அறிவுக்கு விருந்து – 28.6.2019 (வெள்ளி )

அறிவுக்கு விருந்து – 28.6.2019  (வெள்ளி )
குறளறிவோம்-  17     வான்சிறப்பு


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
கலைஞர் மு. கருணாநிதி உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
மு.வரதராசனார் உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
Translation:
If clouds restrain their gifts and grant no rain, the treasures fail in ocean's wide domain.
Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

சிந்தனைக்கு
வேலை ஒரு சுமையல்ல.  அது ஒரு இனிய அனுபவம்.
தமிழ் அறிவோம் 

     ஒத்தச் சொற்கள்
                        ஆணை       -           கட்டளை
                        ஆணை       -           ஏவல்
                        ஆணை       -           உத்தரவு
                        ஆணை       -           சத்தியம்
                        ஆணை       -           பணிப்பு

பழமொழி

* ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்*
பொருள் ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

Enrich your   vocabulary

·         Taboo              .....       தடை செய்யப்பட்ட பொருள் 
·         Tabulate          ....        அட்டவணைப்படுத்து 
·         Tactics             ....        வெற்றிக்கான வழிமுறைகள் 
·         Tackle              ....        எதிர்த்துபோராடு 
·         Tact                 ....        சாமர்த்தியம் 
·         Tacit                ....        மௌனமாக                
·         Tadpole           ...         தலைப்பிரட்டை 
·         Tag                  ...         முகவ ரிச் சீட்டு 
·         Taint                ...         இழுக்கு 
·         Tale                 ....        kadha

Opposite Words 

            Out                  x          in
            Outside           x          inside

மொழிபெயர்ப்பு
CABBAGE – முட்டைக்கோசு, முட்டைக்கோவா
CARROT – மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
CAULIFLOWER – பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
 
Proverb
* You can’t have your cake and eat it too*
Meaning : If you eat your cake, you won’t have it anymore, will you? So you can’t do both. This proverb is about having two opposite desires, and how it’s impossible to get both. Its meaning is similar to the proverb, “You can’t have the best of both worlds.”

இனிக்கும் கணிதம்

ஒரு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் முழுவதும் தாமரைப்பூக்களால் நிரம்பி வழிகிறது. எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள்பாதி குளத்தை நிரப்பி இருக்கும் ?

தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது என்பதால் 29 நாட்களில் பாதி குளம் நிரம்பினால் 30 வது நாளில் இரட்டிப்பாகி முழு குளமும் பூக்களால் நிரம்பியிருக்கும்.

அறிவோம் அறிவியல்
 
ஜேம்ஸ் வாட் நீராவி என்ஜினை கண்டுபுடித்து இயந்திர துறையில் பெரும் சாதனை புரிந்தவர் ஜேம்ஸ் வாட்.  இவருக்கு நம்ம சார்பில் கோடான கோடி நன்றி.
அறிவியல் துளிகள்
            கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600.


தினம் ஒரு மூலிகை – இஞ்சி (Zingiber officinale)  
உணவின் ருசி கருதி இந்தியா,சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.
பெயர்தோற்றம் : இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.
மருத்துவ குணங்கள் : இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
·         இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.
·         இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.
·         கடுமையான கார ருசி உடையது.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பலா
ஆற்றல், நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழம் இது. 100 கிராம் பலாப் பழத்தில், 95 கலோரிகளே உள்ளது. இது மிகவும் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும்.
 நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது.
குறைந்த அளவில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் பி உள்ளிட்ட ஃபிளவனாய்ட் உள்ளதால், பார்வைத் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.  இயற்கையான முறையில் கிடைக்கும் இந்த வைட்டமின் மற்றும் கரோட்டின்கள், நுரையீரல் மற்றும் சில வகையான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.
பலாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.100 கிராம் பலாப்பழத்தில், ஒருநாளுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் உள்ளது. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பி5, நியாசின், ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் போன்றவை இதில் அதிக அளவில் உள்ளன.
தாது உப்புக்களில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
வரலாற்றுச் சிந்தனை   
            இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர் வல்லபாய் படேல்.

தன்னம்பிக்கை கதை  -  கழுகும், நரியும்

வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான்.
அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று அன்புடன் வளர்த்தார்.
இறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது. அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, ‘ஏற்கனவே உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடுயும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரிய வருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக அப்படிச் செய்தாய்என கழுகைப் பார்த்துக் கேட்டது.
அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்எனப் பதில் கூறியது கழுகு.
கதையின் நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கு அழகு.

செயலி -  Speech to text converter- voice typing app

இணையம் அறிவோம்  -  https://www.ticklinks.com/

பீரம் மலர்   | ஓவியம் வரைவது எப்படி?



No comments:

Post a Comment