அறிவுக்கு விருந்து – 01.07.2019 (திங்கள் )
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வானமே
பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த
வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.
மு.வரதராசனார் உரை:
மழை
பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள்
வழிபாடும் நடைபெறாது.
Translation:
If heaven grow dry, with feast and
offering never more, Will men on earth the heavenly ones adore.
Explanation:
If the heaven dry up, neither yearly
festivals, nor daily worship will be offered in this world, to the celestial.
சிந்தனைக்கு
கடுமையான உழைப்பு,விடாமுயற்சி,அதிகம் பேசாதிருத்தல் ஆகியவை
வெற்றியை பெற்றிடும்.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அறிஞன் -
அறிவாளி
அறிஞன் - படித்தோன்
அறிஞன் - சான்றோன்
அறிஞன் - கற்றோன்
பழமொழி
* களவும் கற்று மற*
பொருள்: தீய பழக்கமான
களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு,
மறந்து விட வேண்டும்.
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.களவு
– திருடுதல்; கத்து-
பொய் சொல்லுதல். தீய
பழக்கமான திருடுதல்,
பொய் சொல்லுதல் இவற்றை
ஒருவன் தன்வாழ்நாளில் மறந்து
ஒழுக்கமாக இருக்க
வேண்டும்.
Enrich your vocabulary
·
Trance...மெய்மறந்தநிலை
·
Tranquility...அமைதி
·
Transaction....வர்த்தகப்பரிமாற்றம்
·
Transact....பரி மாற்றம்செய்
·
Transfer.. இடமாற்றம் செய்
·
Transform...வேறு உருவம் கொடு
·
Transgress...வரம்பு மீறு
·
Trasient....நிலையற்ற
·
Transit....எடுத்துச்செல்லல்
·
Transition....கடந்து செல்லும் நிலை
Opposite Words
Exit x Entrance
Expensive
x Cheap
மொழிபெயர்ப்பு
CELERY – சிவரிக்கீரை
CILANTRO – கொத்தமல்லி
CLUSTER BEANS – கொத்தவரை
CILANTRO – கொத்தமல்லி
CLUSTER BEANS – கொத்தவரை
Proverb
* Many hands make light work*
Meaning
: If a lot of people carry a heavy object, it does not feel
heavy. That is the general meaning of this proverb. If everyone works
together to complete something—like cleaning, painting or group projects—then
each person has less to do. More importantly, the job will be completed
much more quickly.
இனிக்கும் கணிதம்
இரண்டிலிருந்து ஆறு வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மீதி ஒன்று வரும். ஆனால் ஏழால் வகுத்தால் மீதி ஒன்று வராது. அந்த எண் என்ன ?
இதற்கு இரு
விடைகள் உண்டு.
1) 301 2)
721
அறிவோம் அறிவியல்
சார்லஸ் பாபேஜ்
சார்லஸ் பாபேஜ்
கம்ப்யூட்டரின் தந்தை
என
அழைக்கபடுபவர்.
அறிவியல் துளிகள்
சூரியனிலிருந்து
புறப்படும் ஒளி
பூமியை
அடைய
8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது
தினம்
ஒரு மூலிகை – சுக்கு
சுக்கு (காய்ந்த இஞ்சி) உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகும்.
பழங்களும் அவற்றின்
பயன்பாடுகளும் – வாழை
தாது உப்புக்களைப் பொருத்தவரையில், தாமிரம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.
100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றைச் செய்கிறது. பொட்டாசியம் சத்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இதயத் துடிப்பைப் பாதிக்கச் செய்யும். எனவே, இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்வது அவசியம்.
வரலாற்றுச்
சிந்தனை
சிந்து
சமவெளிப் பகுதிகளில், அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட நகரங்களின் அடையாளங்கள், இந்தியாவின் தொன்மையையும் (கி.மு.6000 -கி.மு.1900 ) நாகரிகத்தையும் உலகுக்குப் பறை சாற்றுகின்றன. வெண்கலம்
மற்றும் இரும்பு ஆகிய உலோகங்கள் உபயோகத்தில்
வந்தன. வேதங்கள் இயற்றப்பட்டன. பின்னர் கங்கைக் கரைச் சமவெளிகளில் சிறுசிறு அரசுகள் உருவாயின.
தன்னம்பிக்கை கதை - நாளைய உணவு
சில வெள்ளாடுகளும், செம்ம்றி
ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில்
மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே,
இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு
கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால்
நாளை நம் அனைவருக்கும் உணவாகும்”
என்றது.
அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன்
வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது
இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு,
இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்”
என்றது காட்டமாய்.
இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன்
குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.
சில நாட்கள் சென்றன.
செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட
காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.
வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன. அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி
ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால்,
அவைகள் வேறு இடம் தேடிச்
சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக,
அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய
உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை
செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.
No comments:
Post a Comment