அறிவுக்கு விருந்து –7.6.2019 (வெள்ளி)

குறள் அறிவோம் -1


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.

மு.வரதராசனார் உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

Translation:

No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.

Explanation:

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.

சிந்தனைக்கு
           

            மற்றவரின் புன்னகையை ரசிப்பதைவிட
            அவர்களை புன்னகைக்க வைத்து ரசித்து பாருங்கள் 
            வாழ்வே வசந்தமாகும்.



           
தமிழ் அறிவோம்  
ஒத்தச் சொற்கள்
                        அகழி           -           கிடங்கு
                        அகழி            -           கேணி
                        அகழி            -           ஓடை

*பழமொழி*  

* புயலுக்கு முன் அமைதி   (Cast no pearls before swine)*


*PROVERB*

* Don’t put all of your eggs in one basket*

MEANING :Don’t put all of your hopes and resources into one goal or dream
EXAMPLE: “I know you really want to be an actor, but don’t you think you’re being financially irresponsible? Don’t put all of your eggs in one basket.”

தினம் ஒரு மூலிகை    ----  நொச்சி

நொச்சியில் (Vitex negundo) வெண்ணொச்சி. கருநொச்சி, நீலநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. ‘ வெண்ணொச்சி வெள்ளை நிறக் கிளைகளுடன் காணப்படும். இது மரமாக ஆற்றோரங்களில் சுமார் 30 அடி உயரம் வளரக்கூடியது. நொச்சியில் கிளை இல்லாத மார்கள் ஆறு ஏழு அடி உயரங்கூட வளரும். பழங்காலத்தில் இந்த நொச்சி மார்களை வெட்டிப் படல் கட்டி வீடுகளுக்கு வேலி அமைத்துக்கொள்வர். நொச்சிப்பூ நீண்ட கொத்தாக மயிலை நிறத்தில் பூக்கும். இதன் இளமையான மார்களைக் கொண்டு மண் சுமக்க உதவும் தட்டுக்கூடைகள் பின்னிக்கொள்வார்கள்.

 நொச்சிப்பூ சூடி மதிலைத் தாக்கும் போர் நொச்சித்திணை என வகுக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

வெண்ணொச்சியானது சிறுமர வகையைச் சார்ந்தது. இது மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளைகலாக, ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். நீலமணி நிறத்தில் நொச்சியின் மலர் இருக்கும்.

மருத்துவப் பயன்கள்

இயற்கை மருத்துவத்தில் நொச்சி பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, சருமப் பிரச்சனைகளுக்குநிவாரணம் அளிக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. இயக்குநீர் குறைபாடுகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு, நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் தடுக்க முடியும்.
.
Enrich your   vocabulary
  • ·         Brake... முட்டுக்கட்டை
    ·          Bug... மூட்டைப்பூச்சி
    ·         Cadre.... பதவி நிலை
    ·         Calk.... குதிரை லாயம்
    ·         Camphor..... கற்பூரம்
    ·         Cage... கூண்டு
    ·         Calico.... பருத்தி துணி
    ·         By..product......துணைப்பொருள்
    ·         Cactus.....கள்ளி


இனிக்கும் கணிதம்




அறிவியல் அறிவோம்

மனித மூளையின் நினைவுத்திறன் நான்கு டெராபைட் அளவைவிட அதிகானது.

உயிர்ச்சத்து பி2  (விட்டமின் பி2)

இதனுடைய வேதியியல் பெயர் ரிபோஃப்ளோவின் என்பதாகும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு அவசியமானது.

இது பால் மற்றும் பால்பொருட்கள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், ஈரல், சிறுநீரகம், பயிறு வகைகள், தக்காளி, காளான்கள், பாதாம் பருப்பு ஆகியவற்றில் இது காணப்படுகிறது.

இதனுடைய குறைபாட்டினால் வாய்புண், நாக்குஅழற்சி, சருமநோய்கள் ஏற்படும்.

ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு 1.1 மில்லிகிராம்


வரலாற்றுச் சிந்தனை

இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவைஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன்எனவும் புகழப்படுகின்றார்.

