அறிவுக்கு விருந்து – 18.6.2019 (செவ்வாய்)


குறளறிவோம்-  9

Image result for திருவள்ளுவர்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வரதராசனார் உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
Translation:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
சிந்தனைக்கு
ஒழுக்கம் மேன்மையைத் தருவதால் அது உயிரைவிட முக்கியம்.

தமிழ் அறிவோம் 
     ஒத்தச் சொற்கள்
                        அறிவு           -           நுட்பம்
                        அறிவு           -           மதி   
                        அறிவு           -           ஞானம்
                        அறிவு           -           திறன்

பழமொழி
 *அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை*

விளக்கம் : உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக வாய்ப்பு இருப்பதால் அடிக்கடி ஏதும் பிரச்சனை வருவதையும் அன்றாடம் நாம் காணலாம்.
அதே போலவே, எப்படிப்பட்ட உறவானாலும் கொஞ்சம் மரியாதை கொடுத்து நடத்தினால் பிரச்சனை வராமலும் நெருங்கி வர வர மரியாதை இல்லாமல் போவதால் சில நேரம் பிரச்சனை வருவதையும் காணலாம்.
Enrich your   vocabulary
             
·         Brigade           -           படை
·         Brigand           -           கொள்ளைக்காரன்
·         Brighten         -           பிரகாசமான
·         Brim                -           விளிம்பு      
·         Brilliant           -           புத்திகூர்மையான
·         Brimstone      -           கந்தகம்
·         Brink               -           விளிம்பு
·         Brisk                -           சுறுசுறுப்பான
·         Bristle             -           தடிப்பான உரோமம்
·         Brittle              -           முறியக்கூடிய

Opposite Words

Narrow            x          Broad
Nasty               x          Nice

Proverb
* Keep your friends close, and your enemies closer*

Meaning          :If someone is your enemy, treat them like a friend so you can be ready if they ever try to betray you.
Example          :“We don’t trust each other, but we have to be nice to each other because we work for the same company. I’m worried about him stealing my promotion, so I’m going to keep being nice to him. Keep your friends close, but your enemies closer, and all that.”

இனிக்கும் கணிதம்

          2+2            =       8
          3+3            =       18
          5+5            =       50
6+6             =       72
10+10         =       ?

விடை – 200

அறிவோம் அறிவியல்  
     சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து, சாதனை புரிந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன்






தினம் ஒரு மூலிகை   - அசோகு

    அசோகு அல்லது அசோகம் அல்லது ஆயில (Ashoka tree; Saraca asoca) என்பது பபசியா குடும்பத்தைச் சேர்ந்த கசல்பினியோடே துணைக் குடும்பத் தாவரமாகும். இம் மரம் இந்திய துணைக் கண்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புபட்டது.

அசோக மரம் மழை அதிகம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. விந்திய மலைத் தொடரின் தெற்கு மத்திய பகுதிகளில் (ஆந்திர, கர்நாடக, நீலகிரி, மத்திய மேற்கு தொடர்ச்சி மலை) இவைகள் பரவிக் கிடக்கின்றன.

அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த இலைகள் , இனிய நாற்றம் உடைய மலர்கள், அசோக மரத்தின் சிறப்பு அம்சங்கள். எபோழுதும் பச்சை பசேல் என்று , சிறிய அடர்த்தியான இலைகளை கொண்டவை.

இதன் பூ பூக்கும் காலம் சுமார் (பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை). அசோக மலர்கள் கனமாகவும் கொத்து கொத்துதாக இருக்கும். இதன் நிறம் ஆரஞ்-மஞ்சள்; காயக்காய சிவப்பு நிறமாக மாறும்.

இவை காட்டு மரம், அனால் அழிந்து போகும் கட்டதில் உள்ளது. தான்தோணியாக தோன்றுவது அரிதாகவே உள்ளது. ஆனால் தனித்து நட்ட மரங்கள் இப்பவும் மத்திய, கிழக்கு ஹிமாலய அடிவாரத்தில் ,மற்றும் மும்பை வடக்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.

சில சாதி(வகை) மரங்களே உள்ளன. ஒரு வகை, பெரிதாகவும் பரந்தும் இருக்கின்றன. இன்னொரு வகையான குழாய் வடிவம் கொண்ட மரங்கள் அதிகமாக இப்பொழுது சாகுபடி செய்யபடுகின்றன.


மருத்துவ குணங்கள்
ரத்தபேதி, சீதபேதி, மாதவிலக்குக் கோளாறுகள், சர்க்கரை நோய், பித்த நோய்கள், இரத்த அழுத்தம், கருப்பைக் கோளாறுகள் (அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள்), சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளையும் அசோக மரம் குணமாக்கும்.


உயிர்ச்சத்து சி  (விட்டமின் சி)

இதனுடைய வேதியியல் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். இது உடலின் சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியமானது.இது பழங்கள், காய்கறிகள், ஈரல், முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் இருக்கிறது.
இதனுடைய குறைபாட்டால் ஸ்கர்வி என்னும் ஈறுகளில் ஏற்படும் இரத்தகசிவு, பற்சிதைவு, சருமம் மற்றும் கேச வறட்சி, இணைப்பு திசுக்களில் வலி, அனீமியா ஆகியவை ஏற்படும்.

இதனை அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகக்கற்கள், பற்களில் எனாமல் இல்லாமல் போதல் ஆகியவை உண்டாகும்.

ஒரு நாளைக்கான தேவை 90 மில்லிகிராம் ஆகும்.


வரலாற்றுச் சிந்தனை

         இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவர் ராஜா ராம் மோகன் ராய்


தன்னம்பிக்கை கதை
கவனத்தைச் சிதறவிடாதீர்கள் 
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.
வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.
எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்.

"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."
"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."
"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."
"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."

செயலி 

Phonics Songs for Kids 

https://play.google.com/store/apps/details?id=com.andromo.dev713334.app773558&hl=en_US

இணையம் அறிவோம்

பாலை | ஓவியம் வரைவது எப்படி 

https://www.youtube.com/watch?v=Q9-wU0cEPgM


No comments:

Post a Comment