அறிவுக்கு விருந்து –14.6.2019 (வெள்ளி)


குறளறிவோம்-  7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மு.வரதராசனார் உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
Translation:
Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.
Explanation:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
சிந்தனைக்கு
          ஒழுக்கமுள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் உள்ள சொற்களையே பேசுவான்.

 தமிழ் அறிவோம்  
ஒத்தச் சொற்கள்
                        அன்பு           -           அருள்
                        அன்பு           -           பற்று
                        அன்பு           -           நேசம்
                        அன்பு           -           ஈரம்
                        அன்பு           -           பாசம்
                        அன்பு           -           கருணை
                        அன்பு           -           இரக்கம்

பழமொழி
* விளக்கைப் பாராதே  வெளிச்சத்தைப்பார் *
            விளக்கம் -  நம் எதிரில் நிற்கும் மனிதனின் மதம். ஜாதி உட்பிரிவு போன்றவற்றைப் பார்க்காமல் அவரின் நல்ல பண்பு அறிவாற்றல்.தீர்க்க சிந்தனை இவற்றையெல்லாம் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதே இதன் உள்ளார்ந்த கருத்தாம்.

Enrich your   vocabulary

·         Bottle                          -           புட்டி
·         Bottom                       -           அடித்தளம்
·         Bounce                       -           துள்ளல்
·         Boundary                   -           முடிவு
·         Bouquet                      -           பூச்செண்டு
·         Bow                             -           கப்பல் முகப்பு
·         Bowel                          -           குடல்
·         Bowl                            -           கிண்ணம்
·         Boxing            -           குத்துச்சண்டை
·         Boycott           -           புறக்கணித்து
·          
Opposite Words

          High           x        Deep
          High           x        Low

PROVERB        * If you play with fire, you’ll get burned*

MEANING If you get involved in something dangerous or beyond your abilities, you will probably experience negative consequences
EXAMPLE “Don’t make him angry. If you play with fire, you’ll get burned.”

இனிக்கும் கணிதம்




அறிவியல் அறிவோம்

மீன் இனங்களில் அதிக ஆண்டுகள் வாழ்வது ஸ்டர்ஜியன்

உயிர்ச்சத்து பி9  (விட்டமின் பி9)

இதனுடைய அறிவியல் பெயர் ஃபோலேட் என்பதாகும். இது செல் பிரிதலுக்கும், டிஎன்ஏ, ஆர்என்ஏ உற்பத்திக்கும், அமினோ அமிலங்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் அவசியமானது.
பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் ஆரம்பநிலையில் இது அவசியமானது.
இது பழங்கள், காய்கறிகள், ஈரல் ஆகியவற்றில் உள்ளது.
இதனுடைய குறைபாட்டால் பிறவிக்குறைபாடுகள், அனீமியா உண்டாகும்.
ஒரு நாளைக்கு உட்கொள்ளும் அளவு 0.2 மில்லிகிராம்

தினம் ஒரு மூலிகை    ஊமத்தை

ஊமத்தை (தாவர வகைப்பாடு : Datura stramonium; ஆங்கிலம் :jimson weed, Thorn Apple ) என்பது ஒரு தாவர இனம். இதன் பூவின் பெயர் ஊமத்தம் . இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது. இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.
.
வரலாற்றுச் சிந்தனை
ரகுவம்சம் இராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அயன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது.

 தன்னம்பிக்கை கதை பயம்! பயம்! பயம்!
--------------------------

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி.
புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

இணையம் அறிவோம் – பொதுஅறிவு தகவல்கள் அடங்கிய தளம் 

செயலி 


Tamil Proverbs தமிழ் பழமொழிகள்

https://play.google.com/store/apps/details?id=com.nithra.tamilproverbs&hl=en_US

பாலை | ஓவியம் வரைவது எப்படி


No comments:

Post a Comment