அறிவுக்கு விருந்து – 19.6.2019 (புதன்)
குறளறிவோம்- 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவன் அடிசேரா தார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாழ்க்கை எனும்
பெருங்கடலை நீந்திக் கடக்க
முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி
தொடர்ந்து செல்லாவிடில் நீந்த
முடியாமல் தவிக்க
நேரிடும்.
மு.வரதராசனார்
உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய
கடலைக்
கடக்க
முடியும். மற்றவர் கடக்க
முடியாது.
Translation:
They swim the sea of births, the
'Monarch's' foot who gain; None others reach
the shore of being's mighty main.
the shore of being's mighty main.
Explanation:
None can swim the great sea of
births but those who are united to the
feet of God.
feet of God.
சிந்தனைக்கு
பெரிய வேலைகளை மேதைகள்
ஆரம்பிக்கிறார்கள்,
உழைப்பு ஒன்றே அவற்றை முடித்து வைக்கிறது.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அபாயம் - ஆபத்து
அபாயம் - இடர்
பழமொழி
*அகத்தின்
அழகு முகத்தில்
தெரியும்*
விளக்கம் : ஒருவரது
மனநிலையை அவரது
முகத்தில் கண்டு
அறியலாம். அவரது
முக பாவனைகளை வைத்தே
அவரது மனதில் எந்ன
இருக்கிறது என்பதை
அறிந்து கொள்ள
முடியும். மனிதருக்கு
முகபாவங்கள் அவரது
மன எண்ணங்களை பொறுத்து
அமையும்.
Enrich your vocabulary
·
Brine - உப்புநீர்
·
Broadcast - ஒளிபரப்பு
·
Broaden - அகலமாக்கு
·
Broach - துளையிடும்
கருவி
·
Brocade - ஜரிகை
வேலைப்பாடுடைய பட்டுத்துணி
·
Burden - சுமை
·
Burglar - திருடன்
·
Bureau - அடுக்குப்பெட்டி
Opposite Words
Push x Pull
Public x Private
Proverb
*The grass is always
greener on the other side*
MEANING : People always
want what they don’t have
EXAMPLE A : “I’m jealous of all
the free time my single friends have.”
B : “Yeah, but your friends are probably
jealous of you too in some ways. The
grass is always greener on the other side.”
இனிக்கும் கணிதம்
9=4 7=5
21=9 8=5
22=9 9=10
24=10 100=7
16=? 17=?
விடை – 7,9
அறிவோம் அறிவியல்
வாழைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் நீக்கவல்லது.
தினம் ஒரு மூலிகை - அரளி
உயிர்ச்சத்து டி (விட்டமின் டி)
இதனுடைய வேதியியல் பெயர்
ஏர்கோகல்சிபெரோல் என்பதாகும். இது
கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட் உள்ளிட்டவைகளை குடல்
உட்கிரகிக்க அவசியமானது.
இதனை செயற்கைப்பொருளாக அதிகமாக உட்கொண்டால் தலைவலி,
வாந்தி,
அதிகதாகம், அடிக்கடி சிறுநீர்கழித்தல், தசை
பலமிழப்பு, இணைப்பு திசுக்களில் வலி
ஆகியவை
உண்டாகும்.
ஒரு நாளைக்கான தேவை
0.01 மில்லிகிராம் ஆகும்.
வரலாற்றுச் சிந்தனை
தன்னம்பிக்கை
கதை
பெரியோரை மதித்து வாழ்
ஒரு ஊரில்
புலவர்
ஒருவர்
வாழ்ந்து வ்ந்தார். அவருக்கு ஒரு
மகள்
இருந்தாள்.அந்த
புலவர்
மிகவும் பண்புள்ளவராகவும் திறமை
மிகுந்தவராகவும் இருந்ததால் பல
நண்பர்கள் அவரைப்
பார்க்க வருவார்கள்.. ஒரு
முறை
புலவர்
நோய்வாய்ப்பட்டார் படுக்கையில் இருந்த
அவரைப்
பார்க்க தினமும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
புலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது.சற்று
அலட்சியமாகவே நடந்து
கொண்டாள். ஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு
புலவர்
தன்
நண்பனைப் பார்க்க வந்தார். சிறிது
நேரம்
இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர். படுத்திருக்கும் புலவர் நண்பனை
உபசரிக்க எண்ணியவர் தன் மகளை
அழைத்தார்.
"அம்மா, இவருக்குப் பருகப்
பால்
கொண்டு
வா"
என்று
கூறினார், அவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே. அவளும்
பாலை
ஒரு
குவளையில் கொணர்ந்து கொடுத்தாள். அந்தக்
காலத்தில் பாலை
ஆடை நீக்குவதற்காக துணி
வைத்திருப்பார்கள். அந்தத்
துணியை
ஒவ்வொருமுறை வடிகட்டிய பின்
துவைத்து உலர்த்தியிருப்பார்கள். ஆனால்
அந்தப்
பெண்
துணியை
அப்படியே வைத்திருந்து உபயோகப் படுத்தினாள்.
அதனால் பாலைக்
குடித்த புலவர்
சற்றே
முகம்
சுளித்தார்."ஏன் புலவரே,
பால்
என்ன
கசக்கிறதா?" என்றாள் அந்தப்பெண். உடனே
புலவர்
புன்னகை மாறாமல்" இல்லையம்மா, பாலும்
கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை."என்றார். தான்
செய்த
தவறை
சிலேடையாகச் சொன்ன
புலவர்
முன்
மன்னிப்புக் கேட்டுக் கொண்டு
மனம்
திருந்தினாள் புலவரின் மகள். பெரியோரை அலட்சியப் படுத்தினாலும் அவர்கள் அதை
நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள் அவர்களே உயர்ந்தோர்.
செயலி - U-Dictionary: Translate & Learn English
https://play.google.com/store/apps/details?id=com.youdao.hindict&hl=en_US
மருதம் | ஓவியம் வரைவது எப்படி –
No comments:
Post a Comment