குறள் அறிவோம் -1
அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிகலைஞர் மு.கருணாநிதி உரை:
பகவன் முதற்றே உலகு.
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்மு.வரதராசனார் உரை:
உயிர்களுக்கு முதன்மை.
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.
சிந்தனைக்கு
சினத்தை
அடக்கினால் சிகரமாய் உயரலாம்.
இல்லையேல்
அச்சினமே உன்னைச் சிதைத்துவிடும்.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அளி - வண்டு
அளி - கொடு
*பழமொழி*
* தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.*
விளக்கம்
கர்ப்பகாலத்தில் தாய்
உண்ட
உணவே
அவளின்
குழந்தைக்கும் சென்றாலும் பிறந்த
பின்
நாட்கள் செல்லச் செல்ல
குழந்தைக்கென்று தனி
உலகமும் தாய்க்கென்று தனி
உலகமும் உள்ளதாக மாறிவிடும்.
அதுபோல, ஒருவர் நம்மிடம் வேலை
செய்கிறார் என்றால் அதற்குரிய கூலியை
உடனே
கொடுத்து விட
வேண்டும். காரணம்,
அவரின்
தேவைகள் ஆசைகள்
வெவ்வேறாக இருக்கும். எனவே பரந்த
மனப்பான்மையுடன் இருக்க
வேண்டும் என்பதே
இதன்
பொருள்
*PROVERB*
*Don’t count your chickens before
they hatch*
MEANING
:Don’t expect a positive result before you actually see it
EXAMPLE A: “This idea is going to make me millions of
dollars!”
B: “Whoa. Let’s slow down. Don’t
count your chickens before they hatch.”
தினம் ஒரு மூலிகை ----
அவுரி
அவுரி அல்லது நீலி
என்னும் செடி
தாவரவியலில் இண்டிகோஃவெரா டின்க்டோரியா (Indigofera tinctoria) என்று அழைக்கப்படுகின்றது. இது
பேபேசியே (Fabaceae) என்னும் குடும்பத்தில் இண்டிகோஃவெரா (Indigofera) என்னும் இனத்தைச் சேர்ந்த செடி.
இதன்
பொது
ஆங்கிலப் பெயர்
ட்ரூ
இண்டிகோ (true indigo). இச்செடியில் இருந்து முன்னர் நீல
நிறம்
(ஊதாநிறம்) கொண்ட
சாயம்
எடுத்தனர். இச்செடி எங்கிருந்து தோன்றியது என்று
உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இது
வெப்பமண்டலப் பகுதிகளிலும், ஆப்பிரிக்காவின் சில
பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. நெடுங்காலமாக உலகெங்கிலும் ஊதா
நிறச்
சாயத்திற்கு இச்செடியைப் பயன்படுத்தினர். இன்று
செயற்கையாக வேதிப்பொருட்கள் வழி
நீல
நிறச்
சாயம்
பெற்றாலும், இன்றும் இதன்வழி பெறும்
நிறம்தரும் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.
இச்செடி (புதர்
வகையான
செடி)
ஏறத்தாழ 2 மீட்டர் வளரக்கூடியது. வானியல் சூழலைப் பொறுத்து இப்புதர்ச்செடி ஆராண்டுத் தாவரமாகவோ ஈராண்டுத் தாவரமாகவோ, நிலையாக இருக்கும் தாவரமாகவோ உள்ளது.
இச்செடியின் இலைகள்
சற்றே
வெளிறிய பச்சைநிறத்துடன் கூட்டிலைகளாக உள்ளன.
இதன்
பூக்கள் நீலம்
கலந்த
இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன.
இச்
செடியின் இலைகளை
நீரில்
ஊற
வைத்து
புளிக்கச்செய்து சாயத்தை எடுக்கின்றனர். இப்படி
புளிக்க வைப்பதால் அதில்
உள்ள
கிளைக்கோசைடு இண்டிக்கான்(glycoside indican) என்னும் பொருள்
ஊதாச்
சாயமாக
மாறுகின்றது. இந்தச்
சாயத்தின் பெயர்
இண்டிகோட்டின் (indigotin) என்னும் ஊதாச்சாயம் ஆகும்.
