குறளறிவோம்- 5:
இருள்சேர் இருவினையும்
சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற
விரும்புகிறவர்கள், நன்மை
தீமைகளை ஒரே
அளவில்
எதிர்
கொள்வார்கள்.
மு.வரதராசனார்
உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு
செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை
வினையும் சேர்வதில்லை.
Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.
Explanation:
The two-fold deeds that spring from darkness shall not
adhere to those who delight in the true praise of God.
சிந்தனைக்கு
ஒழுக்கத்தைப் பற்றிய
சிந்தனை இல்லாதவன் எல்லா காரியங்களிலும் ஏமாற்றமடைவான்.
தமிழ் அறிவோம்
ஒத்தச்
சொற்கள்
அமர்தல் - இருத்தல்
அமர்தல் - உட்காருதல்
பழமொழி
* ஒட்டுத்திண்ணை நித்திரைக்குக் கேடு*
விளக்கம்
- தன் உழைப்பில் வாழாமல் அடுத்தவர்
உழைப்பை நம்பியிருப்பது ஒட்டுத்திண்ணையில் படுத்து உறங்குவது பேல நிலையற்றது.
Enrich your vocabulary
·
Camphor - கற்பூரம்
·
Calm - சாந்தியான
·
Calico - பருத்தித்துணி
·
Calk - குதிரை லாடம்
·
Canal - வாய்க்கால்
·
Capital - தலைநகரம்
·
Capitalist - முதலாளித்துவ
·
Capsule - கவிழ்
·
Captive - கைதி
·
Capture - கைப்பற்றுதல்
Opposite Words
Dead x Alive
Death x Birth
PROVERB *
If you play with fire, you’ll get burned*
MEANING If you get involved in
something dangerous or beyond your abilities, you will probably experience
negative consequences
EXAMPLE “Don’t make him angry. If
you play with fire, you’ll get burned.”
இனிக்கும் கணிதம்
அறிவியல் அறிவோம்
எறும்புகள் மற்றும் தேனீக்களில் உள்ள அமிலம்
பார்மிக் அமிலம்
உயிர்ச்சத்து பி6 (விட்டமின் பி6)
இதனுடைய வேதியியல் பெயர்
பைரிடாக்ஸின் ஆகும்.
அமினோ
அமிலம்,
குளுக்கோஸ், கொழுப்பு ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு இது
அவசியமானது.
இது
முழுதானியங்கள், பச்சை
காய்கறிகள், பயிறு
வகைகள்,
வாழைப்பழம், தக்காளி, வால்நட், இறைச்சி, மீன்
ஆகியவற்றில் உள்ளது.
இதனுடைய குறைபாட்டால் அனீமியா எனப்படும் இரத்த
சோகை,
நரம்பு
நோய்,
தூக்கமின்மை, குழப்பம், மனச்சோர்வு ஆகியவை
ஏற்படும்.
இதனை
அதிகமாக உட்கொண்டால் நரம்பு
கோளாறுகளை ஏற்படுத்தும்.
ஒரு
நாளைக்கு தேவைப்படும் அளவு
1.3-1.7 மில்லிகிராம்ஆகும்.
தினம் ஒரு மூலிகை ---- கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட
தாவரம்.
இச்செடி 20 முதல்
30 செ.மீ. உயரம் வரை
வளரும்.
மலர்கள் நீண்ட
காம்புகளுடன் வெளிர்
நீல
நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு
காயில்
பல
விதைகள் அடங்கியிருக்கும். இவை
கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன்
விதைகள் நறுமண
உணவுப்
பொருளாகப் பயன்படுகின்றன. இது
பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதை
சாப்பிட்ட உடன்
தொண்டையில் ஒரு
விதமான
அரிப்புணர்வை சில
நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.
"இறப்பைத்தவிர மற்ற
எல்லா
நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று இசுலாம் மதத்தின் நிறுவனரான நபிகள்
நாயகம்அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. யுனானி
மருத்துவத்தில், இன்றளவும் இதன்
எண்ணையை பயன்படுத்துகின்றனர். மேலும்
அரபு
நாடுகளில் இதனை
உணவுடன் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
பைபிளிலும் இதனைப்
பற்றி
குறிப்பிடபட்டுள்ளது.
இடம்பெற்றுள்ள சத்துக்கள்:
இதன்
விதையில் இடம்
பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு
எந்த
தாவரத்திலும் இல்லாத
ஒன்று.
மேலும்
அவசியமான அமினோ
அமிலங்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற
சத்துகளைக் கொண்டுள்ளது.
மருத்துவ குணங்கள்:
இதன்
விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்து
நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை
நோய்
எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கருஞ்சீரகம் சக்தி
வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால்
ஆஸ்துமா மற்றும் சுவாச
ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த
எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.
.
வரலாற்றுச் சிந்தனை
அசோகர் படிப்படியாகப் புத்த
மதத்தை
தழுவி
கி.பி 263 இல் முற்றிலுமாக உப
குப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு
அசோகர்
ஒரு
சாக்கிய உபாசங்கர் (சாதாரணசீடர்) ஆனார்.
தன்னம்பிக்கை கதை - * காது கேட்காத தவளை*
மூன்று
தவளைகள்
ஒரு
மலையின்
உச்சிக்கு
ஏறுவதற்கு
தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.
உடனே
ஒரு
தவளை
மலை
ஏறுவதை
நிறுத்தி
விட்டது.
சிறுது
தூரம்
சென்றவுடன்
இன்னொருவர்
"மேலே
செல்லும்போது
பாம்புகள்
பிடித்து
விட்டால்
என்ன
செய்யப்
போகின்றன
" என்றார்.
உடனே
இரண்டாவது
தவளையும்
கீழிறங்கிவிட்டது.
ஆனால்
யார்
என்ன
சொன்னாலும்
கேட்காத
மூன்றாவது
தவளை
மட்டும்
மலை
உச்சியை
சென்றடைந்தது.
பின்னர்
கீழிறங்கிய
அந்தத்
தவளையிடம்
அங்கிருந்த
ஒருவர்
"உன்னால்
மட்டும்
எப்படி
இவர்கள்
எல்லோரும்
எதிர்மறையாக
கூறியும்
துணிந்து
சிகரத்தை
அடைய
முடிந்தது"
என்று
கேட்டார்.
அதற்கு
அந்தத்
தவளை
"எனக்குக்
காது
கேட்காது
" என்றது.
நாமும்
வாழ்வில்
இந்த
தவளையை
போல
இருந்தால்
தான்
சில
நேரங்களில்
முன்னேற
முடியும்.
No comments:
Post a Comment