அறிவுக்கு விருந்து – 23.07.2019
(செவ்வாய்)
குறளறிவோம்- 34 - அறன்வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன்
ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
ஆகுல நீர பிற.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மனம்
தூய்மையாக இருப்பதே அறம்;
மற்றவை
ஆரவாரத்தைத் தவிர
வேறொன்றுமில்லை.
மு.வரதராசனார் உரை:
ஒருவன்
தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க
வேண்டும். அறம்
அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத
மற்றவை
ஆரவாரத் தன்மை
உடையவை.
Translation:
Spotless be thou in mind! This only
merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can
claim.
Explanation:
Let him who does virtuous deeds be
of spotless mind; to that extent is virtue; all else is vain show.
சிந்தனைக்கு
நோயைவிட அச்சமே கொல்லும்
தமிழ்
அறிவோம் ஒத்தச் சொற்கள்
அபிப்ராயம்
- கருத்து
அபிப்ராயம் - ஏடல்
விடுகதை விடையுடன்
ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன் ஆனால் நீரைக் குடிக்கத்
தந்தால் இறந்துவிடுவேன் நான் யார்? - நெருப்பு
பழமொழி
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்/Tamil Meaning - ஒரு மஹாகவியின் தாக்கம் அவர்
வீட்டில் உள்ள
பொருட்களிலும் பயிலும் என்பது
செய்தி.
Transliteration
- Kampan veettuk kattut tariyum
kavipatum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation - ’கம்பன் வீட்டு
வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது
இப்பழமொழியின் இன்னொரு வழக்கு.
வெள்ளாட்டி என்பவள் வீட்டு
வேலைகள் செய்யும் வேலைக்காரி.’கட்டுத் தறி’
என்பது
என்ன?
தறி
என்றால் நெசவு
என்பதால் கம்பர்,
வள்ளுவர் போல
நெசவுத் தொழில்
செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி
உள்ள
கட்டுக் கதைகளில் அவர்
நெசவாளர் என்ற
செய்தி
இல்லை.
சிலர்
’கட்டுத் தறி’
என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று
பொருள்
கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’
என்றதன் சரியான
பொருள்
’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச்
சுவடிகள்’ என்றே
படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச்
சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே,
கம்பர்
பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப்
படாமல்
காலியாக உள்ள
கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே
சரியான
விளக்கம் என்று
தோன்றுகிறது.
பழமொழி குறிக்கும் சாணிப்
பிள்ளையார் மார்கழி மாதம்
பெண்கள் வீட்டு
வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன்
நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு
ஒரு
பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு
புது
சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய
பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்? கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம்
வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள்
பிள்ளையார், களிமண்
பிள்ளையார் போன்று
பொதுஜன
பிள்ளையார் உருவங்கள் நாம்
மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே
செய்யப்படுவதைப் பழமொழி
சுட்டுகிறது எனலாம்.
Enrich
your vocabulary
·
Fuel..... எரிபொருள்
·
Fulcrum.....ஆதாரம்
·
Fulfill.....நிறைவேற்றும்
·
Full....முழுமையான
·
Fun...வேடிக்கை
·
Function....vizha
Opposite Words
Agree X Disagree
Opposite
words examples:
- If she felt he was right, she would agree with him.
- He is tolerant of those who disagree with him.
Alive X Dead
- It was a bad accident – they’re lucky to be alive.
- Two men were shot dead by terrorists.
மொழிபெயர்ப்பு
Black-eyed pea, cowpea
|
காராமணி, தட்டாப் பயறு
|
Bottle Gourd/Calabash
|
சுரைக்காய்
|
Proverb
A leopard can’t/ doesn’t change its spots.
A person can’t change its innate character, especially bad.Example: X: Do you think he’ll stop copying after being caught and penalized? Y: I don’t think so. A leopard can’t change its spots.
