அறிவுக்கு விருந்து –
16.07.2019 (செவ்வாய்)
குணமென்னும் குன்றேறி
நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
கணமேயும் காத்தல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம்
கொண்டால் அந்தக்
கோபம்
அவர்கள் உள்ளத்தில் ஒரு
கணம்
கூட
நிலைத்து நிற்காது.
மு.வரதராசனார் உரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி
நின்ற
பெரியோர், ஒரு
கணப்பொழுதே சினம்
கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
Translation: The wrath 'tis hard e'en for an
instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.
Explanation: The anger of those who have ascended
the mountain of goodness, though it continue but for a moment, cannot be
resisted.
சிந்தனைக்கு
சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
அசுவமேதம் - குதிரை
அசுவமேதம் - வேள்வி
விடுகதை விடையுடன்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பிடித்திருப்பவர்களைக் காப்பாற்றும்
என்னை இந்த இளம் பெண்கள் அழுக்காகப் பிடித்துக்கொள்கிறார்கள். நான் யார்? - குடை
பழமொழி
* ஆறிலும் சாவு; நூறிலும் சாவு*
பொருள்: ஆறு வயதிலும் சாவு வரும்; நூறு
வயதிலும் சாவு
வரும்.
உண்மையான பொருள்: மகாபாரதத்தில் கர்ணன்,
பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்)
பக்கம் இருந்தாலும், கெளரவர்கள்
(நூறு பேர்) பக்கம்
நின்றாலும், போரின்
போது இறப்பு வரும்.
ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன்
என்று சொன்னது.
Enrich your
vocabulary
·
Broker.....தரகர்
·
Broke....உடைத்தல்
·
Broom.....துடைப்பம்
·
Broth.... காய்கறி சாறு
·
Brother.....சகோதரன்
·
Brow....புருவம்
·
Brush.... பல்துலக்கு
·
Buck....ஆணினம்
·
Brute....காட்டுமிராண்டி
Opposite Words
Accurate x Inaccurate
The
brochure tries to give a fair and accurate description of each
hotel.
A lot of what has been written about him is inaccurate.
Achieve x Fail He
had finally achieved success.
She failed to get into art college.
மொழிபெயர்ப்பு
·
TAPIOCA – மரவள்ளி(க்கிழங்கு)
·
YAM – சேனைக்கிழங்கு
·
ZUCCHINI – சீமைச்
சுரைக்காய்
Proverb
•Actions speak louder than words.•
Actions are a better reflection of one’s character because it’s easy to say things, but difficult to act on them and follow through.
Example: Julie always says she’ll donate to the school, and she never does, so I doubt she will this year. Actions speak louder than words, after all.
இனிக்கும் கணிதம்
கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
வரலாற்று ஆசிரியர் ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் கணித மேதை ராமானுஜனின்
வாழ்க்கை வரலாற்றை 'அறிய இயலாத இறுதி
எண்ணை அறிந்த மனிதன் (The man who knew
infinity)' என்று நூலாக எழுதினார். இசைக்கு ஒரு மொசார்ட் (Mozart) போல, பௌதீகத்திற்கு
ஒரு ஐன்ஸ்டைன் (Einstein) போல, கணிதத்திற்கு ஒரு
ராமானுஜன் என்கிறது இந்நூல்.
அறிவோம் அறிவியல்
திருகு
அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? –
0.01 மி.மீ
அறிவியல் துளிகள்
முகிழ்தல்
முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
தினம் ஒரு மூலிகை – இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon) என்பது சின்னமாமம் வேரம் அல்லது சி. சேலானிக்கம் (சின்னமாமம் வேரம் என்பதற்கு சி. சேலானிக்கம் என்று பொருள்) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது லாரசீயே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் ஆரம்ப உற்பத்தி இலங்கையாக இருப்பதுடன், அதிகமாக விளையும் இடமும் இலங்கையாக இருக்கிறது. இந்த கறிமசால் பொருள் (கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்) மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. காசியா மற்றும் சின்னமாமம் பர்மான்னி போன்றவை இதற்கு ஒத்த வேறு இனத்தாவரங்களாகும். இந்த கறிமசால் பொருட்களும் இலவங்கப்பட்டைஎன்றே அழைக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை,Yeast இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - டிராகன்
பழம்:
இந்த பழம்
(Fruit Benefits In Tamil) விந்தைய தோற்றத்தில் இருக்கும். இந்த
பழம்
மிகவும் இனிப்பு சுவையாக இருக்கும். டிராகன் பழத்தை
அதிகமாக சாப்பிட்டால், இதய
நோய்
வராமல்
தடுக்கலாம்.
வரலாற்றுச் சிந்தனை
⭐⭐தெலுங்கானா மாநில கைத்தறி துணிகள் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்
?
–
நடிகை சமந்தா
தன்னம்பிக்கை
கதை – எங்கப்பன்
குதிருக்குள்ள இல்லை
எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லை யென்றானாம்’ இந்தப் பழமொழியின் நேர் பொருள் தெளிவாக
உள்ளது. தேவையில்லாமல் ஏதேனும் பேசி வம்பில் மாட்டிக்
கொள்ளும் ஒருவரைச் சுட்டும்போது இப்பழமொழி பயன்படுத்தப்படும். இப்பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை வருமாறு.
“ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் தொல்லை
தாங்க முடியவில்லை. கடன்காரர்கள் தினமும் வீடு தேடி வர
ஆரம்பித்தார்கள். அவர் அவ்வப்போது ஓடி
ஒளிந்து கொள்வார்.
ஒரு நாள் அவர்
வீட்டு வாசலில் இருக்கும் போது தூரத்தில் கடன்காரர்கள்
வருவதைப் பார்த்து விட்டார். அவ்வளவு தான் வீட்டுக்குள்ளே புகுந்து
குலுக்கைக்கு (குலுக்கை - நெல் கொட்டப் பயன்படும்
அமைப்பு) உள்ளே ஒளிந்து கொண்டார். தன் மகனிடம் கடன்காரன்
விசாரித்தால் ‘அப்பா இல்லை எனச் சொல்லி விடு’
என்று எச்சரித்து விட்டார். கடன்காரன் கதவைத் தட்டினான் பையன் எட்டிப்பார்த்தான். வந்தவர் ‘தம்பி! அப்பா இருக்காங்களா’ன்னு கேட்டான்.
காட்சி உடனே மகன் டக்கென்று
“எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” என்று சொல்லிவிட்டான். வந்தவன் யோசித்தான். ‘வீட்டில் இல்லை என்று சொல்லாமல் குதிருக்குள் இல்லை’ என்று சொல்கிறானே! ஏதோ தப்பு இருக்கிறதே
என்று குலுக்கைக்குள்ளே பார்த்தால் ஐயா அகப்பட்டுக் கொண்டார்.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
சொல்லத் தெரியாமல் உளறுகிறவனுக்கு இதுவே பாடமாயிற்று.
செயலி_ Dinosaur 4D+
பகன்றை மலர் / ஓவியம் வரைவது எப்படி https://www.youtube.com/watch?v=T_cThpe2YN8
No comments:
Post a Comment