அறிவுக்கு விருந்து – 04.07.2019 (வியாழன் )
ஒழுக்கத்து நீத்தார்
பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
வேண்டும் பனுவல் துணிவு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,
சான்றோர் நூலில்
விருப்பமுடனும், உயர்வாகவும் இடம்
பெறும்.
மு.வரதராசனார் உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று
பற்று
விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி
கூறுவதே நூல்களின் துணிவாகும்.
Translation:
The settled rule of every code
requires, as highest good, Their greatness who, renouncing all, true to their
rule have stood.
Explanation:
The end and aim of all treatise is
to extol beyond all other excellence, the greatness of those who, while abiding
in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.
சிந்தனைக்கு
வேலைக்கு முன் வெற்றி என்பதை அகராதியில்கூட காண முடியாது.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அகம் - மனை
அகம் - விரிவு
விடுகதை விடையுடன்
படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
பட்டாசு
பழமொழி
* பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! *
பொருள்: மணமான பின்,
பதினாறு குழந்தைகளை
பெற்று வளமான வாழ்க்கை
வாழ வேண்டும் என
ஆசிர்வாதம் செய்வார்கள்.
உண்மையான பொருள்: வாழ்க்கையில் 16 வகையான
செல்வங்களான உடலில்
நோயின்மை, நல்ல
கல்வி, தீதற்ற செல்வம்,
நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு,
அழியாப் புகழ்,
சிறந்த பெருமை, சீரான
இளமை, நுண்ணிய அறிவு,
குழந்தைச் செல்வம்,
நல்ல வலிமை, மனத்தில்
துணிவு, நீண்ட வாழ்நாள்
(ஆயுள்), எடுத்தக் காரியத்தில்
வெற்றி, நல்ல ஊழ்
(விதி), மற்றும் இன்ப
நுகர்ச்சி பெற்று
வளமாக வாழுங்கள் என்று
பொருள்.
Enrich your vocabulary
Enrich your vocabulary
·
Vanish.....மறைந்துபோ
·
Vanity....பெருமை
·
Vanquish....வெற்றிகொள்
·
Vapour.....நீராவி
·
Variable....மாறுபடும்
·
Variance.....கருத்துவேறுபாடு
·
Varient....வேறுபாடுடைய
·
Variation....வேறுபாடு
·
Varied....பலதிறப்பட்ட
·
Variety.....பலவகை
Opposite Words
Plant x Harvest
Plenty x Lack
மொழிபெயர்ப்பு
·
GOOSEBERRY – நெல்லிக்காய்
·
GREEN BEANS – பச்சை
அவரை
Proverb
* Don’t bite the hand that feeds
you. *
Meaning:
This proverb warns against acting mean to those who provide for
you or who do nice things for you. If you were to bite the hand that gave you
food, that hand probably won’t come back to feed you again. Then what
would you eat? So you should be kind and thankful to those who care for
you.
இனிக்கும் கணிதம்
ஓர் எண்ணை 50ஆல் பெருக்கி 20ஐக் கூட்டிவரும் எண்ணும், அதே எண்ணை 60ஆல்
பெருக்கி அதிலிருந்து 20ஐக் கழித்து வரும் எண்ணும் ஒரே எண்தான் அந்த எண் எது? விடையாகப் பெரும் எண் எது?
அந்த
எண் – 4 விடையாகப் பெரும் எண் – 220
4x50=200+20=220
4x60=240-20
=220
அறிவோம் அறிவியல்
முத்துக்கள் வினிகரில் மட்டுமே
கரையும்.
அறிவியல் துளிகள்
பன்றிகள்
தானாக வானத்தை
பார்ப்பது
சாத்தியமே
இல்லை.
தினம்
ஒரு மூலிகை – அமுக்கிரி
அமுக்கிரி அல்லது அசுவகந்தி (Withania somnifera) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். இதன் வேரும் இலையுமே மருத்துவப் பயனுள்ளவை.
அமுக்கிராவுக்குஅசுவகந்தி அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம்,
இரளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய வேறு பெயர்கள் உண்டு.
‘கந்தம்’ என்றால் கிழங்கு என்பதாக அசுவ‘கந்தம்’ என்றழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் வடமொழியில் குதிரை என்பது பொருள். குதிரை பலத்தை வழங்கும் என்பதால் அசுவகந்தா என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது.[1] இதன் இலையை முகர்ந்தால் குதிரை நாற்றம் அடிப்பதால் அசுவகந்தா அல்லது அசுவகந்தா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் இலையை அரைத்து கட்டிகளின் மேலே பூசினால் கட்டிகளை அமுக்கிவிடும் அதனால் இதனை தமிழில் அமுக்கிரா என்று அழைக்கிறார்கள்.
இது 150 - 170 சென்ரி மீற்றர் உயரமாக வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவம் கொண்டவை. இதன் இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். இச்செடியானது சிவப்பு நிறம் கொண்ட சிறிய அளவிலான காய்களைக் கொண்டிருக்கும்.