இனிக்கும் கணிதம்
கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
இராமானுஜன் ஆய்வுகளில் “ Theory Of Equation” , “ Theory
Of Numbers” , “ Definite Integrals” , “Theory Of Patricians” , “Elliptic
Functions and Continued Fractions” எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
அறிவோம் அறிவியல்
மனிதனின்
மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
அறிவியல் துளிகள்
மண்ணுக்கும்
மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர்
– சார்லஸ் டார்வின்
தினம்
ஒரு மூலிகை – கருவேப்பிலை
கறிவேம்பு, கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya
koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.
வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
கறிவேப்பிலை சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல், தொண்டக்
கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.இதனைதொடர்ந்துஉட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
சொல் விளக்கம் : கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry
leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - மங்குஸ்தான்
பழம்:
ஸ்ட்ராபெரி சுவை
போல்
இருக்கும் இந்த
மங்குஸ்தான் பழம்
மிக
சிறந்த
மருத்துவம் குணம்
கொண்டது.
இந்த பழம்
(Fruit Benefits In Tamil) குறிப்பாக வயிற்று போக்கை
குணப்படுத்தும் தன்மை
வாய்ந்தது.
வரலாற்றுச் சிந்தனை
இந்தியாவின் முதல்
ரொக்க
பரிவர்தனை இல்லாத
கிராமமான அகோதராவை தத்து
எடுத்த
வங்கி
எது
? – ICICI வங்கி
தன்னம்பிக்கை
கதை – தன் கையே தனக்கு உதவி
மணி
சீருடையை தேடினான் காணவில்லை."அம்மா பள்ளி சீருடை எங்கே காணோம்.எடுத்துக் கொடுங்கள் " எனக் கத்தினான் மணி.
அடுப்படியில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருந்த சீதா, மகன் கூப்பிட்ட சத்தம் கேட்டு சாம்பார் பாத்திரத்தை இறக்க முற்பட்டதால் கைதடுமாறி சாம்பார் சிறிது கையில் கொட்டிவிட்டது.
அடுப்படியில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருந்த சீதா, மகன் கூப்பிட்ட சத்தம் கேட்டு சாம்பார் பாத்திரத்தை இறக்க முற்பட்டதால் கைதடுமாறி சாம்பார் சிறிது கையில் கொட்டிவிட்டது.
"அம்மா" என
அலறியவள் ,தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு மகன் இருந்த இடத்திற்கு
வலியைப் பொறுத்துக் கொண்டு வந்தவள்….
‘என்ன, மணி ”என்றாள். ‘அம்மா சீருடையை எடுத்துத் தாருங்கள் ‘ என்றான் மணி.
நான்கு நாட்கள் உடுத்திய துணிகள் அழுக்காக இருந்தது.அழுக்கு கூடையில் போட்டு இருந்த சீருடையில் கொஞ்சம் வெள்ளையாக இருந்ததை எடுத்து கைகளால் அழுத்தி உதறி தன் மகனிடம் நீட்டினாள் சீதா.
‘என்ன, மணி ”என்றாள். ‘அம்மா சீருடையை எடுத்துத் தாருங்கள் ‘ என்றான் மணி.
நான்கு நாட்கள் உடுத்திய துணிகள் அழுக்காக இருந்தது.அழுக்கு கூடையில் போட்டு இருந்த சீருடையில் கொஞ்சம் வெள்ளையாக இருந்ததை எடுத்து கைகளால் அழுத்தி உதறி தன் மகனிடம் நீட்டினாள் சீதா.
”என்னம்மா
, அழுக்குத் துணியை எடுத்துக் கொடுக்குறீர்கள் ” என்றான் மணி.
”நாலு நாட்களாய் இந்த வேலைக்காரி கோமதி வராமல் துணி துவைக்கவில்லைடா ,என் செல்லமில்ல… இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்க ” என்றாள் கெஞ்சலாக சீதா. ”சரி கொடுங்க நீங்களாவது துவைத்து போட்டு இருக்கக் கூடாதா ? நான் ஒழுங்கீனமாக போய் நிற்கவேண்டும். ஆசிரியர் என்னைத் திட்டவேண்டும். அதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்க வேண்டும்.எல்லாம்….. ‘ எனக் கூறியவன் முடிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டான்.
