அறிவுக்கு விருந்து – 10.07.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 10.07.2019 (புதன்)
குறளறிவோம்-  25  - நீத்தார் பெருமை


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
கலைஞர் மு.கருணாநிதி உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வரதராசனார் உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
Translation: Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell.
Explanation:  Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.
சிந்தனைக்கு
எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும், உண்மையைத்தவிர.”

தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
                                    அளை          -           புற்று
                                    அளை          -           குகை

விடுகதை விடையுடன்
கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார் ஆனாலும் நல்லவர் அவர் யார் அவர்?                             தையல்காரர் 

பழமொழி  
* புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
பொருள்: மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.
உண்மையான பொருள்: புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.        மனது புண்பட்டிருக்கும் போது,  தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

Enrich your   vocabulary
·         Guide....வழிகாட்டி 
·         Guild....சங்கம் 
·         Guilt....குற்றம் 
·         Guinea....நாணயம் 
·         Guitar.....யாழ் 
·         Gulf....வளைகுடா 
·         Gull....கடற்பறவை 
·         Gulp....விழுங்கு 
·         Gum....கோந்து 
·         Gunny....கோணிப்பை 

Opposite Words 
Able —— Unable
  • You must be able to speak French for this job.
  • She was unable to hide her excitement.
Abortive —— Successful
  • During the war of 1770 the Greeks had risen in an abortive rebellion, promptly crushed by the Turks.
  • They were successful in winning the contract.
மொழிபெயர்ப்பு
·         PLANTAIN – வாழைக்காய்
·         POTATO – உருளைக்கிழங்கு

Proverb

Good things come to those who wait.

Patience is often rewarded.
Example: The best investors in the world have made their fortunes by investing for the long term. Good things come to those who wait.

இனிக்கும் கணிதம்
            வட்ட வடிவ கடிகாரத்தை பார்த்திருக்கிறீர்கள் தானே. அந்த கடிகாரத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அதை 6 துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு துண்டிலும் கிடைக்கும் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை ஒரே மாதிரி வர வேண்டும்.
கடிகாரத்தில் உள்ள எல்லா எண்களின் கூட்டுத்தொகை 78. ஆகவே, ஆறு துண்டுகளில் ஒவ்வொன்றிலும் எண்களின் கூட்டுத்தொகை 78 /6 = 13 என்று வர வேண்டும். இதன் அடிப்படையில் 12 + 1, 11+ 2, 10 + 3, 9 + 4, 8 + 5, 7 + 6 எனப் பிரிக்கலாம்.

அறிவோம் அறிவியல்
இடது நுரையீரலைவிட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது. 

அறிவியல் துளிகள்
பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது. நோய் எதிர்ப்பாற்றலைமிகுதிப்படுத்தலாம். நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம்.
 
தினம் ஒரு மூலிகை – அழுகண்ணி
அழுகண்ணி (drosera burmanni) என்பது கிடைப்பதற்கு அரிதான ஒரு காயகற்ப மூலிகை ஆகும். இது ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்துச் செடி. இம் மூலிகைக்கு வடமொழியில் ருதந்தி என்றும் சாவ்வல்யகரணி என்றும் பெயர் உண்டு. இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாகவும் கடலை இலையினைப் போலவும் இருக்கும். இதன் இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து கொண்டே இருக்கும். அதனால் இந்தச் செடிக்கு அடியில் பூமியில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்புச் சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்த்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை. இது ஒரு பூண்டு வகையைச் சார்ந்தது என்று ஆங்கிலத்தில் கூறுவர். சதுரகிரி மலையில் இம் மூலிகை இருக்கிறது.

மருத்துவ குணங்கள்

இதனை முறைப்படி 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாம். இக் காயகற்ப மூலிகையை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது. கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்தஅந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது. நம் ஊரில் கிடைக்கக்கூடிய சில முக்கியமான பழங்கள், அவற்றின் பலன்கள், எடுத்துக்கொள்ளும் முறைகள், தவிர்க்க வேண்டியவை பற்றி மூத்த டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி பட்டியலிடுகிறார். பலம் தரும் பழங்களை நம் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம்.
ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒருவரின் வயது, பாலினம் மற்றும் அவரது உடல் உழைப்பைப் பொருத்து பழங்கள் எடுத்துக்கொள்ளும் அளவு வேறுபடும். பொதுவாக எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்று அட்டவணையில் தெரிவித்துள்ளோம். இருப்பினும் அவரவர் கலோரி தேவையைப் பொறுத்து இதற்கு மேலும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
வரலாற்றுச் சிந்தனை
                             சேரமன்னர்கள் ரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தனர்; பாண்டியன் முடத்திருமாறன் மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவன்.


தன்னம்பிக்கை கதை  -  செய்வன திருந்தச் செய்
 
நீதி: மனசாட்சி
உபநீதி : நேர்மை பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.
ஒரே கோவிலுக்கு இரண்டு அம்மன் சிலைகள் செய்கிறீர்களேஏன்?” என்று கேட்டார் பணக்காரர். “ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.
இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.
அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.
நீதி:  எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது

செயலி - Vaimozhi - Tamil Voice to Text Speech Translation

https://play.google.com/store/apps/details?id=com.tamil.text&hl=en_US


இணையம் அறிவோம்  -  https://learninglab.si.edu/discover
பாரம்  மலர் / ஓவியம் வரைவது எப்படி

No comments:

Post a Comment