அவுரி
(Indigofera tinctoria) ஒரு
மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றது.
மருத்துவ குணங்கள்
பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை,
தோல்
நோய்கள், ஒவ்வாமை(அலர்ஜி)
போன்றவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது
.
Enrich your vocabulary
·
- Bull... எருது
- Bulletin.... வெளியீடு
- Burrow.... பொந்து
- Bulldog.... வேட்டைநாய்
- Brook.... ஓடை
- Bronze....வெண்கலம்
- Brotherhood.... சகோதரத்துவம்
- Budget.... வரவுசெலவு
- Bristle...... சிலிர்த்தல்
- Breath... சுவாசம்
இனிக்கும் கணிதம்
அறிவியல் அறிவோம்
“இடது நுரையீரலைவிட
அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.
உயிர்ச்சத்து பி1 (விட்டமின் பி1)
இது வேதியியலில் தயமின்
என்றழைக்கப்படுகிறது. மிகவும் அவசியமான ஒன்று.
உடலின்
வளர்ச்சிதை மாற்றம் சீராக
நடைபெற
இது
அவசியம். இது
தானிய
வகைகள்,
அவரை
வகைகள்,
பன்றி
இறைச்சி, உருளைக்கிழங்கு, ஈரல்,
முட்டை,
காளான்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது.
இதன் குறைபாட்டால் பெரிபெரி என்ற
நரம்புசம்பந்தமான நோய்
தோன்றும். இதனை
சரிசெய்யவிடில் உயிர்
இழப்பை
ஏற்படுத்தும். மூளை,
நரம்பு
மண்டலம், இதய
சம்பந்தமான நோய்களை ஏற்படும்.
இந்த
விட்டமினின் அளவு
அதிகமாகும்போது அதிகளவு தூக்கம், தசைதளர்வு ஏற்படும்.
ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு
1-1.1 மில்லிகிராம்.
வரலாற்றுச் சிந்தனை
சந்திரகுப்தரின்
ஆட்சியை இரண்டு
புத்தகங்கள் மூலம்
அறியலாம். எப்படி
ஆண்டார் என்பதை
சாணக்கியரின் "அர்த்தசாத்திரம்" மூலமும், அவர்
ஆட்சியில் தேசம்
எப்படி
இருந்தது என்பதை
கிரேக்கப் பயணிமெகஸ்தனிசின் "இண்டிகா" மூலமும் அறியலாம்.
தன்னம்பிக்கை கதை
* நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.*
ஒருநாள் ஆபிசில் வேலை
செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான
நேரத்தில் வந்து
சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ
எழுதி
இருக்கிறதே என்று
அனைவரும் பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள்
வளர்ச்சிக்கும் நம்
கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த
நபர்
நேற்று
காலமானார்,அடுத்த
கட்டிடத்தில் அவர்
உடல்
வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து
கொள்ளவும்” என்று
எழுதி
இருந்தது.இதை
படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை
செய்த
ஒருவர்
இறந்து
விட்டாரே என்று
வருத்தமாக இருந்தது,பிறகு
நம்
வளர்ச்சிக்கு தடையாக
இருந்த
நபர்
யாராக
இருக்கும் என்று
அவர்களுக்கு ஆர்வம்
ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த
கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை
நோக்கி
ஒருவர்
பின்
ஒருவராக செல்ல
ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம்
வளர்ச்சிக்கு தடையாக
இருந்தவன் யாராக
இருக்கும்,நல்ல
வேளை
அவன்
இறந்துவிட்டான் என்று
நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
ஓவிய்ம் வரைவோம் ( நன்றி - கணையாளி மரபுப்பள்ளி)
வாழை | ஓவியம் வரைவது எப்படி
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
ஓவிய்ம் வரைவோம் ( நன்றி - கணையாளி மரபுப்பள்ளி)
வாழை | ஓவியம் வரைவது எப்படி
No comments:
Post a Comment