அறிவுக்கு விருந்து – 05.07.2019 (வெள்ளி )

குறளறிவோம்-  22    நீத்தார் பெருமை

 
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
மு.வரதராசனார் உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
Translation:
As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to say.
Explanation:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
சிந்தனைக்கு
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகிலே மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது.

தமிழ் அறிவோம்
     
 ஒத்தச் சொற்கள்
                        அவசியம்   -          வேண்டியது
                        அவசியம்    -           தேவை

விடுகதை விடையுடன்
தலையில் கிரிடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
                        அன்னாசிப்பழம்
பழமொழி

* பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!
பொருள்: பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்;இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது, போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உயிருக்கு ஆபத்து வராது.

உண்மையான பொருள்: பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது.


Enrich your   vocabulary
·         Vacancy.....காலி 
·         Vacate....காலிசெய் 
·         Vacation.....விடுமுறைக்காலம் 
·         Vaccinate....அம்மைக்குத்து 
·         Vaccine....அம்மைபால் 
·         Vacillate...ஊசலாடு 
·         Vacuum....வெற்றிடம் 
·         Vagabond.....நாடோடி 
·         Vagary.....எண்ணக்கோளாறு 

Opposite Words
            Come              x          Go
            Comedy          x          Drama

மொழிபெயர்ப்பு
·                          KALE – பரட்டைக்கீரை
·                         KING YAM – ராசவள்ளிக்கிழங்கு
Proverb
* Don’t bite off more than you can chew. *
Meaning : If you take a bite of food that’s too big, you won’t be able to chew! Plus you could choke on all of that extra food. It’s the same if you take on more work or responsibility than you can handle—you will have a difficult time. So it’s best not to get involved in too many projects, because you won’t be able to focus and get them all done well.

இனிக்கும் கணிதம்

121,225,361,       , வரிசையில் அடுத்துவரும் எண் எது?ஏன்?

வரிசை 11,15(11+4), 19(15+4), ஆகியவற்றின் வர்க்கமாக அமைந்துள்ளது.
(112=121, 152=225, 192=361) அடுத்து வரும் எண் (19+4=23ன் வர்க்கம்)   232=529   

அறிவோம் அறிவியல்
மீன் இனங்களில் அதிக ஆண்டுகள் வாழ்வது ஸ்டர்ஜியன்
அறிவியல் துளிகள்
ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படுகின்றன)  1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.

 தினம் ஒரு மூலிகை – தேற்றா 
தேற்றா அல்லது தேத்தா (Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம்என்றும் தேத்தாங்கொட்டைதேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. இதன் இலைகள் பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வோர் இடத்தில் காணப்படுகிறது. இதன் பழம்,விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தேற்றா மரத்தின் விதை ஆகும்.
குளம்ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது.
எனவே சிவகங்கைதஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.
பெயர்க்காரணம்
தேற்றா மரத்தின் கொட்டைதேற்றாங்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த கொட்டையை கலங்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்துவிடும். நீரைத் தெளிவிப்பதாலும் உடலை தேற்றுவதாலும் இது தேற்றான் கொட்டை எனப் பெயர் பெற்றுள்ளது. தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது. இதனைப் பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.
 தேறு + அம் + கொட்டை
 தேறு - தெளிவு
 அம் - நீர்
 கொட்டை - விதை
பிற பயன்பாடுகள்
சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது.
மருத்துவ குணங்கள்
தேற்றா மரத்தின் அனைத்து உறுப்புகளும் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியத்துவம் கொண்டவை. உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் பயன்படுகிறது. இதன் பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி வயிற்றுப் போக்கைக் குணமாக்கும், புண்கள் - காயங்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும், இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – ஆப்பிள்
நம் ஊரில் விளையக்கூடிய பழம் இல்லை என்றாலும் நம் வாழ்வில் இடம்பெறும் பழங்களுள் ஒன்றாகவே மாறிவிட்டது ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால், டாக்டரிடம் செல்லவேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள்.
சுவை தரும் ஆப்பிள் பழத்தில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது மனிதனின் இயல்பான வளர்ச்சி, ஆரோக்கியமான வாழ்வுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
100 கிராம் பழத்தில் 50 கலோரியே உள்ளது. நுரையீரல் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். பித்தப்பை கல்லைக் கரைத்து வெளியேற்றும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியம் தரும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, மிகச் சிறந்த உணவாக ஆப்பிள் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை வராமல் தடுக்கவும் ஆப்பிள் உதவுகிறது.  
ஆப்பிள் கொட்டையில் சிறிதளவு நச்சுத் தன்மை இருப்பதால், கொட்டையை அகற்றிவிட்டு சாப்பிடவேண்டும்.  இதனால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்கலாம்.  
குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவருக்கும் ஏற்றது.
வரலாற்றுச் சிந்தனை
                                           பிற்காலச் சோழ மன்னர்களில்  முதலாம் இராஜராஜன்” (கி.பி985-1014) மிகவும் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த மன்னன் ஆவான். 'ஐம்பெரும் குழு', 'எண்பேராயம்' போன்ற அமைப்புகளை உருவாக்கி அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தான்;'குடவோலை' முறையில் மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்; நாட்டை மண்டலங்களாகவும் கோட்டங்களாகவும் பிரித்து ஆட்சி செய்தான். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன். தேவாரப் பாடல்களைத் தொகுக்கச் செய்தவன். இவனுடைய தலைநகரம் தஞ்சையாகும்.

