அறிவுக்கு விருந்து – 24.07.2019 (புதன்)


அறிவுக்கு விருந்து – 24.07.2019 (புதன்)
குறளறிவோம்-  35 - அறன்வலியுறுத்தல்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
மு.வரதராசனார் உரை:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
Translation:
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
Explanation:
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.
சிந்தனைக்கு
எழுந்திருப்பதை 10 நிமிடங்கள் தள்ளிப்போடுவதிலிருந்து   
அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன
 தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்                                                       
அர்ச்சகர் – வழிபாட்டாசான                                                                                            அர்ச்சகர் -  பூசாரி
விடுகதை விடையுடன்
கண்டுபிடித்தவன் வைத்திருக்கவில்லை வாங்கியவனும் உபயோகிக்கவில்லை,  உபயோகிப்பவனுக்கும் அதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை அது என்ன? - சவப்பெட்டி
பழமொழி  
எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும்.
பொருள்/Tamil Meaning : திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.
Transliteration  :  Enke tirutinalum kannakkol vaikka oru itam ventum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation : கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.
Enrich your   vocabulary
Opposite Words 
All —— None
  • Have you done all your homework?
  • We saw several houses but none we really liked.
Allow —— Forbid
  • My parents wouldn’t allow me to go to the party.
  • He was forbidden to leave the house, as a punishment.
மொழிபெயர்ப்பு
BROCCOLI – பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS – களைக்கோசு
Proverb

There's no place like home.

Meaning: Your own home is the most comfortable place to be.

இனிக்கும் கணிதம்

Image result for இராமனுஜர் கணித மேதை            கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
இராமனுஜருக்குப் பிறகு இவரது ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அறிவோம் அறிவியல்                                                                                  

விலங்குகள் மழையே!

மீன் மழை, தவளை மழை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இது ஒரு விண்வெளிசார் நிகழ்வு. இப்படி சில மழை உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக பதிவாகியுள்ளன. பலதரப்பட்ட மக்கள் இப்படிப்பட்ட மக்களை கண்டுள்ளதாகவும் கருத்துகள் பதிவு செய்துள்ளனர். மீன், தவளை என்று மட்டுமின்றி, சில சமயங்களில் பறவை மழை கண்டுள்ளதாகவும் நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகி உள்ளன.
செர்பியா - தவளை மழை 2005
லண்டன் - தவளை மழை - 1998
இந்தியா - மீன் மழை - 2006
வேல்ஸ் - மீன் மழை - 2004
அறிவியல் துளிகள்
லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே று கையில் ரையுவும் செய்வார்
தினம் ஒரு மூலிகை – அருகம்புல்*
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் கார சங்கோஜமாகலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் ஆல்பக்கோடா பழம்:
ஆல்பக்கோடா பழம் (Fruit Benefits In Tamil) தமிழ் நாட்டில் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். இவற்றில் அதிகமாக சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் , பி சத்துகள் நிறைந்து உள்ளது.
இந்த பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் அதிகத் இரத்தத்தை விருத்தி செய்கிறது மற்றும் ஆல்பக்கோடா பழம் காய்ச்சல் உள்ள போது நாம் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும், வாய்க்கசப்பைப் போக்கும்.   நாவறட்சி மற்றும் வாந்தியை தடுக்கும் தன்மை வாய்ந்தது. தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
சொரி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சொரி, சிரங்கு குணமாகும்.
வரலாற்றுச் சிந்தனை
தீவிரவாதி பர்ஹான் வாணி சுட்டு கொல்லப்பட்ட பின், காஷ்மீர் சிறுவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் கூடுதல் கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்க, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன ?

–  OPERATION SCHOOL CHALO ( இது தொடர்பாக ராணுவத்தினர் பயன்படுத்திய முழக்கம் -  I don’t need money and fame, I need books and school )
.

