அறிவுக்கு விருந்து – 26.6.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 26.6.2019  (புதன்)
குறளறிவோம்-  15         வான்சிறப்பு


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
மு.வரதராசனார் உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
Translation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.
சிந்தனைக்கு
மேதைகள் தாங்கள் கண்டுபிடிப்பதைவிட. அதிகமான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
தமிழ் அறிவோம்
     ஒத்தச் சொற்கள்
                        ஆயுதம்       -           கருவி
                        ஆயுதம்       -           படைக்கலம்

பழமொழி   

* ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். *
 
பொருள்மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள் ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.


Enrich your   vocabulary
·         Sabotage....அழிவுவேலை 
·         Sabre...பட்டாக்கத்தி 
·         Sac...சிறு பை 
·         Sack..கோணிப்பை 
·         Sacred....புனிதமான 
·         Sacrifice....தியாகம் 
·         Sad....துன்பமிக்க 
·         Saddle....குதிரை சேணம்

Opposite Words
            Poor                x          Rich
            Poverty           x          Wealth

மொழிபெயர்ப்பு

    BEET ROOT – செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
                BITTER GOURD – பாகல், பாகற்காய்
                BLACK-EYED PEAS – தட்டைப்பயறு
 
Proverb
* Strike while the iron is hot. *
Meaning : This proverb means you should take advantage of the moment. If an opportunity presents itself to you, take it! Take action because the chance may not come again.

 

இனிக்கும் கணிதம்

ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி?
கடிகாரம் 5 முறை மணியடிக்க 12 வினாடி.
எனவே 1 க்கும் 5 க்கும் இடையில் 4 இடைவெளி உள்ளது. 4x3=12.  
ஒரு இடைவெளிக்கு 3 வினாடி. 1 க்கும் 10 க்கும் இடையில் 9 இடைவெளி உள்ளது.  
எனவே 10 முறை மணியடிக்க 9x3=27 வினாடி.

அறிவோம் அறிவியல் 
லியானர்டோ டாவின்சி
இவர் ஓவியம், கட்டிடகலை, அறிவியல், உடற்கூறியல், புவியியல், வானியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என அனைத்து துறைகளிளும் சிறந்து  விளங்கினார். இவர் பாராசூட்,ஹெலிகாப்டர் போன்ற மக்களுக்கு உபயோகமான பல கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.

அறிவியல் துளிகள்
 ண்களை திறந்துவைத்து தும்முவது சாத்தியமில்லை.

தினம் ஒரு மூலிகை – பேரரத்தை
(அரத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
 

பேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்.  
தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி.மலேசியா,லாவோஸ்,தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது.சளிஇருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்  - திராட்சை
திராட்சையைப் 'பழங்களின் அரசி என்கின்றனர். பச்சை/வெள்ளை, சிவப்பு/பர்பிள், கருப்பு/கருநீலம் எனப் பல நிறங்களில் கிடைக்கிறது.
இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்னைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும். திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்தக் குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும், வைரல் - பூஞ்சை நோய்த்தொற்றில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மைகொண்டது. இந்த ரசாயனப் பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களைத் தளர்வுறச் செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும் தன்மை திராட்சைக்கு உண்டு என்பதால், சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படுகிறது.
வைட்டமின் சி, , கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் ஓரளவுக்கு உள்ளன. தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வரலாற்றுச் சிந்தனை   இந்தியாதேசியக் காலண்டர்!

            சைத்ர மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட "சக' வருடக் காலண்டரே (1957 மார்ச் 22ஆம் தேதி காலண்டர்) மறு சீரமைப்புக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசியக் காலண்டர்.

தன்னம்பிக்கை கதை  -  பொறுமையும் பொறுப்பும்


விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்தபல்புஎடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்...?
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்...  தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச்சொன்னார். பல்பை கொண்டு வரும்போது, அது கைதவறி விழுந்து உடைந்துவிட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.
ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார். பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டுவிட்டனர்.
அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரது மனதை காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? மீண்டும் அவனிடமே பணியை கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால்தான் அப்படி செய்தேன்என்றார்.
எடிசனுக்கு வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது ஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.!!!

செயலி -  Speech To Text

இணையம் அறிவோம்  -  http://www.tnpscguide.in/
 

மரோடம்(செங்கருங்காலி)  | ஓவியம் வரைவது எப்படி?



No comments:

Post a Comment