அறிவுக்கு விருந்து –
11.07.2019 (வியாழன்)
செயற்கரிய செய்வார்
பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செயற்கரிய செய்கலா தார்.
கலைஞர் மு. கருணாநிதி உரை:
பெருமை
தரும்
செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
மு. வரதராசனார் உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய
வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய
செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
Translation:
Things hard in the doing will great
men do; Things hard in the doing the mean eschew.
Explanation:
The great will do those things which
is difficult to be done; but the mean cannot do them.
சிந்தனைக்கு
விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
ஆற்றல் -
சக்தி
ஆற்றல் - உரம்
ஆற்றல் - திண்மை
விடுகதை விடையுடன்
கையில்லாமல் நீந்துவோன். காலில்லாமல்
ஓடுவான் அவன் யார்? படகு
பழமொழி
* விருந்தும் மருந்தும் மூன்று நாள்*
பொருள்: விருந்துக்கு சென்றால்,
மூன்று நாட்களுக்கு மேல்
இருக்க கூடாது. மருந்து
உட்கொண்டாலும் மூன்று
நாட்களுக்கு மேல்
உண்ண கூடாது. அது
எந்த ஒரு தனி
மனிதனையும் பாதிக்கும்.
உண்மையான பொருள்: ஒரு வாரத்தில்
ஞாயிறு, திங்கள், புதன்
ஆகிய குளிர் நாட்களில்
நன்றாக உணவு உட்கொள்ள
வேண்டும். செவ்வாய்,
வெள்ளி, வியாழன் ஆகிய
தினங்களில் உணவை
குறைவாய் உட்கொண்டு
மருந்து உண்ண
வேண்டும்.
Enrich your vocabulary
- · Abnormal.....அசாதாரணமான
- · Aboard....கப்பல்தளத்தில்
- · Abode....வசிக்குமிடம்
- · Abolish...அழி
- · Abominable.....வெறுக்கத்தக்க
- · Abortion.....சிதைவு
- · Abound.....மிகுந்திரு
- · Above....மேலான
- · About......அருகில்
- · Abridge....குறை
Opposite Words
Above
x
Below
- I heard a strange noise coming from the room above.
- I could hear voices in the courtyard below my window.
Abridge
x
Expand
- She has been asked to abridge the novel for radio.
- The waist expands to fit all sizes.
மொழிபெயர்ப்பு
- · RED CARROT – செம்மஞ்சள் முள்ளங்கி
- · RIDGE GOURD – பீர்க்கங்காய்
Proverb
•A bad workman always blames his tools.•
This
proverb is used when someone blames the quality of their equipment or other
external factors when they perform a task poorly.
Example: X: The turkey isn’t cooked well because the oven is not
functioning well.
Y: Well, it’s the case of a
bad workman blaming his tools.
இனிக்கும் கணிதம்
இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாகவே 150 ரூபாயே இருந்தது. இது எப்படி சாத்தியம்?
அப்பாக்களில்
ஒருவர், மற்றொருவரின் மகன் என்பதுதான் இதில்
உள்ள ரகசியம். இங்கே சொல்லப்பட்டிருப்பது தாத்தா, அப்பா, மகன் ஆகிய மூன்று
பேரைப் பற்றி மட்டுமே. மொத்தம் நாலு பேர் கிடையாது.
தாத்தா, தன் மகனுக்கு 150 ரூபாய்
கொடுக்கிறார். அதிலிருந்து அப்பா (தாத்தாவின் மகன்), மகனுக்கு (தாத்தாவின் பேரனுக்கு) 100 ரூபாயைத் தருகிறார். எனவே, மொத்தமாக 150 ரூபாய்தான் இருக்கும்.
அறிவோம் அறிவியல்
இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி
நிலைப்புள்ளி எனப்படும்.
அறிவியல் துளிகள்
இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்.
தினம் ஒரு மூலிகை – ஆடுதின்னாப்பாலை
ஆடுதின்னாப்பாலை அல்லது ஆடுதீண்டாப்பாலை (Aristolochia tagala, Indian
birthwort; "இடச்சுக்காரர் குழாய்" எனவும் அழைக்கப்படும்.) என்பது ஒரு மூலிகைத் தாவரமாகும். ஆடு தின்னாத அளவுக்குக் கசப்புத்தன்மை உடையதால் ஆடுதின்னாப்பாலை, ஆடுதீண்டாப்பாலை என்னும் பெயர்கள் வழங்கலாயின. வாரம் எனும் பெயரும் இதற்குள்ளது. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூட கடித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.
