அறிவுக்கு விருந்து – 27.6.2019 (வியாழன்)
குறளறிவோம்- 16 வான்சிறப்பு
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பசும்புல் தலைகாண்பு அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை
காண்பது அரிதான
ஒன்றாகும்.
மு.வரதராசனார் உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண
முடியாது.
Translation:
If from the clouds no drops of rain
are shed. 'Tis rare to see green herb lift up its head.
Explanation:
If no drop falls from the clouds,
not even the green blade of grass will be seen.
சிந்தனைக்கு
மேதை எனும் விளக்கு வாழ்க்கை எனும் விளக்கைவிடச் சீக்கிரமாக
எரிகிறது.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
ஆபரணம் - நகை
ஆபரணம் - இழை
ஆபரணம் - அணி
பழமொழி
* கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. *
பொருள்: கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்: கழுதைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.
Enrich your vocabulary
·
Scenary.....இயற்கைக்காட்சி
·
Scent.... நறுமணம்
·
sceptre.....செங்கோல்
·
Scheme......திட்டம்
·
Scholar....கற்றறிந்தவர்
·
Scholarship....உதவிப்பணம்
·
Scoff....வெறுப்பு காட்டுதல்
·
Scold.....திட்டுதல்
·
Scope... nokkam
·
scorch......கொப்புளம்
Opposite Words
Presence
x Absence
Present x Past
மொழிபெயர்ப்பு
BOTTLE GOURD – சுரைக்காய்
BROCCOLI – பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS – களைக்கோசு
BROCCOLI – பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS – களைக்கோசு
Proverb
* Too many cooks spoil the broth
*
Meaning: This is a well-known experience—a lot people all
trying to work in a kitchen around a small table or stovetop will make a
mess and ruin the food. This proverb talks about the trouble of too many
people trying to do the same thing at once.
இனிக்கும் கணிதம்
ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில்
30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?
30 அடிக்கு 10 தூண்கள் மேலும்
முதலில் நடப்பட்டுள்ள
தூணையும் சேர்த்து
11 தூண்கள்.
அறிவோம் அறிவியல்
இவர் தான்
முதன்
முதலில் ஒரு
இடத்திலிருந்து தொலைவில் உள்ள
இன்னொரு இடத்திற்கு தகவல்களை பரிமாற
போனைக்
கண்டுபிடித்தவர். .
இவர் வானியல் துறையிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வானியல் துறையிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் துளிகள்
சராசரியாக
ஒரு
மனிதன் 4850 வார்த்தைகளை
24 மணி நேரத்தில்
பயன்படுத்துகின்றான்.
தினம் ஒரு மூலிகை – அறுகு
வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்தாக இது காணப்படுகிறது. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர மருந்தாக உதவுகிறது
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
- மாம்பழம்
100 கிராம் மாம்பழத்தில், 765
இன்டர்நேஷனல் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது. இது ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 25 சதவிகிதம். வைட்டமின் ஏ, பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.
மாம்பழத்தில் உள்ள சிலவகையான என்சைம்கள், புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்தாக மாற்றும் பணியை ஊக்குவிக்கிறது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலையும் போக்கும்.
மாம்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாமிரம் உள்ளதால், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து நிறைந்தது. எனவே, பெண்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
வரலாற்றுச்
சிந்தனை
தன்னம்பிக்கை கதை - பிடிவாதம்
ரேவதி
நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும்,
பணிவாகவும் நடந்து கொள்வாள். ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை.
ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப்
பொருள் எது கேட்டாலும் உடனே
வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.
நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். வெகு நாட்களாகக் கேட்டுக்
கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை
அன்றே வாங்கித் தரவேண்டும் என்று அடம்பிடித்தாள்.
ரேவதியின் அம்மாவும், அப்பாவும் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு
வரும்போது நான் கேட்ட கைகடிகாரம்
இங்கே இருக்கணும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று கட்டளையிடுவதுபோல் கூறிவிட்டுச் சென்றாள்.
ரேவதியின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்தனர்.
மாலையில் பள்ளி முடிந்ததும் ரேவதி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
மாலையில் பள்ளி முடிந்ததும் ரேவதி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“அப்பா உங்க கால் ரொம்ப
அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம
வேலைக்குப் போறீங்க?” என்றாள். “நீதான், எல்லாரும் டூர் போறாங்க... என்னை
அனுப்ப மாட்டீங்களான்னு கேட்ட இல்ல. நான் லீவு போடமா
வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம்
தர முடியும்.’ என்றார்.
“இல்லேப்பா நான் டூர் போகலை.
அடுத்தவாட்டி போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா”
என்றாள் அந்த வீட்டுச் சிறுமி.
“இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். பண்ணைக்காரர் தோடத்திலே வேளைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒருவாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும்” என்றாள் அந்த சிறுமியின் அம்மா.
“இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். பண்ணைக்காரர் தோடத்திலே வேளைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒருவாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும்” என்றாள் அந்த சிறுமியின் அம்மா.
இதை பார்த்துக் கொண்டிருந்த
ரேவதி ஆச்சிரியப்பட்டாள். ‘ஒரு சிறுமி தன்
அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கிறாள். ஒரு அம்மா, தன்
குழந்தைக்காகவும், கணவருக்காகவும் வேலைக்குப் போகிறேன் என்கிறார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இனி நாமும் அம்மா,
அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது’ என்று எண்ணினாள்.
ரேவதி வீட்டிற்குச் சென்றதும் அவளது பெற்றோர் என்ன சொல்லப்போகிறாளோ என்று
தயங்கிக் கொண்டிருந்தனர். “ரேவதி...” என்று அவர்கள் வாயெடுக்க, “அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா அடுத்த பொறந்த நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று கூறியவளைப் பார்த்து வியப்படைந்தனர் அவளது பெற்றோர்.
தனது பிடிவாத குணத்தை
அழித்த மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் ரேவதி. முடியும்.!!!
No comments:
Post a Comment