அறிவுக்கு விருந்து – 31.07.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 31.07.2019 (புதன்)
குறளறிவோம்-  39 - அறன்வலியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
கலைஞர் மு. கருணாநிதி உரை: தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
மு.வரதராசனார் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
Translation: What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light.
Explanation: Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.
சிந்தனைக்கு
ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு   புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு    எளிதில் வெற்றி பெறுவாய்.
 தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                      அகம் – உள்                                                                                                                             அகம்-நிந்தை                                                                                                                         
அகம் -  இதயம்
விடுகதை விடையுடன்
கருப்பு நிறமுடையவன்  கபடம் அதிகம்  கொண்டவன்  கூவி அழைத்தால்  வந்திடுவான்  கூட்டன்  சேர்த்தும்  வந்திடுவான் அவன் யார் ? காகம்
பழமொழி  
ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
பொருள்/Tamil Meaning
தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும்.
Transliteration
anti makan antiyanal, neram arintu canku uthuvaan.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
குலவிச்சை கல்லாமல் பாகம் படும்என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும்.
Enrich your   vocabulary
·         Protested.....எதிர்த்தல் 
·         Nightmare.......இரவுக்கனவு 
·         Interfering......குறுக்கீடு Rambling......உலாத்துதல் 
·         Sprout...முளைவிடுதல் 
·         Spectacles.....மூக்குக்கண்ணாடி 
·         Spectacular......காண்பதற்கினிய 
Opposite Words 
Answer  X  Question
Opposite words examples:
  • The short answer is that it can’t be done.
  • They asked me quite a lot of difficult questions about my job.
Apparent  X  Obscure
  • The difference in quality was immediately apparent.
  • I found her lecture very obscure.
மொழிபெயர்ப்பு
Chilli, Red chilli
சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
Cluster Beans, French Beans
கொத்தவரங்காய்
Proverb

Never test the depth of water with both feet.

If you’re in water with both feet down, you risk being swept away by the currents. The message is: don’t put all your eggs in the same basket. Think twice before placing all your bets and investments on one thing.
Example: While applying to colleges, don’t limit yourself only to those with high cutoff marks. Never test the depth of the water with both feet.

இனிக்கும் கணிதம்

            கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
முதலில் வியப்பூட்டும் ராமானுஜரின்மேஜிக் ஸ்கொயர்எனப்படும் மாயாஜால சதுரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்த மேஜிக் ஸ்கொயரில் வியப்பு என்னவென்றால், கட்டத்தில் உள்ள எண்களை நீள்வாக்கிலோ, குறுக்குவாக்கிலோ கூட்டினால் 139 என்ற கூட்டுதொகை கிடைக்கும். மேலும் நான்கு மூலைகளில் உள்ள எண்களை கூட்டினாலும், நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையை கூட்டினாலோ கூட்டு எண் 139 தான் வரும். அதுமட்டுமல்லாமல் அந்த கட்டங்களில் உள்ள எண்களை நான்கு சதுரமாக பிரித்து அவைகளை கூட்டினாலும் அதன் கூட்டுத் தொகை 139. ஆச்சரியம் தரும் இந்த கணித சதுரம், ராமானுஜரின் மேஜிக் ஸ்கொயர் என்று கணித உலகில் போற்றப்படுகிறது.
இதில் மிகவும் சுவாரசியமான, அதே சமயம் கவனிக்க வேண்டிய கூடுதல் தகவல் என்னவென்றால் அந்த கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள முதல் வரிசையில் இருக்கும் 22, 12, 18, 87 என்ற எண்கள் ராமானுஜரின் பிறந்த நாளை (22–12–1887)  காட்டுகின்றன.

அறிவோம் அறிவியல்                                                                                  
வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும்  பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
அறிவியல் துளிகள்
எலக்ட்ரான் - J.J.தாம்சன்
தினம் ஒரு மூலிகை – தேள் கொடுக்கி 
தேள் கொடுக்கி (HELIOTROPIUM INDICUMஆனை வணங்கிஆசியா கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இத்தாவரம் மற்றத் தாவரங்களின் ஊடே வருடாவருடம் களையாக முளைக்கும் தன்மைகொண்டது. இவை 15 செ.மீ முதல் 50 செ. மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் தண்டுப்பகுதி முடிகள் அடர்ந்து நீள் சதுரவடிவில்  முட்டைபோன்ற இலைகளைக்கொண்டு காணப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் சிறியதாகவும் பச்சை புள்ளிகளைக்கொண்டும், ஐந்து மகரந்த பைகள் அல்லிவட்டத்தில் சேர்ந்தும் காணப்படுகிறது. மேலும் இதன் பூவின் வடிவம் ஒரு முனைப் பாணியுடன் நான்கு கூரிய கருப்பையுடன் காணப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் பேரிச்சம் பழம்
இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் .பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.
வரலாற்றுச் சிந்தனை                                                                         
மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன ?–  SABUJSATHI
தன்னம்பிக்கை கதை பச்சை பச்சையாய்!
ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது. சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.
இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது.
கிணற்றின் உள்ளே ஓரமாக படியும் இருந்தது. அதன் வழியே மெதுவாக கீழே இறங்கிவிட்டது. பசுமையான புல்லை மேய்ந்து, தண்ணீரும் குடித்தது. கிணற்றின் அடிப்பகுதிக்கு சென்றது. சரி இனிமேல் மேலே செல்லலாம் என முயற்சி செய்து படிகளில் ஏறப் பார்த்தது. பாவம், அதனால் ஏற முடியவில்லை.
படிகளின் இடைவெளி அதிகமாகவும், உயரமாகவும் இருந்ததால் அதன் முன் கால்களை வைத்து மேலே ஏற முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் கீழேயே விழுந்து விட்டது. அதனால் கிணற்றின் மேலே ஏறிவர முடியவில்லையே என எண்ணி மிகவும் வேதனை அடைந்தது. தன் நிலையை நினைத்து, உள்ளே நின்று கத்திக் கொண்டே இருந்தது.
அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது."கிணற்றுக்குள் இருந்து தானே ஆட்டின் சப்தம் வருகிறது' என நினைத்த குரங்கு, கிணற்றில் எட்டிப் பார்த்தது. கிணற்றின் உள்ளே ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும், ""எப்படி உள்ளே குதித்தாய்?'' எனக் கேட்டது.
""தண்ணீர் குடிக்கத்தான் இப்படி கிணற்றுக்குள் இறங்கினேன். ஆனால், மீண்டும் என்னால் ஏறி வர முடியவில்லை.'' அதைக் கேட்ட குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.
""ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும். ஆராயாமல் இப்படிச் செய்து விட்டு, சிரமப்படக் கூடாது. என்னாலும் உனக்கு உதவ முடியவில்லையே ... இருப்பினும் கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கூறிச் சென்று விட்டது.

நீதி: கண்களுக்கு பார்த்ததும் அழகாக தோன்றுகின்ற எல்லாத்தையும் உடனே ஆசைபட்டுவிடக்கூடாது. அதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டு தான் செயல்படணும். சரியா!

இணையம் அறிவோம் https://www.scholastic.com/teachers/bookwizard/

Horse drawing easy | How to draw a horse                       

 https://www.youtube.com/watch?v=HgELGiqdtaY

No comments:

Post a Comment