தன்னம்பிக்கை கதை – ஆழம் தெரியாமல் காலை விடாதே
ஒரு சமயம் தேவலோகத்தில் இருந்த எல்லா தெய்வங்களும் பூவுலகில் ஒரு தலத்திற்கு வந்தார்கள். அவர்கல் வந்த இடத்துக்கு அருகே ஒரு புறா விளையாடிக்கொண்டிருந்தது. எல்லா கடவுள்களும் வருவதை அது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. கடைசியாக எமதர்மன் அங்கே வந்தார். வந்தவர் ஒரு நிமிடம் நின்றார். புறாவை உற்றுப்பார்த்தார். பிறகு புன்னகை ஒன்றை செய்துவிட்டுப் போனார்.அவ்வளவுதான் இதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த புறா பதறிப்போனது. கலங்கி அழத்தொடங்கியது. அதன் உற்சாகம் குறைந்துபோனது தற்செயலாக அதனைப் பார்த்தார் பட்சி ராஜன் கருடன். அன்போடு நெருங்கி அதன் கலக்கத்துக்கான காரணத்தைக் கேட்டார். காலதேவன் என்னைப் பார்த்து சிரித்தார் அவரது பார்வையும் சிரிப்பும் எனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை சொல்லாமல் சொல்வதுபோல் தோன்றுகிறது தழுதழுக்கச் சொன்னது புறா.  சின்னப்பறவையின் கலக்கம் கருடனுக்கு வருத்தத்தைத் தந்தது. அதனால் அந்தப்புறாவுக்கு உதவ முடிவு செய்தார். பயப்படாதே இங்கே இருந்து பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் ஒரு தீவில் உள்ள மரம் ஒன்றின் பொந்தினுள் உன்னைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன் எமதர்மனே நினைத்தாலும் உன்னைத் தேடி அங்கே வர பல ஆண்டுகள் ஆகும். அதனால் நீ தைரியமாக இரு சொன்ன கருடன் தன் ஆற்றலால் அந்தப் புறாவை இரண்டே நிமிடத்தில் சொன்ன இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பினார்.
சற்று நேரத்தில் கடவுள்கள் எல்லோரும் வந்தவேலை முடிந்து திரும்பினார்கள். அப்போது எமதர்மன் கருடனை அர்த்தம் தொனிக்கப்பார்த்தார். லேசாக சிரித்தார். உடனே கோபம் பற்றிக்கொண்டது கருடனுக்கு என்ன எமதர்மரே என்னை என்ன புறா என்று நினைத்தீர்களோ? நீங்கள் சிரித்தால் பயந்துவிட? என்று ஆவேசமாகக் கேட்டார்.
ஊஹூம் நான் உன்னைப் பார்த்து சிரித்தது பயமுறுத்த அல்ல அந்தப் புறாவுக்கு ஒரு சில நிமிடத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருந்த மரத்தின் பொந்து ஒன்றில் மறைந்திருக்கும் பூனையால் மரணம் என்பது விதி. இந்தப் புறா எப்படி அவ்வளவு சீக்கிரம் அத்தனை மைல் தொலைவிற்கு செல்லப்போகிறது என்று நினைத்துத்தான் புறாவை பார்த்து சிரித்துவிட்டுப் போனேன் ஆனால் நீயே அதற்கு வழி செய்துவிட்டதை அறிந்து இப்போது சிரிக்கிறேன்.
நன்மை செய்யப்போய் அது இப்படி ஆகிவிட்டதே ஏன் இதற்கு என்ன காரணம் என்று யோசித்தபடியே திருதிரு என விழித்தபடி இருந்த கருடன் அருகே வந்தார் திருமால். கருடா புறாவுக்கு நீ உதவ நினைத்தது நல்ல விஷயம்தான் ஆனால் அதை எப்படி செய்யவேண்டும் என்று தீர்மானித்ததில்தான் தவறு செய்து விட்டாய் எப்போதும் என் உத்தரவைக் கேட்டு நடக்கும் நீ இப்போது என் உத்தரவுக்காக சில நிமிடம் தாமதித்து இருந்தால்கூட அந்தப் புறா பிழைத்திருக்கும் திருமால் சொல்ல உணர்ந்த கருடன் தலைகுனிந்து நின்றார்.
இப்படித்தான் பலரும் தங்கள் லட்சியத்திற்காகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு அதன் முடிவு என்ன என்று தெரியாமலே செயல்படுவதும் நன்றாகத்தானே செய்தோம் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புவதும் நிகழ்கிறது. இப்படி செயலின் ஆழம் தெரியாமல் இறங்கிவிட்டு அதில் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காகத்தான் ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்று சொல்லி வைத்தார்கள்.

செயலி -  Anatomy Learning - 3D Atlas https://play.google.com/store/apps/details?id=com.AnatomyLearning.Anatomy3DViewer3&hl=en_US

இணையம் அறிவோம் http://warasathulanbiya.blogspot.com/2014/11/blog-post_25.html
How to Draw a Palm Tree Easy Step by Step      https://www.youtube.com/watch?v=eh3ZkrgbV0I

 

No comments:

Post a Comment