அறிவுக்கு விருந்து – 29.07.2019
(திங்கள்)
குறளறிவோம்- 37 - அறன்வலியுறுத்தல்
அறத்தாறு இதுவென
வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல
வாழ்க்கையில் வரும்
இன்ப
துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி
மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய
வழிக்குத் தங்களை
ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல
இன்பத்திலும் அமைதி
கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும்
சுமையாகக் கருதுவார்கள்.
மு.வரதராசனார் உரை:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன்
இஃது
என்று
கூறவேண்டா.
Translation:
Needs not in words to dwell on
virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear!
Explanation:
The fruit of virtue need not be
described in books; it may be inferred from seeing the bearer of a palanquin
and the rider therein.
சிந்தனைக்கு
உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அண்மை
- சமீபம்
அண்மை
- அருகு
விடுகதை விடையுடன்
முட்டையிடும். குஞ்சுபொரிக்காது கூட்டில்
குடியிருக்கும், கூடு கட்ட தெரியாது குரலில்
இனிமையுண்டு சங்கீதம் தெரியாது அது
என்ன? –குயில்
பழமொழி
வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா?
பொருள்/Tamil
Meaning: மற்ற
வரவேண்டிய கடன்களைப் பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன்
வசூலிப்பதில் வீரம்
காட்டும் ஒரு
பற்றாளரைக் குறித்துச் சொன்னது. முதலில் வரவேண்டியதை ஒழுங்காக வசூல்
செய்துவிட்டுப் பின்
வராத
கடன்களைப் பற்றி
யோசிக்கவேண்டும் என்பது
செய்தி.
Transliteration : Vantatai varappatuttata
valakkaattu ramaa?
தமிழ் விளக்கம்/Tamil Explanation
: அது
என்ன
வலக்காட்டு ராமா?
வலம்
என்றால் வலிமை,
கனம்,
ஆணை.
ராமன்
என்பது
ஒருவனைக் குறிக்கும் பொதுச்சொல். வலம்
காட்டும் ராமன்
என்பது
வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். வேறு
விளக்கம் தெரிந்தால் எழுதலாம்.
Enrich
your vocabulary
·
Marine.. நீரில் வாழுகின்ற
·
Species.......இனம்
·
Coastal. கடற்கரை
·
Flippers.. . துடுப்பு
·
Predators....ஊன் உண்ணிகள்
·
Haul....இழுத்தல்
·
Slash....வெட்டு
·
Labourios.....கடின உழைப்பாளர்
·
Snout....நீண்ட மூக்கு
·
Cavity.....பொந்து
·
Emerge.... வெளியேவருதல்
Opposite Words
Always
X Never
- I’ve always wanted to go to Paris.
- He’s never been to Australia.
Amateur
X Professional
- Mickelson won his first major golf tournament while still an amateur.
- You need a professional to sort out your finances.
மொழிபெயர்ப்பு
Carrot
|
கேரட், காரட்
|
Cauliflower
|
பூக்கோசு
|
Proverb
"Never look a gift horse in the mouth."
Meaning: If someone offers you a gift, don't question it.
இனிக்கும் கணிதம்
கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
இவர்
1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே
3000 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
அறிவோம் அறிவியல்
வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு
- தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே,
வடதிசையில் தலை
வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது
மூளையின் செயல்திறன் திறன்
குறைய
வாய்ப்புள்ளது.
அறிவியல் துளிகள்
ஆல்பிரட்
நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படுகின்றன.
தினம் ஒரு மூலிகை – கோரை
கோரை (coco-grass, Cyperus
rotundus) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 140 செ.மீ (55 அங்குலம்) வளரக்கூடியது. இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது.
மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது.
சீன, இந்திய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது
பழங்களும்
அவற்றின் பயன்பாடுகளும் கறுப்பு திராட்சை
வைட்டமின்கள்
ஏ,பி,சி மற்றும்
இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும்
உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
வரலாற்றுச் சிந்தனை
STATE OF THE STATE CONCLAVE 2016 எங்கு நடைபெற்றது? – புதுடெல்லி
.
தன்னம்பிக்கை
கதை – உயர்வு தரும் ஒழுக்கம்..!
‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’
திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர். மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும்.
திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும், கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.
நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர். மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும்.
நீதி நூல்கள்: நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய நீதிநூல்கள் பல நீதிக்கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்தவை ஆகும். இவற்றில் திருக்குறள், உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது. அதனால்தான் அதை ‘உலக பொதுமறை’ என போற்று கிறார்கள். உலக மொழிகள் பலவற்றில் மொழிப்பெயர்க்கப்பட்டு பயிலப்படுகிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு என்று பொருள். ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரியதாய் மதித்துப் போற்ற வேண்டும் என்று வள்ளுவர் குறளின் வழியே வலியுறுத்துகிறார். ஒருவர் தம் வாழ்வில் நன்மை அடைய வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது. இக்கருத்தையே வள்ளுவர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்று விளக்குகிறார். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே நிலைக்கும், தழைக்கும்.
ஒழுக்கக் கல்வி: பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல்லும், நம் தமிழ் நீதி நூல்களும்தான். எந்த நிலையிலும் நமக்கு தீர்க்கமான வழியை அறம் சார்ந்தே போதித்து வழிநடத்தும் வழிகாட்டிகள், நீதிநூல்கள் தான்.
மாணவர்களாகிய நாம், பாடங்களில் கற்கும் நீதிக் கருத்துக்களைத் தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுதல்கூடாது. மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்த வித பேதங்களும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்ற நெறிப்படி நடக்க வேண்டும். இதையே வள்ளுவர், “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மாந்தருக்கு எடுத்துரைக்கிறார்.
மாணவர்களாகிய நாம் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற புறக் கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று, கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறக்கலாம். நெறி தவறாமல் வாழ்ந்து சிறப்போம்! நாட்டின் பெருமை காப்போம்!
No comments:
Post a Comment