அறிவுக்கு விருந்து –
17.07.2019 (புதன்)
அந்தணர் என்போர்
அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
செந்தண்மை பூண்டொழுக லான்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள்
பொழியும் சான்றோர் எவராயினும் அவர்
அந்தணர் எனப்படுவார்.
மு.வரதராசனார் உரை:
எல்லா
உயிர்களிடத்திலும் செம்மையான அருளை
மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே
அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
Translation:
Towards all that breathe, with
seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of
'Anthanar' men give,
Explanation:
The virtuous are truly called
Anthanar; because in their conduct towards all creatures they are clothed in
kindness.
சிந்தனைக்கு
சிக்கனாக இருப்பதே மிகப்பெரிய வருமானம்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
அம்பலம் - வெளி
அம்பலம் - மேடம்
விடுகதை விடையுடன்
நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வழ்வேன், நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன்
கொடுத்த கவசமும் இருக்கு, விடை தெரியுமா? - ஆமை
பழமொழி
* மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
பொருள்:
ஒரே
தவறை
மாமியார் செய்யும் போது
அது
பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால்,
வீட்டுக்கு வந்த
மருமகள் அதே
தவறைச்
செய்துவிட்டால், அதை
மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று
பொருள்
வருகிறது,
உண்மையான பொருள்: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்
என்பது
தான்
உண்மையான பழமொழி.
விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும்
என்பது
அர்த்தம்.
Enrich your vocabulary
Enrich your vocabulary
·
Cabinet....மந்திரிசபை
·
Cadet.....புதுப்பணியாள்
·
Cafe.....சிற்றுண்டிசாலை
·
Cage.....கூண்டு
·
Cake.....அடை
·
Calamity.....பேராபத்து
·
Calculate....கணக்கீடு
·
Calendar.....பஞ்சாங்கம்
·
Cabbage....முட்டைகோஸ்
·
Cabin......கப்பல் அறை
Opposite Words
Add x Subtract
- If you add all these amounts together you get a huge figure.
- If you subtract 6 from 9, you get 3.
Adjacent x Distant
- We stayed in adjacent rooms.
- Stars are distant from our galaxy.
மொழிபெயர்ப்பு
·
Urad
Bean - உளுத்தம்பருப்பு
·
Wheat
- கோதுமை
Proverb
• A drowning man will clutch at a straw.
When someone is in a difficult situation, s/he will take any available opportunity to improve it.
Example: After trying all reliable medicines, he is now visiting quacks to get a cure for his baldness. A drowning man will clutch at a straw.
இனிக்கும் கணிதம்
கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :

அறிவோம் அறிவியல்
ஒரு
கன மி. மீட்டர் ரத்ததில்
காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? – 5,000 முதல் 10,000 வரை
அறிவியல் துளிகள்
எய்ட்ஸ்
நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
தினம் ஒரு மூலிகை – எள்
எள் (Sesamum Indicum)
ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு. எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
·
கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.
·
வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
·
எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும்.
·
இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும்.
·
இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
·
இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.
·
எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் அல்லது எள்ளு விதையை இலேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.
·
தோலில் சொறி, சிரங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் தோல் நோய்கள் அகலும்.
·
நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அணுகாது.
·
கறுப்பு எள்ளை நன்கு காயவைத்து, இலேசாக வறுத்துப் பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச்சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
·
வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்
·
எள்ளின் இலையையும் வேரையும் அரைத்துத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - ரம்புட்டான்
பழம்:
இந்த பழத்தில் புற்று
நோயை
எதிர்க்கும் உட்பொருள் உள்ளது.
இதை
அதிகமாக நாம்
சாப்பிட்டால் நம்
உடலில்
புற்று
நோய்
செல்கள் உருவாவதை எதிர்த்து போராடும் சக்தி
இவற்றில் அதிகமாக உள்ளது.
வரலாற்றுச் சிந்தனை
சமுதாய வானொலிகளில் ஒரு
மணி
நேரத்திற்கு எவ்வளவு நிமிடங்கள் வர்த்தக விளம்பரங்கள் ஒளிபரப்பி கொள்ள
மத்திய
தகவல்
மற்றும் ஒலிபரப்பு துறை
அமைச்சகம் அனுமதி
வழங்கியுள்ளது? - 7
நிமிடங்கள்
தன்னம்பிக்கை
கதை – பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை
சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு
இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர்.
ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச்
சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள்
என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.காளி தேவி பிரசன்னமானாள்;
அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று
வினவினாள்.
அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.

இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.
இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்
இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்
வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்
இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்
மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.

கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை
விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.
No comments:
Post a Comment