தன்னம்பிக்கை கதை,
* காரியம் பெரிது, வீரியமல்ல!.*
பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலை க்கழகம் துவங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்த நேரமது. ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாதாரண விஷயமல்லவே. நன்கொடை வேண்டி பல அரசர்கள், செல்வந்தர்கள், சமூக ஆர்வலர்களை சலிக்காமல் சென்று சந்தித்து அவர் நன்கொடை வேண்டினார். அப்படித்தான் அவர் ஹைதராபாத் நிஜாமிடமும் சென்றார்.
ஹைதராபாத் நிஜாம் இயல்பிலேயே தர்மவான் அல்ல. அதிலும் ஒரு இந்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க அவரிடம் மாளவியா நன்கொடை கேட்டதை சிறிதும் நிஜாம் ரசிக்கவில்லை. மாறாக அவருக்குக் கடும்கோபம் தான் வந்தது. தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி மாளவியா மீது வீசினார். மாளவியா சிறிதும் அமைதி இழக்காமல் நிஜாமிற்கு நன்றி கூறி அந்த ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினார். செருப்பைக் கூட விடாமல் எடுத்துக் கொண்டு மாளவியா வெளியேறியவுடன் நிஜாமிற்கு சந்தேகம் வந்தது. தன் சிப்பாய்களை அவரைப் பின் தொடரச் சொல்லி அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கச் சொன்னார்.
மதன் மோகன் மாளவியா அந்த ஒற்றைச் செருப்புடன் முச்சந்தியில் நின்று, “இது மகாராஜாவின் செருப்பு. இதை ஏலம் விடப் போகிறேன்என்று அறிவித்தார். கூடிய மக்கள் முதலில் அவர் நகைச்சுவையாக ஏதோ செய்கிறார் என்று நினைத்தாலும் அந்த வேலைப்பாடுடைய செருப்பைப் பார்த்தவுடன் அது மகாராஜாவுடையது தான் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏலத்தில் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மிகக் குறைந்த விலையில் ஆரம்பித்த ஏலம் சிறிது சிறிதாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.
சிப்பாய்களில் ஒருவன் அவசர அவசரமாக நிஜாமிடம் போய் தகவலைச் சொன்னான். நிஜாமிற்கு தர்மசிந்தனை இல்லா விட்டாலும் சுயகௌரவம் நிறையவே இருந்தது. என்ன விலைக்கு அந்த செருப்பு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க சிப்பாய் தான் கிளம்பிய போது இருந்த நிலவரத்தைச் சொன்னான். அது போன்ற குறைந்த விலைக்கு அந்தச் செருப்பு ஏலம் போய் வாங்கப்பட்டால் அது தன் நிலைக்கு மகா கேவலம் என்று நினைத்தார் அவர். அதை நல்ல அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் வாங்கி வரச் சொல்லி பெரிய தொகையைக் கொடுத்தனுப்பினார். அந்தப் பெரிய தொகையில் அந்த ஒற்றைச் செருப்பு நிஜாமாலேயே சிப்பாய் மூலம் வாங்கப்பட்டது.
மதன் மோகன் மாளவியா அந்த ஏலத்தொகையை ஹைதராபாத் நிஜாமின் நன்கொடையாக காசி இந்து பல்கலைக்கழக நிதியில் சேர்த்துக் கொண்டார். (1916 ஆம் ஆண்டு காசி இந்து பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.)
மாளவியாவின் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் செருப்பு மேலே விழுவதைக் கௌரவக் குறைவாக நினைத்திருப்பார். கோபப்பட்டிருப்பார். தான் கேவலப்பட்டு விட்டதாக நினைத்திருப்பார். இந்திய அரசியலில் ஒரு முக்கியமான இடத்தை அக்காலத்தில் பெற்றிருந்த மாளவியா அப்படி நினைத்திருந்தால் அது நியாயமாகவே இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல பொதுக் காரியத்திற்காகச் சென்ற இடத்தில் காரியம் தான் பெரிது, வீரியம் பெரிதல்ல என்கிற மனப்பக்குவம் மாளவியாவிற்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நடந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனமும் அவருக்கு இருந்ததால் நல்லபடியாகவே அதை சாதகமாக்கிக் கொண்டு விட்டார்.
பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மதன்மோகன் மாளவியாவின் மனப்பக்குவமும், சமயோசிதமும் மிக முக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும், சீக்கிரமாக முடியும். காரியத்தில் கண்ணாய் இருப்பதை விட்டு விட்டு சிறிய சிறிய சுமுகமல்லாத சூழ்நிலைகளையும், பின்னடைவுகளையும் பெரிதுபடுத்தும் தன்மை இருந்தால் கோபமும், விரக்தியும் தான் மிஞ்சும்.
தங்களை முன்னிறுத்தாமல் காரியத்தை முன்னிறுத்தும் மனிதர்களே கடைசியில் பெரும் சாதனைகளை செய்து முடிக்கிறார்கள். சாதனையாளர்களாகத் தாங்களும் சிறப்பு பெறுகிறார்கள். எதிர்மாறாக காரியத்தையும் விடத் தங்களை முன்னிலைப் படுத்தும் மனிதர்களால் காரியமும் நடப்பதில்லை, வெற்றியாளர்களாகப் பிரகாசிக்கவும் முடிவதில்லை.


ஓவிய்ம் வரைவோம் ( நன்றி -  கணையாளி மரபுப்பள்ளி)

 
 

No comments:

Post a Comment