அறிவுக்கு விருந்து – 18.07.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 18.07.2019 (வியாழன்)
குறளறிவோம்-  31  - அறன்வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.
மு.வரதராசனார் உரை: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
Translation: It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?
Explanation: Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?.
சிந்தனைக்கு
வீழ்ச்சியின் முன் எழுகிறது தற்பெருமை
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்                                                       அலகு   -            சொண்டு                                                                                              
அலகு      -           பிரிவு
விடுகதை விடையுடன்
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை வெளியே எறிந்தான் அது என்ன?   - சோளம்
பழமொழி  
* அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். * 
இது பழமொழி என்று சொல்வதை விட ஒரு விடுகதை என்று சொல்லலாம். மழை பெய்து ஒரே நாள் இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்என்ற சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஒருநாள் மழையில் முளைத்த காளான், சீக்கிரம் அழிந்தும் போகும், அதனால்தான் அற்பன் என்ற சொல். கிராமத்துப்பக்கம் அதனை குடைக்காளான் என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு குடை போலவே இருக்கும். அந்தக் காளானுக்காக சொன்ன விடுகதைதான் இது. “அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்என்பதுதான் உண்மையான பழமொழி என்று வாதிடுவோரும் உண்டுஇரண்டு விளக்கங்களுமே சரியென்றே தோன்றுகிறது. ஆகையால் நாம் விடுகதை, பழமொழி இரண்டையும் ஏற்றுக்கொள்வோம்.
Enrich your   vocabulary
·         Dive.....நீரில்மூழ்கு 
·         Diverge.....பிரிந்துபோ 
·         Diverse......வெவ்வேறான 
·         Divert.....திசைதிருப்பு 
·         Divide....பகுதிகளாக்கு 
·         Divine.....இறை 
·         Division.... வகுத்தல் 
·         Divorce....விவாகரத்து 
·         Divulge.....வெளிப்பாடு 

Opposite Words 
Admire x Detest                                                                                                                                                        I really admire your enthusiasm.                                    
 The two men detested each other                                                                                                                      
 Admit x  Deny                      
A quarter of all workers admit to taking time off when they are not ill. 
 The department denies responsibility for what occurred.                                                                                   
 Admit x Reject    
 She admits to being strict with her children.                                                                                                      The prime minister rejected any idea of reforming the system.
மொழிபெயர்ப்பு
Amaranth                             சிறு கீரை, முளைக்கீரை
Ash Gourd, winter melon    நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
Proverb

* Adversity and loss make a man wise. *

We gain wisdom faster in difficult times than in prosperous times.

Example: After losing money in my investments, I know which investments to avoid. It is rightly said adversity and loss make a man wise.

இனிக்கும் கணிதம்

            கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.
அறிவோம் அறிவியல்
ஒவ்வொருவரின் கை ரேகையும் னித்துவமானது. அதே போலதான் நா ரேகையும்
அறிவியல் துளிகள்
மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரிபிளாஸ்மோடியம்
தினம் ஒரு மூலிகை – ஏலம்
ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில்உள்ள இரண்டு பேரினங்கள்: 
சிரியஏலக்காய் எலெட்டாரியா (Elettaria), பெரியஏலக்காய் அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை. இத்தகை ஏலக்காய், இந்தியா துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப் படுகிறது.
·         உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)வும், ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
·         தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
·         வட இரோப்பாவில் இனிப்புகளில் ஒரு இன்றியமையாத உள் பொருளாகவும் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள்
1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக
2. செரிமானத்தை தூண்டுவதாக,
3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - கிவி:
இந்த பழம் (Fruit Benefits In Tamil) மிகவும் சுவையாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கிவி பழத்தை நாம் அதிகமாக சாப்பிட்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பயன்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொல்கத்தாவில் இருந்து தப்பிச்சென்ற நிகழ்வின் 76வது ஆண்டை முன்னிட்டு, அவர் தப்பி செல்ல பயன்படுத்திய கார் மறு சீரமைப்பு செய்து ஜனாதிபதி முன்னிலையில் வெளிவிடப்பட்டது. அந்த காரின் பெயர் என்ன ?      –  Audi  Wanderer W24 [ ஜெர்மனி தயாரிப்பு ]

தன்னம்பிக்கை கதை – சுழியா வருபுனல் இழியாதொழிவது
சுழியா= சுழித்துக் கொண்டு
வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்
இழியாது = இறங்காது
ஒழிவது = நீங்க வேண்டும்.
தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.
ஆசை யாரை விட்டது?  ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்என்றான்.
திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!  உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.
கரையில் இருந்த ராமப்பன் கத்தினான்திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை; நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.  திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!;  இது ஒரு கரடிஎன்றான்.  ராமப்பன் கரையில் திருதிருவென முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர். ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்; ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்.



இணையம் அறிவோம் -  https://www.discoveryeducation.com/

Horse Drawing | How to Draw a Horse Face https://www.youtube.com/watch?v=HgELGiqdtaY

No comments:

Post a Comment