அறிவுக்கு விருந்து – 08.07.2019 (திங்கள )


அறிவுக்கு விருந்து – 08.07.2019 (திங்கள் )
குறளறிவோம்-  23  - நீத்தார் பெருமை


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
மு.வரதராசனார் உரை:பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
Translation:   Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtue's robe arrayed.
Explanation:    The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
சிந்தனைக்கு
கௌரவம் நமது நேர்மையான உழைப்பில் இருக்கிறது
தமிழ் அறிவோம்
     ஒத்தச் சொற்கள்
                                    அரை            -           இடுப்பு
                                    அரை            -           பாதி

விடுகதை விடையுடன்
நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன செடி?
                                                                        முடி
பழமொழி  
* வீட்டுக்கு வீடு வாசப்படி!! *
பொருள்: ஒவ்வொரு வீட்டுக்கும் ஓவ்வொரு பிரச்னை இருக்கும்.
உண்மையான பொருள்: மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும்  வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

Enrich your   vocabulary
·         Veil....மறைப்பது 
·         Vein....narambu
·         Velocity......வேகம் 
·         Vend.....விற்பனைசெய் 
·         Venerable.....வணங்கற்குரிய 
·         Veneration......பெருமதிப்பு 
·         Vengeance......பழிக்குப்பழி 
·         Venom......விஷம் 
·         Versatile.....பலதிறமைகளுடைய 
·         Veteran.....அனுபவம்மிக்க 

Opposite Words
            Rest     x          work
            Right   x          Left
மொழிபெயர்ப்பு
·       LADY’S FINGER – வெண்டைக்காய்
·       LEAFY ONION – வெங்காயக் கீரை
·       LEEK – இராகூச்சிட்டம்
·       LETTUCE – இலைக்கோசு
·       LOTUS ROOT – தாமரைக்கிழங்கு
Proverb
* Learn to walk before you run. *
Do things in the right order, from simple to more complicated. For example, do not try to read a difficult English novel when you’re just starting to learn English. If you try to jump ahead, you will most likely fail—just like a child who tries to run before learning to walk will fall. All things will come in time, but you must be patient and go through the proper process.

இனிக்கும் கணிதம்

            ஒரு வண்டியில் 24 பெரியவர்கள் அல்லது 30குழந்தைகள் மட்டுமே ஏறிக்கொள்ளமுடியும். தற்போது 20 பெரியவர்கள் ஏறி இருக்கிறார்கள்  அவ்வண்டியில் எத்தனை குழந்தைகள் ஏறிக்கொள்ள முடியும்?

அவ்வண்டியில் 20 பெரியவர்கள் ஏற்கனவே உள்ளனர். மீதமுள்ள 4 பெரியவர்களுக்குப்பதிலாக 5 குழந்தைகள் ஏறிக்கொள்ள முடியும்.

அறிவோம் அறிவியல்
ராடான் வாயு இரும்பைவிட கனமானது
அறிவியல் துளிகள்
லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே று கையில் ரையுவும் செய்வார்.

தினம் ஒரு மூலிகை – தேற்றா 
நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்பது தென் னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டதாக, பச்சை நிற இலைகளில், வெண்ணிறத்தில் வரிகள் கொண்டிருக்கும். மேலும் இதன் இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும் (செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.
நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனந்தமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும் உதவுகிறது.

பெயர்கள்

நன்னாரிக்கு அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்ற வேறு பெயர்கள் உண்டு. இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் பாற்கொடி என்றும், வாசனையைக் கொடுப்பதால் சுகந்தி என்றும் பூமிக்குள் வளரும் இதன் வேர்த்தொகுப்பால் பாதாளமூலி என்ற பெயரும் இதற்கு அமைந்தது. இதில் நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி போன்ற வகைகள் உள்ளன.