தன்னம்பிக்கை கதை  -  மகிழ்ச்சிக்கு வழி!

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம். அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.புற உலகில் நமது வாழ்க்கைப் பிறரைச் சார்ந்திருப்பது போலவே, அகவாழ்விலும் நமது வாழ்க்கை பிறரைச் சார்ந்தே இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்ள உதவுவதுதான். இந்த காதை. முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்னன் என்ற ஒர் அரசர் இருந்தார். அவர் ஏழாயிரம் ஆண்டுகள் தன்னுடைய நாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். (ஏழாயிரம் ஆண்டுகள் எப்படி ஒருவர் உயிருடன் இருந்திருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். இது புராணக்கதை. கதைகளில் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாதுதான். ‘ஏழாயிரம் ஆண்டுகள்என்றால் நீண்ட காலம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், புராணக் கதைகள் மூலம் சொல்லப்படும் கருத்தைத்தான் நாம் முக்கியமாகவும் சாரமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.)
அரசாட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றதால் மக்களுக்கு அரசன்மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஒரு நாள்ராணி, அரசனுக்குத் தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அரசியின் கண் கலங்கியது! இதைப் பார்த்த அரசர், அரசியிடம் அவள் கலங்குவதற்குரிய காரணத்தை விசாரித்தார். “உங்கள் தலையில் ஒரு முடி நரைத்திருக்கிறது! அப்படியென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நான் கண் கலங்கினேன்!” என்று அரசி வருத்தத்துடன் கூறினாள். “இதற்குப்போய் யாராவது அழுவார்களா? இது காலன் எனக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை! எனவே நான் உடனே காட்டிற்குச் சென்று எஞ்சியுள்ள காலத்தை தவத்தில் கழிக்க வேண்டும்என்றார் அரசர். “அப்படியானால் நானும் உங்களுடன் வருவேன்என்றாள் அரசி. அரசனும் அரசியும் காட்டிற்குப் போய்விட்டால் அரசாங்கம் என்ன ஆவது?
பொதுமக்கள் பார்த்தார்கள். அவர்கள் அரசனிடம் சென்று, “நீங்கள் இருவருமே காட்டுக்கு போக வேண்டாம். கொஞ்சம்  பொறுங்கள். நாங்கள் சிறிது காலம் கழித்து உங்களிடம் வந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கூறுகிறோம்என்று சொல்லிவிட்டு, வெகு தொலைவில் இருந்த சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்கள். மூன்று மாதம் கழித்து. சூரிய பகவான் அவர்களுக்குக் காட்சியளித்து, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “எங்கள்  அரசர் இன்னும் 10,000 ஆண்டுகள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இளமையோடு இருந்து எங்கள் நாட்டை நன்றாக ஆட்சி செய்ய வேண்டும்என்று மக்கள் வரம் கேட்டார்கள். சூரிய மகவானும் அவர்கள் விரும்பிய படியே வரம் கொடுத்து மறைந்தார். அரசனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அவர் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக வருத்தப்பட்டார். இதைக் கண்ட அரசி, “ இந்தச் செய்தியினால் மகிழ்ச்சியடைவதற்குப் பதில் வருத்தப்படுகிறீர்களே, ஏன்?” என்று வினவினாள்.
இந்த வரத்தினால் நான் எப்படி சந்தோஷப்பட முடியும்? நான் பத்தாயிரம் வருடங்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால் நீயும், இந்த வரத்தைப் பெற்றுத் தந்த நம்முடைய நாட்டு மக்களும் உயிரோடு இருக்க மாட்டீர்களே! என்னுடைய ராணியாகிய நீயும், என் அன்பிற்குரிய  இந்த ஜனங்களும் இல்லாமல் நான் மட்டும் எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க முடியும்?” என்றார்  அரசர். பின்பு அரசனும் அரசியும், அதே சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் புரிந்தார்கள்.
சூரிய பகவான் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு தரிசனம் தந்தார். அப்போது அரசனும் அரசியும், “நாட்டில்  இப்போதிருக்கும் எல்லோருமே பத்தாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்என்ற வரத்தை சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றார்கள். இந்தக் கதை மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயர் சொல்வதாக அமைந்துள்ளது.
கதையின் நீதி:  நம்முடைய மகிழ்ச்சியில் மற்றவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது; மற்றவர்களின் மகிழ்ச்சியில் நம்முடைய மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. இதைத்தான் இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

செயலி - Tamil Speech to Text

இணையம் அறிவோம்  -  http://www.readwritethink.org/


பலாசம் மலர் / ஓவியம் வரைவது எப்படி

No comments:

Post a Comment