அறிவுக்கு விருந்து – 25.07.2019
(வியாழன்)
குறளறிவோம்- 36 - அறன்வலியுறுத்தல்
அன்றறிவாம் என்னாது
அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறகு
பார்த்துக்கொள்ளலாம் என்று
நாள்
கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது
ஒருவர்
இறந்தபின் கூட
அழியாப் புகழாய் நிலைத்துத் துணை
நிற்கும்.
மு.வரதராசனார் உரை:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று
எண்ணாமல் அறம்
செய்ய
வேண்டும். அதுவே
உடல்
அழியும் காலத்தில் அழியா
துணையாகும்.
Translation:
Do deeds of virtue now. Say not,
'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that
never dies.
Explanation:
Defer not virtue to another day;
receive her now; and at the dying hour she will be your undying friend.
சிந்தனைக்கு
சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல. கவலையை மற(றை)க்க கற்று
கொண்டவர்கள்.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அரமியம்
- நிலாமுற்றம்
அரமியம் - உட்பரிகை
விடுகதை விடையுடன்
ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால்
தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது அக்குற்றம் என்ன? –தற்கொலை
பழமொழி
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
பொருள்/Tamil
Meaning: மற்ற
வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன்
வசூலிப்பதில் வீரம்
காட்டும் ஒரு
பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல்
செய்துவிட்டுப் பின்
வராத
கடன்களைப் பற்றி
யோசிக்கவேண்டும் என்பது
செய்தி.
Transliteration : Vantatai varappatuttata
valakkaattu ramaa?
தமிழ் விளக்கம்/Tamil Explanation
: அது
என்ன
வலக்காட்டு ராமா?
வலம்
என்றால் வலிமை,
கனம்,
ஆணை.
ராமன்
என்பது
ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம்
காட்டும் ராமன்
என்பது
வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு
விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.
Enrich
your vocabulary
·
Perplexed...குழப்பமான
·
Listener.......கவனிப்பவர்
·
League.......தொடர்ந்து
·
Immunity....நோய்எதிர்ப்புசக்தி
·
Lateral.....பக்கம்
·
Horizontal....படுக்கைக்கோடு
·
Vertical.....குறுக்குக்கோடு
equation......சமன்பாடு
·
Formula.....சூத்திரம்
·
Informal......முறைசாராதது
Opposite Words
Ally x
Enemy
- Ridley was one of the Queen’s closest allies.
- He was accused of collaboration with the enemy.
Alone x Together
- She lives alone.
- We’ve very much enjoyed working together.
மொழிபெயர்ப்பு
Cabbage
|
முட்டைக்கோசு
|
Capsicum / Bell Pepper
|
குடை
மிளகாய்
|
Proverb
Be just before you are generous
ஆற்றில் போட்டாலும் அளந்து
போடு
இனிக்கும் கணிதம்

இவருடைய
“Mock Theta Functions” எனும்
அராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும். இவர்
1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே
3000 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
அறிவோம் அறிவியல்
நீங்கள் விளையாடும் போது
கீழே
விழுந்தோ அல்லது
வெட்டுக் காயம்
ஏற்பட்டால், உடனே
காயத்தை சுத்தமான பஞ்சால் சுத்தம் செய்து
கிருமி
நாசினியை தடவ
வேண்டும். இரண்டு
நாட்களுக்கு பிறகு
கவனித்தால் வெண்மை
கலந்த
பழுப்பு நிற
திரவம்
வெளியேறும். இதை
"சீழ்'
என்று
அழைப்பர்.
காயம் பட்டவுடன் அந்த
இடத்திலுள்ள மண்
மற்றும் காற்றில் கலந்துள்ள பாக்டீரியா காயம்
வழியாக,
உடலுக்குள் செல்ல
முயற்சிக்கிறது. அதே
சமயம்
நமது
உடலில்
இருந்து ரத்தம்
வெளியேறுகிறது. அப்போது ரத்தத்தில் உள்ள
வெள்ளை
அணுக்கள் பாக்டீரியாவை தாக்குகிறது. ஒருபுறம் காயம்பட்ட இடத்தில் ரத்த
சிவப்பு அணுக்கள் உறைய
ஆரம்பிக்கிறது. ரத்தத்திலுள்ள வெள்ளை
அணுக்கள் தொடர்ந்து பாக்டீரியாவை அழிக்கிறது. இறந்த
பாக்டீரியாக்கள் இறந்த
வெள்ளை
அணுக்கள் பிளாஸ்மா மற்றும் காயம்பட்ட இடத்திலிருந்து திசுக்கள் அனைத்தும் சேர்ந்து "சீழ்' ஆக
உருவாகிறது. சிலசமயம் சீழுடன் அதிக
ரத்தமும் சேர்த்து காயம்பட்ட இடம்
வீங்கி
சிகப்பு நிறத்தில் காணப்படும். இதைத்தான் "சீழ்க்கட்டி' விட்டது என்கிறோம்.
அறிவியல் துளிகள்
பிறக்கும்
2000 குழந்தைகளில்
ஒரு குழந்தை
பற்களுட பிறக்கின்றன.
தினம் ஒரு மூலிகை – சீரகம்☘*
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் வேப்பம்பழம்:
பொதுவாக
இந்த பழத்தை (Fruit Benefits In Tamil) அனைவரும் விரும்பி
சாப்பிடுவதில்லை, இந்த
பழம் நன்றாக முற்றி
மரத்தில் இருந்து
தானாக கிழே விழும்
பழங்கள் மிகவும்
இனிப்பாக இருக்கும்.
இந்த
பழத்தை நாம் சாப்பிட்டால்
உடலுக்கு எந்த
ஒரு நோயும் அண்டாது
மற்றும் இது
பித்தத்தை தணிக்கும்
தன்மை வாய்ந்தது. இவற்றை
அதிகமாக நாம்
உட்கொண்டால் சொரி,
சிரங்கு, தோல்
நோய்கள் ஆகியவை
குணமாகும்.
வரலாற்றுச் சிந்தனை
STATE OF THE STATE CONCLAVE 2016 எங்கு நடைபெற்றது? – புதுடெல்லி
.
தன்னம்பிக்கை
கதை – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன. அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்
செயலி - Latest Periodic Table 2018
No comments:
Post a Comment