பயன்கள்

நன்னாரி குருதியை தூய்மைப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலிஉடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பப்பாளிப் பழம்

இதன் நிறைவான ஊட்டச்சத்துக்கள், செரிமானத்துக்கு உதவும் திறன், மருத்துவ குணநலன்கள் காரணமாக அனைவரும் விரும்பிச் சாப்பிடவேண்டிய பழம். கண் முதல் முடி வரை உடலின் அனைத்துப் பகுதிக்கும் தேவையான சத்துக்களை அள்ளித் தரும் பழம் இது.
பப்பாளிப் பழத்தின் மென்மையான சதைப்பகுதியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால் வயிறு செரிமானத்துக்கு உதவி, மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
இதில், வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் உள்ள ரசாயனங்கள் நுரையீல், வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பைப் பெருமளவில் குறைக்கின்றன.  பப்பாளி, வைட்டமின் - சத்துக்கு மிகப் பெரிய ஆதாரமாக விளங்குகிறது. 100 கிராம் பழத்தில் 1094 .யு. வைட்டமின் உள்ளது. பார்வை மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.
ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. மிககுறைவான அளவிலேயே சர்க்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பப்பாளியில் உள்ள பாப்பின் என்ற ரசாயனம் கர்ப்பத்தில் உள்ள சிசுவைப் பாதிக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது நல்லது என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கர்ப்பம் மற்றும் பாலூட்டும் காலத்தில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்படி எடுத்துக்கொள்வது நல்லது.

வரலாற்றுச் சிந்தனை
            இராஜராஜ சோழனின் மைந்தன் 'முதலாம் இராஜேந்திரன்' தந்தையைப் போலவே நல்லாட்சி புரிந்தான்; இமயம் வரை உள்ள பல அரசர்களை வென்று இமயத்தில் 'புலிக் கொடியை' நாட்டியவன் தன்னுடைய வெற்றியின் அடையாளமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோவிலைப் போன்று பெரியதோர் கோவிலைக் கட்டினான் முற்காலச் சோழர்களுக்கும் பிற்காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கே களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது.

தன்னம்பிக்கை கதை  -  விடியல்

அது ஒரு ஊரின் ஒதுக்குப்புறமான பகுதி அந்த பகுதியில் மரம் ஒன்று அடர்ந்து செழித்து இருந்தது. அந்த மரத்திலே நிறைய காகங்கள் கூடு கட்டி வசித்தன. அந்த மரமும் அதில் உள்ள காகங்களும் பார்ப்பதற்கு எப்போதுமே வசந்த காலத்தின் துவக்கம் போலவே தெரியும். அந்த மரத்தின் காகங்கள் மனிதர்களை போல கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தன. அந்த காகங்களில் மூத்த காகம் ஒன்று எப்போதும் பார்ப்பதற்கு சுறுசுறுப்பாகவும் திறமைசாலியாகவும் இயங்கி வந்தது. சில தினங்களுக்கு ஒருநாள் காகங்களெல்லாம் ஒன்று கூடி அந்த மூத்த காகத்தின் சொல் கேட்டு எந்தவித ஆபத்தும் இல்லாமல் சுதந்திரமாய் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் அந்த மூத்த காகம் பறந்து திரியாமல் படுத்தே கிடந்தது. மற்ற காகங்கள் எல்லாம் சேர்ந்து அந்த மூத்த காகத்தை விசாரிக்க. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றது. மற்ற காகங்கள் உடனே ஊரில் தெரிந்த வைத்தியர் காகத்தை அழைத்து வந்தன.
வைத்தியர் காகம் வந்து பரிசோதித்துவிட்டு கவலைப்பட தேவையில்லை. என்றும் ஒரு நாளைக்கு மேல் இந்த காய்ச்சல் நிற்காது என்றும், தான் கொடுத்த மருந்தை இரண்டு நாட்கள் கொடுக்கும்படியும் உங்கள் ஒற்றுமை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதென்றும் கூறிவிட்டு ஆனந்தமாய் பறந்து சென்றது.
அன்றும், அன்று மறுநாளும் அந்த மூத்த காகத்திற்கு உணவுக்கு உணவும் மருந்திற்கு மருந்தும் வேளை தவறாமல் தந்து மற்ற காகங்கள் பணிவிடை செய்தன. மருந்தினாலும் மற்ற காகங்களின் கவனிப்பாலும் ஒரே நாளில் உடல்நிலை தேறிவிட்ட காகத்திற்கு மறு நாளும் ஓய் வெடுக்க எண்ணம் வந்து படுத்தே கிடந்தது.
மூத்த காகம் ஒரு நாள் படுத்து கிடந்ததால் தேவையில்லாத சிந்தனை அதற்குள் வந்தது. மாலை நேரத்தில் மற்ற காகங்களை அழைத்து கம்மிய குரலில் பேசி முதல் முறையாக நடிக்க கற்றுக்கொண்டது. தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாலும் தனக்கு வயது கூடிபோனதாலும் தன்னால் வெளியில் திரிந்து உழைக்க முடியாது என்றும் தனக்கான உணவை தேடிக்கொள்ள முடியாது என்றும். இனி நீங்கள் தான் என்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி படுக்கையிலே படுத்துக்கொண்டது.
ஆனாலும் அந்த மூத்த காகத்தின் மனசாட்சி இடித்துக்கொண்டே இருந்தது. தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தன்னால் முன்பு போல நன்றாக இயங்க முடியும் என்றும் தெரிந்தும் தேவையற்ற ஒரு நாள் சோம்பல் ஓய்வினால் அதன் மனம் மாறிப்போனது.
மற்ற காகங்கள் அன்று தான் முதல் முறையாக தலைவன் இல்லாமல் ஒன்று கூடி முடிவெடுத்தன. ஒவ்வொரு காகமும் ஒவ்வொரு வேளையாக முறை வைத்து அந்த மூத்த காகத்திற்கு உணவு அளிப்பதென முடிவு செய்து அதன்படி செய்தும் வந்தன. ஆரம்பத்தில் இலவச உணவு வகைகள் சுவையாக இருந்தன. நாள்பட நாள்பட சுவை குன்றுவதாக தோன்றியது. அந்த மூத்த காகம், ஒவ்வொரு காகத்திடமும் குறை பேச ஆரம்பித்தது. நாளடைவில் சண்டையிடவும் ஆரம்பித்தது.