ஆடுதீண்டாப்பாளை (Aristolochia
bracteolata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள் முட்டை வடிவிலும், இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இதன் வேரும் இலையும் மூலிகைப் பயன்பாடுடையன. இதன் தண்டுப் பகுதி மென்மையானது. தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சாக பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
இலந்தை பழம் பயன் (Ber Fruit Benefits):
இலந்தை பழம்
(Ber Fruit Benefits) இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடையது மற்றும் இலந்தை
பழம்
அதனுடைய விதைதான் பாதி
இடத்தை
அடைத்திருக்கும். இலந்தை
பழம்
(Ber Fruit Benefits) அதிகமாக கிராமப்புரங்கள் மற்றும் கரிசல்காடுகளில் தான்
அதிகமாக விளைந்திருக்கும்.
இந்த பழத்தை
அதிகமாக சாப்பிட்டால் உடல்
உஷ்ணத்தை குறைக்கும், பித்தம் குணமாகும் மற்றும் அடிக்கடி வரும்
வாந்தி
பிரச்சனைகள் குணமாகும்.
வரலாற்றுச் சிந்தனை
கி. பி பத்தாம் நூற்றாண்டு முதல்
பதினைந்தாம் நூற்றாண்டு வரை
இந்தியா மொகலாயர்களின் ஆட்சியின் கீழ்
இருந்தது. வட
இந்தியாவில் டெல்லி
சுல்த்தான்களும் தென்னிந்தியாவில் விஜய
நகர
அரசர்களும் ஆட்சிசெய்தனர்.
தன்னம்பிக்கை
கதை - கெடுவான் கேடு நினைப்பான்.
ஆத்தூர் என்ற ஊரில் ஒரு பள்ளி இருந்தது. சிறு கிராமமாக இருப்பதால் அங்கு உள்ள பள்ளியில் எட்டாவது வரை மட்டுமே இருந்தது. அந்தப் பள்ளியில்தான் சேதுவும் தமிழும் படித்து வந்தனர். தமிழ் மிகவும் பணிவும் நல்ல பண்பும் மிக்கவனாகத் திகழ்ந்தான். ஆனால் சேதுவோ அவனுக்கு நேர் எதிர் பண்புகள் உள்ளவனாக இருந்தான். எப்போதும் ஆத்திரம் அவசரம் கொண்டவனாகவும் சுயநலமிக்கவனாகவும் திகழ்ந்தான்.
தன சுய நலத்திற்காகயாரையும் அவன் எதிர்க்கத் தயங்கமாட்டான். அவனைக் கண்டால் தமிழுக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்குப் பயம். ஆனால் தமிழைக் கண்டால் இளக்காரமாக நடத்துவார்கள். அவன் யாரையும் கடிந்து கூடப் பேசமாட்டான்.
மிகவும் அன்பாகப் பேசுவான். ஒருமுறை நாட்டின் குடியரசு தினம் வந்தது. அந்த விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று அவ்வூர் பெரிய மனிதர்கள் முடிவெடுத்தார்கள். அவ்வூரின் பெரிய தனவந்தர் குடியரசு தினத்தன்று பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதாய் அறிவித்தார். எல்லோரும் ஒரே ஆவலாக இருந்தனர். என்ன பரிசு கொடுப்பார்? இத்தனை பேருக்கும் அவர் என்ன பரிசு கொடுக்க முடியும்? என்ற சந்தேகத்தோடு இதுவாக இருக்குமா, அதுவாக இருக்குமா என்றெல்லாம் பேசிக்கொண்டே ஒரு வாரத்தை ஓட்டினர்.
கடைசியாக அந்தநாளும வந்தது அதிகாலையிலேயே எழுந்து குளித்து முதல்நாள் துவைத்து வைத்த சீருடையைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்து முதலாவதாக நின்றுகொண்டான் தமிழ். அவனுக்குப் பின்னால் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஒருவர்பின் ஒருவராக நிற்கத் தொடங்கினர். தலைவர் வந்து கொடியேற்றியபின் அனைவரையும் வரிசையாக நிற்கச் சொன்னார் தலைமை ஆசிரியர்.
