அறிவுக்கு விருந்து –13.6.2019 (வியாழன்)


குறளறிவோம்-  6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி  உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
மு.வரதராசனார் உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
Translation:
Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.
Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
சிந்தனைக்கு

          ஒழுக்கம் என்ற வாயிலைக் கடந்துதான் கெளரவம் என்ற கோயிலுக்குப் போக முடியும்.

 தமிழ் அறிவோம்  
ஒத்தச் சொற்கள்
                        அருந்துதல்            -           குடித்தல்
                        அருந்துதல்            -           பருகுதல்

பழமொழி
* வெள்ளமேயாயினும் பள்ளமே பயிரிட வேண்டும்*
            விளக்கம் -  மேட்டிலே பயிரிடுவதைவிட பள்ளத்தில் பயிரிடுவது சாலச் சிறந்தது.
            அதுபோல நல்ல நண்பனாக இருந்தாலும் அவனைப்புடம்  போட்டுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்  அப்போதுதான் அவனிடம் உள்ள தீவைகளைக் எடுத்துக்கொண்டு மேலும் அவனைச் சிறப்பிக்கலாம்.

Enrich your   vocabulary

·         Carbon           -           கரிப்பொருள்
·         Care                -           கவனம்
·         Cardamom     -           ஏலக்காய்
·         Career             -           தொழில்
·         Caricature      -           கேலிச்சித்திரம்
·         Carnial            -           கேளிக்கை
·         Carpenter       -           தச்சர்
·         Carriage         -           வண்டி
·         Cargo              -           சரக்கு
·         Cataract          -           கண்படர் நோய்

Opposite Words
          Arrival        x        Departure
          Arive           x        Depart

PROVERB        * Hope for the best, prepare for the worst*

MEANING In any situation, be optimistic about the result, but always be ready for the worst outcome.
EXAMPLE “We’re going on vacation next week. It’s supposed to rain a lot, so we’re bringing our umbrellas and a bunch of board games. Hope for the best, prepare for the worst.”

இனிக்கும் கணிதம் 





அறிவியல் அறிவோம்

அட்டை ஒருமுறை ரத்தத்தை உறிஞ்சிவிட்டால் ஒன்பது மாதங்கள்வரை இரை எடுக்காது.

உயிர்ச்சத்து பி7  (விட்டமின் பி7)

இதனுடைய வேதியியல் பெயர் பயோடின் ஆகும். கொழுப்பு அமிலங்கள் மற்றும் லியூசின் வளர்ச்சிதை மாற்றத்தில் இது இணை நொதியாகச் செயல்படுகிறது. குளுக்கோஸின் புத்தாக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
இது பச்சை முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், சிலகாய்கறிகள், வேர்க்கடலை ஆகியவற்றில் இது உள்ளது.
இதன் குறைபாட்டால் வழிவெண்படல அழற்சி நோய், முடி கொட்டுதல், கண்கள், மூக்கு, வாய் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றிலும் செதில் போன்ற சிவப்புதன்மையுடைய சரும அழற்சி ஆகியவை ஆகும்.  ஒரு நாளைக்கு உட்கொள்ளும் அளவு 0.03 மில்லிகிராம்ஆகும்.

தினம் ஒரு மூலிகை    ----  திப்பிலி

திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper () Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தை சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.இது ஒரு மூலிகைத்தாவரமாகும். அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். இது  தனது நெருங்கிய இனமான கருமிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக்காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும். திப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை (piper nigrum) போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான piperine காரப்போலியைக் (Alkaloid) கொண்டிருக்கும்

மருத்துவப் பயன்கள்

இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்துஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்ட திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி 'அரிசித் திப்பிலி' என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.
.
வரலாற்றுச் சிந்தனை

காளிதாசர்-
காளிதாசர் எழுதிய நூல் சாகுந்தலம்,
ரகுவம்சம், மேகதூதம்,விக்கிரமோர்வசியம், மாளவகாக்கினிமித்திரம்.
 தன்னம்பிக்கை கதை தத்துவம் உயிரைக் காப்பாத்தாது
ஒரு தத்துவஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, ”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார். “எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும், பூகோளம் எல்லாம் தெரியாதுஎன்றான் படகுக்காரன். வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவஞானி. சற்றுத் தூரம் போனவுடன், “சரித்திரம் தெரியுமாஎன்று கேட்டார். ” அதுவும் எனக்குத் தெரியாதுஎன்றான் படகுக்காரன். “அரை ரூபாயை இழந்துவிட்டாய்என்றார் அவர். பிறகு அவனைப் பார்த்து, “விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார். “அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா, எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்என்றான்
படகுக்காரன். “முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்என்றார் அவர். அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது.. “சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று படகுக்காரன் கேட்டான். “தெரியாதுஎன்றார் அந்த தத்துவ ஞானி. “இப்பொழுது உங்கள் உயிரை அல்லவா நீங்கள், இழக்கப் போகிறீர்கள்”, எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்துக் கரை சேர்ந்தான். தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிர் துறந்தார்.. நீதி> தத்துவம் உயிரைக் காப்பாத்தாது

மருதம் | ஓவியம் வரைவது எப்படி

இணையம் அறிவோம் – பொதுஅறிவு தகவல்கள் அடங்கிய தளம் 

செயலி 

Tamil Puthir – புதிர்

https://play.google.com/store/apps/details?id=com.androplus.puthir&hl=en_US


No comments:

Post a Comment