நீண்ட நாட்கள் கழித்து மற்ற காகங்கள் மீண்டும் கூட்டம் கூடி மூத்த காகத்தின் நிறை குறைகளை கூறி தங்களுடைய கஷ்டங்களையும் சொல்லிப் புலம்பின. தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உணவைத் தேடி மூத்த காதத்திற்கும் சேர்த்து உணவு தேடுவதற்குள் படும் பாட்டை கூறி அப்படித் தேடிக்கொடுத்தும் அந்த மூத்த காகத்தின் வம்பு பேச்சையும் சண்டையிடும் போக்கையும் சொல்லி மாற்றி, மாற்றி புலம்பின.
மற்ற காகங்கள் அறியாமல் இவைகளை கேட்க நேர்ந்த மூத்த காகத்திற்கு நீண்ட நாட்கள் கழித்து சுய சிந்தனை பிறந்தது. தன்னை வழிகாட்டியாக நினைத்து வாழ்ந்த காகங்கள் தான் வழி தவறி நடப்பதைப்பற்றி பேசுவதை கேட்க நேர்ந்தது தன்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டே தன்னை அறியாமல் சிறகடித்து வானில் நீண்ட தூரம் பறந்து திரிந்தது. அப்படியே உணவையும் தேடி உண்டது. உண்டுகளைத்து உறைவிடம் வந்து சேர்ந்தது. உறங்கியும் போனது.

மறுநாள் விடிந்ததும் அந்த மூத்த காகம் தன்னை இளங்காகமாய் உணர்ந்து அன்று வழக்கத்திற்கு மாறுதலாய் அதிகாலையிலே அனைத்து காகங்களை ஒன்றாய் வரச் செய்து தனக்கு ஏற்பட்ட சோம்பல் நிலையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்டது. மற்ற காகங்கள் அந்த மூத்த காகத்தின் மனமாற்ற நிலையை எண்ணி உயர்வான மதிப்பு கொணடன. மீண்டும் இயல்பு நிலைக்கு மாறின. மூத்த காகத்தால் இப்போது அந்த அடர்ந்த மரமும் அதிலே வாழும் காகங்களின் போக்குவரத்தும் அந்த ஊருக்கு முன்பைவிட அழகு சேர்த்தது.

செயலி - Learn Tamil Quickly

https://play.google.com/store/apps/details?id=com.altergyan.learntamilquickly&hl=en_US

இணையம் அறிவோம்  -  https://www.commonsensemedia.org/
பாதிரி மலர் / ஓவியம் வரைவது எப்படி

No comments:

Post a Comment