அறிவுக்கு விருந்து – 22.07.2019 (திங்கள்)

அறிவுக்கு விருந்து – 22.07.2019 (திங்கள்)
குறளறிவோம்-  33  - அறன்வலியுறுத்தல்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
மு.வரதராசனார் உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
Translation: To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive.
Explanation: As much as possible, in every way, incessantly practice virtue.
சிந்தனைக்கு
கோபத்தால் போனது சிரித்தால் வராது
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்                                                       
அமரர்          - காலஞ்சென்ற                                                                                                அமரர் – நினைவில் உரை
விடுகதை விடையுடன்
மேலிலும் துவாரம், கீழிலும் துவாரம்,வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம் இருந்தும் என்னுள் நீரை சேமித்து வைப்பேன் நான் யார்?   - பஞ்சு
பழமொழி  
வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி.
பொருள்/Tamil Meaning என்னால் தான் உனக்கு உருவும் பேரும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது.
Transliteration  : Vaitthaal pillaiyar, valittu erintal chaani.
தமிழ் விளக்கம்/Tamil Explanation : கடவுள் என்பதே மனிதன் தன் மனதில் ஒரு உருவமும் பெயரும் கொடுத்து உருவாக்கியது; அதனால்தான் அந்த உருவைச் சாணிக்குச் சமமாக இந்தப் பழமொழி வைத்துள்ளது; சாணியை வழித்து எறிவதுபோல் மனதில் இருந்து கடவுளின் உருவையும் பெயரையும் மனிதன் வழித்து எறிந்துவிட்டால் அப்புறம் ஏது கடவுள்? என்று நாத்திகர்கள் இந்தப் பழமொழிக்கு விளக்கம் தரலாம். கடவுள் எனும் உண்மை ஒன்றே, அதுவே நாம் ஆத்மா என்பதால் என்றேனும் ஒருநாள் சாதகன் சாணியை வழித்து எறிவதுபோல் நாமரூபத்தை உள்ளத்திலிருந்து வழித்து எறிந்துவிட முடிந்தால்தான் பிறவிலா முக்தி கிட்டும் என்பது போல் ஆன்மிக விளக்கமும் தரப்படலாம்.
பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. ஒவ்வொரு அதிகாலையும் ஒரு புது சாணிப்பிள்ளையாரை வைக்கும்போது பழைய பிள்ளையாரை எறிந்துவிடத்தானே வேண்டும்?  கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம்.
Enrich your   vocabulary
·        Fund...நிதி 
·        Fundamental...அடிப்படை 
·        Funeral....அடக்கம் 
·        Funnel.....புனல் 
Opposite Words 
Advantage     x    Disadvantage
  • Her experience meant that she had a big advantage over her opponent.
  • The disadvantage of the material is that it fades in strong sunlight.
Against       x   For
  • Mr. Howard has declared that he is against all forms of racism.
  • Everybody is always for peace.
மொழிபெயர்ப்பு
Black Lentil
உளுந்து
Black Pepper
மிளகு
Proverb

A journey of thousand miles begins with a single step.

Howsoever big a task is, it starts with a small step.

Example: I’m feeling overwhelmed by the prospect of completing 4,000-word paper by next week, but I guess I’ll start by writing 500 words every day. After all, a journey of a thousand miles begins with a single step,

இனிக்கும் கணிதம்

            கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
கணித உலகிற்கு இராமானுஜன் விட்டுச்சென்றது : (i) மூன்று குறிப்பேடுகள் (ii) சென்னைப் பல்கலைக்கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913 – 1914) (iii) 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போனக் குறிப்பேடு. (iv) கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகள்.
அறிவோம் அறிவியல்
எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15
அறிவியல் துளிகள்
தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்முதல் வகை நெம்புகோல்
தினம் ஒரு மூலிகை – கருவேப்பிலை
கறிவேம்புகறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது, பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியாஇலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்கள் உள்ளன.
வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
கறிவேப்பிலை     சுவையின்மைபசியின்மைசெரியாமைவயிற்றுப்பொருமல்தொண்டக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.இதனைதொடர்ந்துஉட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.
சொல் விளக்கம் : கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - பேசன் பழம்:
இந்த பழத்தில் (Fruit Benefits In Tamil) அதிகமாக நார்ச்சத்து உள்ளது மற்றும் இந்த பழம் மிகவும் மென்மையாக இருக்கும்.
இந்த பழம் அதிகமாக நாம் உட்கொண்டால் புற்று நோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
வரலாற்றுச் சிந்தனை
இந்தியாவின் முதல் ஊரக ஸ்கேட்டிங் பூங்கா எங்கு துவங்கப்பட்டுள்ளது?
–  JANWAAR ( BUNDELKHAND ) மத்திய பிரதேசம்

தன்னம்பிக்கை கதை – செய்வன திருந்தச் செய்
நீதி: மனசாட்சி
உபநீதி : நேர்மை
பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார். “ஒரே கோவிலுக்கு இரண்டு அம்மன் சிலைகள் செய்கிறீர்களேஏன்?” என்று கேட்டார் பணக்காரர்.
ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.
இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.
அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.
நீதி:  எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது

செயலி -  Anatomy Learning - 3D Atlas https://play.google.com/store/apps/details?id=com.AnatomyLearning.Anatomy3DViewer3&hl=en_US

இணையம் அறிவோம் - https://tamil.examsdaily.in/

Nature Scenery Drawing With Oil Pastels | Landscape Drawing https://www.youtube.com/watch?v=kIuq7F5MCio


No comments:

Post a Comment