மருத்துவ குணங்கள்
அமுக்கிரா கிழங்கானது மூளையின் அழற்சி, வயோதிகம் போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. இரத்த ஒட்டத்தை அதிகரிக்கவும், சீராக்கவும் இது உதவுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துகளில் முக்கிய இடம் வகிக்கிறது. சீன நாட்டு சின்.செங் கிழங்கிற்கு இணையானது. நரம்பு தளர்ச்சி, உடல் வலிமை ஆகியவற்றிற்கு இதன் கிழங்கு பயன்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – அன்னாசிப் பழம்
தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
உடலுக்குத் தேவையான சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைவாகவே உள்ளன. திசுக்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கிறது. புற்றுநோயை எதிர்க்கும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.
மாங்கனீஸ் தாதுப்பொருள் இருப்பதால், எலும்பு உறுதித்தன்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். குமட்டல், வாந்தியைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மார்னிங் சிக்னஸ் நேரத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். செரிமானத் திறன் அதிகரிக்கும்.
குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு அன்னாசிப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
பொட்டாசியம் அளவு குறைவு என்பதால் சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
வரலாற்றுச் சிந்தனை
தமிழகத்தை ஆண்ட முற்காலச் சோழ
மன்னர்களில் கரிகால் சோழன்
(கி.பி.
இரண்டாம் நூற்றாண்டு) மிகச்
சிறந்த
மன்னன்
ஆவான்.
காவிரியில் 'கல்லணை'யைக் கட்டி விவசாயத்தைப் பெருக்கினான்; சிறந்த
நீதிமானாகவும் விளங்கினான். முற்காலச் சோழர்களின் தலைநகரம் உறையூர்.
தன்னம்பிக்கை கதை - வெற்றியின் முதற்படி
“அம்மா! இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் ஓட்டப் பந்தயத்தில்
கலந்துகொள்ளப் போகிறேன். எனக்குத்தான் முதற்பரிசு கிடைக்கும். அதற்காகப் பல நாளாகப் பயிற்சி
எடுத்து வருகிறேன்” என்றான் செந்தில்.
“மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன்
முயற்சிசெய்” என வாழ்த்தினார், அவன்
தாய். எதிர்பார்த்தபடியே
செந்திலுக்கு முதற்பரிசு கிடைத்தது. அவன் வெற்றிக் கோப்பையுடன்
வீட்டுக்கு வந்தான். அம்மா விருந்து சமைத்துக்கொண்டு இருந்தார். தான் வெற்றி பெற்ற
செய்தியை யாரோ அம்மாவிற்கு முன்னதாகவே
தெரிவித்து இருக்கிறார்கள். அதனைக் கொண்டாடத்தான் அம்மா விருந்து செய்கிறார் என நினைத்தான்.
தாயை அனைத்துக் கொண்ட
செந்தில், “அம்மா! நான் வெற்றி பெற்றது
உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக்கேட்டான். “மகனே! நீ வெற்றி பெறுவாய்
என எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த அட்டையைப் பார்”
என்றார், அம்மா. “மகனே! உன் வெற்றிக்கு வாழ்த்துகள்.
அதற்காகத்தான் இந்த விருந்து’ என
அதில் எழுதியிருந்தது. குடும்பத்தினருடன் செந்தில் விருந்தை மிக மகிழ்ச்சியுடன் சுவைத்துச்
சாப்பிட்டான்.
சிறிது நேரத்திற்குப்பின் அம்மா கொடுத்த அந்த அட்டையைச் செந்தில்
கையில் எடுத்தான்; பின்பக்கமும் ஏதோ எழுதி இருப்பதுபோலத்
தெரிந்தது; திருப்பிப் பார்த்தான்.
அதில், ‘அன்பு மகனே! தோல்வி, வெற்றி இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்கவேண்டும்.
வெற்றி ஏற்பட்டுவிட்டது என்று தற்பெருமைக்கொள்ளக்கூடாது தோல்வி ஏற்பட்டுவிட்டது என்பதற்காக மனம் உடைந்துபோகக் கூடாது.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் மனிதருக்கு அடிக்கடி நடக்கக் கூடிய சம்பவங்கள். ஆகையால் முயற்சி செய் பலனை அதிகம்
எதிர்பார்காதே. நம்பிக்கையோடு இரு. என்று எழுதப்பட்டு
இருந்தது. செந்தில் மகிழ்ச்சியோடு தன் அம்மாவைப் திரும்பிப்
பார்த்தான்.
தன் அம்மாவின் கருத்தை
பள்ளிக்கு போனதும் தன் சக நண்பர்களுக்கும்
சொல்ல வேண்டும் என்று நினைத்து தனது சட்டைப் பையில்
அந்த அட்டையைப் போட்டுக் கொண்டான்.
செயலி -
Tamil Text To Speech by Hear2Read (Male voice)
No comments:
Post a Comment