”நாலு நாட்களாய் இந்த வேலைக்காரி கோமதி வராமல் துணி துவைக்கவில்லைடா ,என் செல்லமில்ல… இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்க ” என்றாள் கெஞ்சலாக சீதா. ”சரி கொடுங்க நீங்களாவது துவைத்து போட்டு இருக்கக் கூடாதா ? நான் ஒழுங்கீனமாக போய் நிற்கவேண்டும். ஆசிரியர் என்னைத் திட்டவேண்டும். அதைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்க வேண்டும்.எல்லாம்….. ‘ எனக் கூறியவன் முடிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டான்.
சீதா
எப்படியோ சீருடை பிரச்சினை முடிந்தது என்று எண்ணியபடி சமையல் அறைக்கு நழுவினாள். சாப்பாடு
எடுத்து வைக்கப் பாத்திரத்தைப் பார்த்தாள், கழுவாத பாத்திரங்கள் நிறைந்து கிடந்தது. அதில் தேடி கழுவி எடுத்தவள்
,அரக்கப் பரக்க சாதத்தைக் கொடுத்து மணியை கிளப்பிக் கொண்டு இருக்கும் போதே,,,பள்ளிப் பேருந்து வந்து விட்டது, மணி எல்லாவற்றையும் எடுத்துக்
கொண்டு ஓடினான்.
அதற்குள்
அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என கோபி வந்து
விட்டான். அவனுக்கும் தோசை சுட்டு எடுத்து
வைத்தவள் வியர்த்து விறுவிறுத்து இருந்தாள்.
தோசை வைக்கும் போது கைகளில் கொப்பளித்து இருப்பதைப் பார்த்த கோபி ‘என்ன காயம்’ என்றான். ”சாம்பார் கொட்டி விட்டது” என்றாள் சீதா.
‘இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லையா? சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுகிறாள் .நீ கிடந்து அல்லல் படுகிறாய்’ என்ற கோபி…..
தோசை வைக்கும் போது கைகளில் கொப்பளித்து இருப்பதைப் பார்த்த கோபி ‘என்ன காயம்’ என்றான். ”சாம்பார் கொட்டி விட்டது” என்றாள் சீதா.
‘இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லையா? சொல்லாமல் கொள்ளாமல் நின்று விடுகிறாள் .நீ கிடந்து அல்லல் படுகிறாய்’ என்ற கோபி…..
…தொட்டதற்கு
எல்லாம் வேலைக்காரி உதவியே தேவை என்று பழகிக்
கொண்டால் அவள் வரவில்லை என்றால்
இப்படித்தான் வீடு தலைகீழாக மாறிவிடும்
‘.
”தன் கையே தனக்கு உதவி” ,பிறர் கையை எதற்கு எடுத்தாலும் எதிர் பார்த்தால் இப்படி தொல்லைகளும், மனகஷ்டங்களும் வரத்தான் செய்யும் ” என்றவன் அலுவலகம் கிளம்பினான். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.வேலைக்காரி இருக்கிறாள் என்ற எந்த வேலையும் தான் செய்வதில்லை. அதனால் , அவள் வராத நாட்கள் எல்லாமே போராட்டம் தான் என நினைத்தாள் சீதா, தன் கொப்பளித்த கையைப் பார்த்துக் கொண்டு.
”தன் கையே தனக்கு உதவி” ,பிறர் கையை எதற்கு எடுத்தாலும் எதிர் பார்த்தால் இப்படி தொல்லைகளும், மனகஷ்டங்களும் வரத்தான் செய்யும் ” என்றவன் அலுவலகம் கிளம்பினான். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.வேலைக்காரி இருக்கிறாள் என்ற எந்த வேலையும் தான் செய்வதில்லை. அதனால் , அவள் வராத நாட்கள் எல்லாமே போராட்டம் தான் என நினைத்தாள் சீதா, தன் கொப்பளித்த கையைப் பார்த்துக் கொண்டு.
செயலி - Science Experiments in School Lab - Learn with Fun
No comments:
Post a Comment