அறிவுக்கு விருந்து – 3.6.2019 (திங்கள்)




*சிந்தனைக்கு*




            ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்குப் பதிலாக ,,, சரியான செயல்களைச் செய்வதே வெற்றியை  ஈட்டித் தரும்.



*தமிழ் அறிவோம்*
  
ஒத்தச் சொற்கள்
                        அன்னம் – சோறு
                        அன்னம் - பறவை
 

*பழமொழி*  
*கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? *

இங்கு பூண் என்பது புண் என உருமாறி இருக்கிறது

கையில் அணியும் ஆபரணத்தைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லைஅதுபோல  நம் பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் பற்றித் தெரிந்து கொள்ள மூன்றாவது மனிதனைக் கேட்கவேண்டிய அவசியம் இல்லை.

*PROVERB*
*Cleanliness is next to godliness*
தூய்மை தெய்வீகத்திற்கு அடுத்தது
It’s good to be clean. God is clean, and you should be too.
“Go take a shower before your date. You know what they say; cleanliness is next to godliness.”

*மூலிகை  - ஓரிதழ் தாமரை*

ஓரிதழ் தாமரை (தாவர வகைப்பாடு:Ionidium suffruticosum) வயோலேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஒரு மூலிகைத்தாவரமாக அறியப்படுகின்றது. இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வளருகிறது.

பெயர்கள்:
ஓரிதழ் தாமரைக்கு ரத்தனபுருஷ், ரத்னாயுரஷரி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. ஒரே இதழ் கொண்ட மலர் என்பதால், ‘ஓரிதழ்என்றும், தாமரைப் பூவின் நிறத்தோடு (வெளிர் சிவப்பு) இது உள்ளதால், தாமரை என்ற இரு சொற்களும் இணைந்து ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதைத்தவிர தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் எவ்விதத் தொடர்பு கிடையாது.

விளக்கம்
ஓரிதழ் தாமரையானது நிலத்தில் வளரும் மிகச் சிறிய செடி வகையினம் ஆகும். ஓரளவுக்கு ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளைக் கொண்டுள்ளது.

*Enrich your   vocabulary*
·        Eligible       :         தகுதி உடைய 
·        Earthquake  :         பூகம்பம் 
·        Equal          :         சமமான 
·        Equator       :         நிலநடுக்கோடு 
·        Efficient      :         திறமையான
·        Exit             :         வெளியேறும்    பகுதி
·        Eternal        :         அழிவற்ற 
·        Conclusion  :         முடிவு 
·        Praise          :         புகழ்தல்
·        Piece            :         துண்டு

*இனிக்கும் கணிதம்*







*அறிவியல் அறிவோம்*
 இந்தியா ரோகினி என்ற விண்கலத்தை 1980 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

*உயிர்ச்சத்து  (விட்டமின் ஏ)*

உயிர்ச்சத்து முதன் முதலில் 1947 இல் இரண்டு இடாய்ச்சு வேதியியலாளர்களான டேவிட் அட்ரியான் வான் டோர்ப் மற்றும் ஜோசப் ஃபெர்டினண்ட் அரென்சு ஆகியோரால் தொகுக்கப்பட்டது.
இதன் பயன்பாடு இருட்டுப்பார்வை மற்றும் நிறப்பார்வை இரண்டுக்கும் மிகவும் அத்தியாவசியமானது ஆகும்.    
அன்றாட உணவில் ஏ ச‌த்து ‌நிறை‌ந்த பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.  காய்கறிகளை  பச்சையாக  சாப்பிடவும்.  
கேர‌ட்டை சா‌ப்‌பிடலா‌ம், ‌பீ‌ட்ரூ‌ட்டை சாறா‌க்‌கி‌க் குடி‌க்கலா‌ம். காய்கறி சால‌ட் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும்.

*வரலாற்றுச் சிந்தனை*

சந்திர குப்தர் (சந்திரகுப்தன்) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் 
சந்திரகுப்த மௌரியர்  மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார்



தன்னம்பிக்கை கதை

விடாமுயற்சி
=============
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?
எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

No comments:

Post a Comment