்பு என்னவென்றால், கட்டத்தில் உள்ள எண்களை நீள்வாக்கிலோ, குறுக்குவாக்கிலோ கூட்டினால் 139 என்ற கூட்டுதொகை கிடைக்கும். மேலும் நான்கு மூலைகளில் உள்ள எண்களை கூட்டினாலும், நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையை கூட்டினாலோ கூட்டு எண் 139 தான் வரும். அதுமட்டுமல்லாமல் அந்த கட்டங்களில் உள்ள எண்களை நான்கு சதுரமாக பிரித்து அவைகளை கூட்டினாலும் அதன் கூட்டுத் தொகை 139. ஆச்சரியம் தரும் இந்த கணித சதுரம், ராமானுஜரின் மேஜிக் ஸ்கொயர் என்று கணித உலகில் போற்றப்படுகிறது.

இதில் மிகவும் சுவாரசியமான, அதே சமயம் கவனிக்க வேண்டிய கூடுதல் தகவல் என்னவென்றால் அந்த கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள முதல் வரிசையில் இருக்கும் 22, 12, 18, 87 என்ற எண்கள் ராமானுஜரின் பிறந்த நாளை (22–12–1887)  காட்டுகின்றன.

அறிவோம் அறிவியல்
  கலிலியோ இவரது இயற்கையை பற்றியான பல கோட்பாடுகளை நாம் சிறு வயது முதலே படித்துள்ளோம்.அதோடு ,இவர் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கியை கண்டுபிடித்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக விளங்கினார்.

அறிவியல் துளிகள்
  
ப்பான்பூச்சி லையின்றி த்து நாள் ரை உயிர் வாழும்.

தினம் ஒரு மூலிகை   - எருக்கு  

எருக்கன் அல்லது எருக்கு (Calotropis)மூலிகைமருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. கடும் வறட்சியிலும் வளரு தன்மை கொண்டவை எருக்கன் செடிகள். இச் செடிகளில் பல வகைகள் உண்டு, என்றாலும் மிகுதியாகக் காணப்படுவது கத்தரிபூ நிற (நீல) எருக்கம் செடி. அதற்கடுத்து வெள்ளெருக்கு செடி ஆகும். விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன் படுத்துகின்றனர்.
எருக்கன் செடி ஆதி மனிதனின் காலத்திலிருந்து பயன்பாட்டு பொருளாகவும் திகழ்ந்து உள்ளது. ஆதி மனிதன் எருக்கம் நாரைக் கயிறாக பயன்படுத்தியுள்ளான். எருக்கம் நார் உறுதியானது என்பதால் அதிகமாக வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் ஆகியவற்றுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளது. பஞ்சு தலையனை பயன்படுத்தும் முன்னர் எருக்கம் காயிலுள்ள பஞ்சை தலையணைக்காக பயன்படுத்தியுள்ளனர்.
மருத்துவ குணங்கள்
இது மருத்துவ குணம் கொண்டதாக உள்ளதால் சித்த மருத்துவத்தில் சுவாச குடோரி மாத்திரை என்பது எருக்கம் பூவின் மூலம் தயாரிக்கப்பட்டு சளி, இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு வழங்கப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தவிருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்துகிறது. இது பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளையும் நீக்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணமாகும். திசுக்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கிறது.
புற்றுநோயை எதிர்க்கும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.
வரலாற்றுச் சிந்தனை   தேசியப் பாரம்பரிய விலங்கு!
இந்திய வரலாற்றிலும், கலாசாரத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் "யானை'யே இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காகக் கருதப்படுகிறதுஆசிய யானைகளில் 60 சதவிகிதமும் இந்தியாவிலேயே உள்ளன.

தன்னம்பிக்கை கதை  -  விமானம் தோன்றிய கதை

சகோதரர்கள் இருவர் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால், தோல்வியே மஞ்சியது. ஒரு நாள் அவர்களில் ஒருவன் லைப்ரரிக்கு சென்றான். அங்கு ஒரு சுவாரசியமான கதை ஒன்றைப் படித்த அவனுக்கு, பொறிதட்டியது. அந்தக் கதையில் ஒரு மனிதன் இறக்கைகள் எதுவும் இல்லாமல் காற்றாடி போன்ற ஒன்றின் துணையால் வானில் பறப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதைப்படித்த உடனே தானும் அவ்வாறு ஏன் பறக்கக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே சிந்தனையுடன் வந்து தனது சகோதரனிடம் அந்த எண்ணத்தைத் தெரிவித்தான். இருவரும் விண்ணில் பறப்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.
கடுமையாக முயற்ச்சிகளுக்குப் பின்னர் வானில் பறக்க ஒரு எந்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதன் உதவியால் 1903-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி வெற்றிகரமாக வானில் பறந்து சாதனை படைத்தனர். தங்களுடைய விடாமுயற்சியால் விந்தை புரிந்த அவர்கள் தான்ரைட் சகோதரர்கள்.”

செயலி -    English Speaking Practice 

https://play.google.com/store/apps/details?id=com.talkenglish.practice&hl=en_US

 

இணையம் அறிவோம்  -  https://www.nammakalvi.org/#welcome


பூளை பூ  | ஓவியம் வரைவது எப்படி –
 



No comments:

Post a Comment