அனைவரும் வரிசையாக நிற்க பணியாள் பெரிய மூட்டையைக் கொண்டுவந்து தலைவர் அருகே வைத்தான். அப்போது எங்கிருந்தோ உள்ளேபுகுந்த சேது அதிகாரமாக முதலாவதாக நின்று கொண்டிருந்த தமிழை வரிசையை விட்டுத் தள்ளிவிட்டு தான் போய் நின்று கொண்டான். அடுத்தடுத்து அவனை நிற்க விடாமல் எல்லோரும் அவனைத் தள்ளி விட்டனர். தமிழுக்கு இப்போது வரிசையின் கடைசியில்தான் இடம் கிடைத்தது. தலைவர் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார். இவர்களுக்குப் புத்தி புகட்ட ஒரு வழியைக் கண்டார்.
அவர் பேசிவிட்டு பரிசு கொடுக்க எண்ணினார்."மாணவ மணிகளே
உங்களுக்கெல்லாம் பரிசு தரவந்துள்ளேன் எப்போதும் எல்லோரும் வரிசையாகத்தான் பரிசு கொடுப்பார்கள் நானும் வரிசையாகத்தான் பரிசளிக்கப் போகிறேன்."என்றவுடன் சேது தனக்குத் தான் முதலில் பரிசு கிடைக்கும் என்று பெருமையாக நின்றான்.தலைவர் தொடர்ந்து பேசினார்." ஆனால் நன் முதலிலிருந்து தரமாட்டேன் கடைசியிலிருந்து பரிசு தரப் போகிறேன். கடைசிப் பையன் யாரோ வரட்டும்." தமிழ் எதிர்பாராத அழைப்பால் திகைத்தவன் பின் அவரிடம் சென்று நன்றி ஐயா என்று சொல்லிவிட்டுப் பரிசுடன் சென்றான். கடைசியில் கூடை காலியாகிக் கொண்டே வந்தது.
உங்களுக்கெல்லாம் பரிசு தரவந்துள்ளேன் எப்போதும் எல்லோரும் வரிசையாகத்தான் பரிசு கொடுப்பார்கள் நானும் வரிசையாகத்தான் பரிசளிக்கப் போகிறேன்."என்றவுடன் சேது தனக்குத் தான் முதலில் பரிசு கிடைக்கும் என்று பெருமையாக நின்றான்.தலைவர் தொடர்ந்து பேசினார்." ஆனால் நன் முதலிலிருந்து தரமாட்டேன் கடைசியிலிருந்து பரிசு தரப் போகிறேன். கடைசிப் பையன் யாரோ வரட்டும்." தமிழ் எதிர்பாராத அழைப்பால் திகைத்தவன் பின் அவரிடம் சென்று நன்றி ஐயா என்று சொல்லிவிட்டுப் பரிசுடன் சென்றான். கடைசியில் கூடை காலியாகிக் கொண்டே வந்தது.
சேதுவின் முறை வந்தபோது பெட்டி காலியாகிவிட்டது என்று சொல்லி பரிசு வரும் வரை சற்று நேரம் காத்திரு என்று சொல்லிச் சென்று விட்டார் தலைவர். தன பரிசுக்காகத் தனிமையில் வெகுநேரம் காத்திருந்தான் சேது. ஒருவழியாக அந்தப் பணியாள் ஒரு பரிசுப் பொட்டனத்தைத் தந்தான். தலைவர் கையால் வாங்காமல் பணியாள் கையால் வாங்குகிறோமே என்று எண்ணி நொந்தபடியே சென்றான் சேது. அப்போது அவன் மனம் இடித்தது. "தமிழுக்கு நீ கெட்டது நினைத்தாய். உனக்கே அந்தக் கேடு வந்தது. இதைத்தான் அந்தக் காலத்தில் "கெடுவான் கேடு நினைப்பான்"என்று சொல்லிவைத்தார்கள் போலும். இனியேனும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருக்கப் பழகு "என்றதை மனவருத்தத்துடன் கேட்டுக் கொண்டான் மனம் திருந்திய சேது.
செயலி
- Tamil
Riddles தமிழ் விடுகதைகள்
பித்திகம் மலர் / ஓவியம் வரைவது எப்படி
No comments:
Post a Comment