குறள் அறிவோம் -3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
நிலமிசை நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில்
நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வரதராசனார் உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த
திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப
உலகில்
நிலைத்து வாழ்வார்.
Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who
gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:
They who are united to the glorious feet of Him who occupies
swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds
(heaven).
சிந்தனைக்கு
தவறான மனிதர்களுடன் விவாதம் செய்வதைவிட சுலபம்
சரியான மனிதர்களுடன் அட்ஜட்ஸ்
செய்து போவது.
ஒழுக்கம் உனக்கு நீயே
போடும் நல்ல பாதை
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அம்புயம் - தாமரை
அம்புயம் - கமலம்
அம்புயம் - முளரி
*பழமொழி*
* ஒரு செயலை செய்யும் முன்
பலமுறை
சிந்திக்கவும் (Pride goes before fall) *
தினம் ஒரு மூலிகை ---- கற்றாழை
கற்றாழை(Aloë vera): பூக்கும் தாவர
இனத்தைச் சேர்ந்த ஒரு
பேரினமாகும். தமிழில் இந்தத்
தாவரம்
கற்றாழை, கத்தாளை, குமரி,
கன்னி.
என
அழைக்கப்படுகிறது. (ஆங்கிலம்: Indian Aloes) இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு
முட்களுடன் காணப்படும். மடல்,
வேர்
ஆகியவை
மருத்துவப் பயனுள்ளவை. அழகு
சாதனப்
பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
கற்றாழை லில்லியேசி தாவர
குடும்பத்தைச் சேர்ந்தது. இது
ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும்
கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா,
இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய
நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த
இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு
கற்றாழை, பெரும்
கற்றாழை, பேய்க்
கற்றாழை, கருங்
கற்றாழை, செங்கற்றாழை, இரயில்
கற்றாழையெனப் பல
வகை
உண்டு.
இதில்
சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும்
பல
வேதிப்பொருட்கள் உள்ளன.
கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள்
நிறத்
திரவம்
‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள
சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.
மருத்துவப் பயன்பாடு
கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற
வேதிப்பொருட்கள் உள்ளன.
‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு
நான்கிலிருந்து இருபத்து ஐந்து
சதம்
வரை
இதன்
இலையில் காணப்படுகிறது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல்,
சளி,
குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும்
வயிற்றுப்புண், தோலில்
ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.
.
Enrich your vocabulary
·
Hang - தொங்கவிடுதல்
·
Robbers - கள்ளவர்கள்
·
Reverse - தலைகீழ்
·
Herbs - மூலிகை
·
List - பட்டியல்
·
Laborious - சுறுசுறுப்பாக
·
Deviation - திசை
திருப்புதல்
Opposite Words
Answer - Question
Answer - Ask
PROVERB
*
Fortune favors the bold*
MEANING :People who are brave and
who take risks are more successful than people who are do things safely all the
time
EXAMPLE :“It’s a risk, but the
reward could be great. I say you go for it. Fortune favors the bold.”
இனிக்கும் கணிதம்
அறிவியல் அறிவோம்
சூரியனின் மகன் என்றுஅழைக்கப்படும்
தாவரம் பருத்தி
உயிர்ச்சத்து பி3 (விட்டமின் பி3)
இதனுடைய வேதியியல் பெயர்
நியாசின் ஆகும்.
இது
கொட்டைகள், காளான்கள், இறைச்சி, தானியங்கள், முட்டை,
பால்,
பயிறு
வகைள்,
பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.
இதனுடைய குறைபாட்டால் பெல்லகரா, தோல்
வறட்சி,
வயிற்றுப்போக்கு, டிமென்சியா போன்றவை ஏற்படும்.
இதனை அதிகமாக மருந்தாக உட்கொண்டால் கல்லீரல் சிதைவு
ஏற்படும். ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவு
14 மில்லிகிராம் ஆகும்.
வரலாற்றுச் சிந்தனை
பிந்துசாரர்
(Bindusara) என்பவர்
மௌரியப்
பேரரசின்
இரண்டாவது
மன்னர்
ஆவார்.
கி.மு
297 முதல்
கி.மு
273 வரையிலான
கி.மு
மூன்றாம்
நூற்றாண்டுக்
காலத்தில்
இவர்
வாழ்ந்ததாகக்
கூறப்படுகிறது.
தன்னம்பிக்கை கதை - *வெற்றியின்
இரகசியம்*
வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.
வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார்.
சொன்னபடி மறுநாள் காலை ஆற்றங் கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ். கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென்று அவனை தண்ணீரில் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.
தடுமாறிப் போன அந்த இளைஞன் காற்றுக்காகவும், தலையை வெளியே எடுக்கவும் போராடினான். நீரிலிருந்து வெளியே வர மிகவும் பிரயத்தனப்பட்டான். சற்று நேரம் கழித்து அவன் தலையை வெளியே இழுத்த சாக்ரடீஸ் அவன் ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொள்ளும்வரை காத்திருந்துவிட்டு பிறகு கேட்டார்.
“இப்போதைய இந்த சூழலில் எதைப் பெற நீ பெரிதும் போராடினாய்?”
“காற்றைப் பெற போராடினேன்” என பதில் சொன்ன அந்த இளைஞனை முழுமையாக விடுவித்து விட்டு புன்னகையுடன் சாக்ரடீஸ் கூறினார்,
“இதுதான் வெற்றியின் இரகசியம்.
No comments:
Post a Comment