குறளறிவோம்- 4:
வேண்டுதல் வேண்டாமை
இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வரதராசனார் உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத
கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
Translation:
His foot, 'Whom want affects not,
irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.
Shall not, through every time, of any woes complain.
Explanation:
To those who meditate the feet of
Him who is void of desire or aversion, evil shall never come.
சிந்தனைக்கு
ஒழுக்கம் பிச்சைக்கார
வடிவத்தில் இருந்தாலும் அதற்கு உரிய மரியாதை அளிக்கப்படும்.
தமிழ் அறிவோம்
ஒத்தச்
சொற்கள்
அக்கினி - தீ
அக்கினி - நெருப்பு
அக்கினி - சுவாலை
அக்கினி - அழல்
அக்கினி - தணல்
அக்கினி - அனல்
அக்கினி - தழல்
பழமொழி
* குதிரை நல்லது சுழி கெட்டது*
விளக்கம்
- குதிரை பார்ப்பதற்கு அழகாக
இருந்தாலும் அதன் சுழி சரியில்லையென்றால் அதனை யாரும் வாங்க மாட்டார்கள்.
அதுபோலவே ஒருவன் நல்ல
திறமைசாலியாகவும், பலசாலியாகவும் இருந்தாலும அவன் குணம் சரியில்லாவிட்டால் நம்
அருகில் வைத்துக்கொண்டு இருப்பது நமக்கு ஆபத்தாகும்.
Enrich your vocabulary
·
Cab - வாடகைவண்டி
·
Cabbage - முட்டைகோசு
·
Cabinet - மந்திரிசபை
·
Cable - கம்பிக்கயிறு
·
Cactus - கள்ளி
·
Cadre - பதவிநிலை
·
Cage - கூண்டு
·
Calculate - கணக்கிடு
·
Calendar - நாட்காட்டி
·
Calender - நீராவி
உருளை
Opposite Words
Danger x Security
Dangerous x Safe
PROVERB *
Hope for the best, prepare for the worst*
MEANING In
any situation, be optimistic about the result, but always be ready for the
worst outcome.
EXAMPLE
“We’re going on vacation next week. It’s supposed to rain a lot, so we’re
bringing our umbrellas and a bunch of board games. Hope for the best, prepare
for the worst.”
இனிக்கும் கணிதம்
அறிவியல் அறிவோம்
ஒரு தேனீயால் ஒரு தடவைதான் கொட்ட முடியும். முதல் தடவையே அது தனது கொடுக்கை
இழந்துவிடுகிறது.
உயிர்ச்சத்து பி5 (விட்டமின் பி5)
இதனுடைய வேதியியல் பெயர்
பான்டாதெனிக் அமிலம்
ஆகும்.
புரதங்கள், மாவுப்பொருட்கள் மற்றும் கொழுப்பினைத் தொகுக்கவும், வளர்ச்சிதை மாற்றம் செய்யவும் இது
அவசியமானதாகும்.
இது தானியங்கள், பயிறுவகைகள், முட்டை,
இறைச்சி, தேன்,
தயிர்,
பிரேக்கோலி, அவகோடா,
காளான்கள், ஈரல்,
ஸ்டாபெர்ரி ஆகியவற்றில் உள்ளது.
இதன் குறைபாட்டால் பாரஸ்தீஸ்சியா என்ற
சருமநோய் ஏற்படும்.
இதனை
அதிகமாக உட்கொண்டால் நெஞ்சு
எரிச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி
ஏற்படும்.
ஒரு நாளை
தேவைப்படும் அளவு
5 மில்லிகிராம் ஆகும்.
தினம் ஒரு மூலிகை ---- அரசு
அரசு என்பது
பெரிதாக வளரக்கூடிய ஒரு
மரமாகும். அரசு,
ஆல்,
அத்தி
போன்றவை தொடர்புடைய மரங்கள் ஆகும்.
இம்மரம் பாலைக்
கொண்டுள்ளது. மிகுதியான ஆக்ஸிஜனை வெளியிடும். 30 மீட்டர் உயரம்
வரை
வளரக்கூடிய இத்
தாவரத்தின் அடி
மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை
வளரக்கூடியது. இது
இந்தியா, இலங்கை,
தென்மேற்குச் சீனா,
இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற
பகுதிகளைச் சார்ந்தது. இதன்
இலை
நீண்ட
கூரிய
முனையுடன் கூடிய
இதய
வடிவம்
கொண்டது. இம்மரம் இந்து
பௌத்த
மதங்களில் முக்கிய இடம்
பெற்றுள்ளது. புத்தர் ஞானம்
பெற்றதாக குறிப்பிடப்படும் போதி
மரம்
இதுவேயாகும் (சமஸ்கிருதத்தில்-போதி).
இந்திய அரசால்
வழங்கப்படும் பொதுப்
பட்டங்களில் மிக
உயர்ந்த பட்டமான பாரத
ரத்னா
பட்டம்
அரச
இலையைக் கொண்டுள்ளது
.
வரலாற்றுச் சிந்தனை
அசோகர்-கலிங்கத்துப் போரை
வென்றபின் போரை
வெறுத்து புத்த
மதத்தை
தழுவினார். புத்த
மதத்தை
ஆசியா
முழுவதும் பரவச்
செய்ய
முயற்சிகள் மேற்கொண்டார்.
தன்னம்பிக்கை கதை - *வறுமை*
சோம்பலால்
வறுமையில்
வாடிய
ஒருவன்
ஒருமகானைச்
சந்தித்து,
தனது
வறுமையைப்
போக்கும்படி
வேண்டினான். அவனது சோம்பலை
உணர்ந்த
அந்த
மகான்
அவனுக்கு
அதை
உணர்த்த
ஒரு
கதையைக்
கூறினார்
-
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு
அந்தப்
பறவை,
""மனிதனே
நான்
என்
உணவைத்
தேடுகிறேன்.
தேடினால்
கிடைக்கும்...''
என்றது.
அவன்
பார்த்துக்
கொண்டிருக்கும்போதே,
தொடர்ந்து
மரத்தைக்
கொத்தி,
மரத்தில்
ஓட்டை
போட்டு,
அதற்குள்
பதுங்கியிருந்த
புழுக்களை
எடுத்து
உண்ண
ஆரம்பித்தது.
தனது
உணவைச்
சாப்பிட்டு
முடித்த
பிறகு,
அந்த
மனிதனைப்
பார்த்து,
""மனிதனே,
நீயும்
தேடு...
மரத்திலும்,
மண்ணிலும்,
நீரிலும்
ஏன்
எல்லா
இடங்களிலும்
தேடு.
உனக்கும்
ஏதாவது
கிடைக்கும்''
என்றது.
கதையைச்
சொல்லி
முடித்த
மகான்,
""நீயும்
இந்தப்
பரந்த
உலகத்தில்
தேடு.
உனக்கும்
ஏதாவது
கிடைக்கும்.
சோம்பேறியாக
இருந்தால்
வறுமைதான்
கிட்டும்''
என்றார்.
No comments:
Post a Comment