அறிவுக்கு விருந்து – 19.07.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 19.07.2019 (வெள்ளி)
குறளறிவோம்-  32  - அறன்வலியுறுத்தல்
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
மு.வரதராசனார் உரை:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
Translation:
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.
Explanation:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
சிந்தனைக்கு
சுற்றுளியால் கல்லும் நகரும்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்                                                       
அவசியம்   -          வேண்டியது
அவசியம்   -          தேவை
விடுகதை விடையுடன்
முழு உலகம் சுற்றிவரும், ஆனால் ஒரு மூலையிலே இருக்கும் அது என்ன?   - முத்திரை
பழமொழி  
* உப்பிட்டவரை உள்ளளவும் நினை. *
பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே.
Transliteration
Uppittavarai ullalavum ninai.
தமிழ் விளக்கம்/Tamil Explanation - "உப்புத்தான் கொஞ்சம் ஏற-இறங்க இருந்தாலும் ஒரே கரிப்பு, அல்லது ஒரே சப்பு. ’உவர்ப்புஎன்கிறதைப் பேச்சில்கரிப்புஎன்றே சொல்லுகிறோம். இலக்கண சுத்தமான வார்த்தையாகஉவர்ப்புக்குக்கார்ப்புஎன்றும் பெயர் இருக்கிறது. அதுதான் பேச்சு வழக்கில்கரிப்புஆகிவிட்டது. ’உப்புக் கரிக்கஎன்கிறோம். அப்படி, உப்புப் போட்ட வியஞ்ஜனங்களில் அது கொஞ்சம் ஏறினாலும் ஒரே கரிப்பு, கொஞ்சம் குறைந்தாலும் ஒரே சப்பு என்று ஆகிவிடுகிறது. உப்பு ஏறிப் போய்விட்டால் ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாது. ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி, மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். நாம் ஆஹாரத்தில் ருசித் தப்பு நேர்ந்தால் மூல வஸ்துவை நேராகச் சேர்த்து, உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான். ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால் சாப்பிடுபவரே உப்புப் போதாத குறையை நிவர்த்தி பண்ணிக்கொள்ள வசதியாக இலையில் மற்ற வ்யஞ்ஜனங்கள் பரிமாறுகிறதற்கு முந்தி முதலிலேயே கொஞ்சம் உப்புப்பொடி வைத்துவிடுவார்கள். அதைக் குறிப்பாக மனஸில் கொண்டுதான் நமக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் என்றென்றும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோதுஉப்பிட்டவர உள்ளளவும் நினைஎன்றார்கள்."
Enrich your   vocabulary
·         Extensive....பரந்த 
·         Extent....பரப்பு 
·         Exterior.....வெளிப்புறம் 
·         External....வெளியேயுள்ள 
·         Extraordinary.....வழக்கமற்ற 
·         Extreme.....இறுதியான 
·         Exude.....கசிதல் 
·         Eyebrow....புருவம் 
·         Eyesight....காட்சி 
·         Eyedure.....பொறுப்பு 

Opposite Words 
Adore —— Hate
  • She adores working with children.
  • I hate to see you unhappy.
Advance —— Retreat
Opposites examples:
  • The troops were finally given the order to advance.
  • The army was forced to retreat after suffering heavy losses.
மொழிபெயர்ப்பு
Beetroot
பீட்ரூட்
Bitter Gourd
பாகற்காய், பாவக்காய்
Proverb

A fool and his money are soon parted.

Foolish people do not know how to hold on to their money.
Example: She gave up her entire estate on the basis of a verbal promise. A fool and his money are indeed easily parted.

இனிக்கும் கணிதம்

            கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
சென்னைத் துறைமுக [Madras Port Trust ] நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டிஷ் இஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்! அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.
அறிவோம் அறிவியல்
உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி, ஈயின் கண்ணைவிட சிறியது.
அறிவியல் துளிகள்
விரல்களில் ங்கள் ர்வது இயற்கை. அதில் ஆட்காட்டி விரலில் மிகநிதானமாகவும், டுவிரலில் மிகவேகமாகவும் ருமாம்.
தினம் ஒரு மூலிகை – கசகசா
கசகசா  (Papaver somniferum) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
மருத்துவ குணங்கள்
பேதி நோயை குணப்படுத்துகிறது. கசகசா ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுகச்  செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - ஆலிவ்:
பல நிறங்களில் இருக்கும் ஆலிவ் பழங்கள் (Fruit Benefits In Tamil) அவற்றில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் தான் மிகவும் சிறந்தது.
இந்த நிறமுள்ள ஆலிவ் பழங்களை நாம் அதிகமாக சாப்பிட்டால் எலும்பு வளம் பெரும் மற்றும் புற்று நோய் தடுக்கப்படும்.
வரலாற்றுச் சிந்தனை
TROPHICAL PARASITOLOGY CONFERENCE எங்கு நடைபெற்றது?
–  இந்திய வெப்பமண்டல ஒட்டுண்ணியியல் கழகத்தின் 10வது தேசிய மாநாடு நடைபெற்ற இடம்புதுச்சேரி


தன்னம்பிக்கை கதை – மூன்று செவிடன் கதை
ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டுஎன்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!
ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல்மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.
முதல் காட்சி முடிந்தது; இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:
சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை
அறுக்க முடியும்? என்று அவன் அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான். இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.  இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான். அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.
இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான். காட்சி மூன்று: 
அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனுவை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள்எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;  அவன் சொன்னான், அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.

செயலி_  Memorize Periodic Table Chemistry Of Elements
இணையம் அறிவோம் - https://www.britannica.com/topic/college-education

How To Draw Easy Scenery For Kids | Scenery for beginners| Step By Step Scenery With Oil Pastel https://www.youtube.com/watch?v=zc8fFE6KOLg

 

No comments:

Post a Comment