அறிவுக்கு விருந்து – 09.07.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 09.07.2019 (செவ்வாய்)
குறளறிவோம்-  24  - நீத்தார் பெருமை

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை: உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
மு.வரதராசனார் உரை: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
Translation: He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.
Explanation: He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
சிந்தனைக்கு
·         தவறான மனிதர்களுடன் விவாதம் செய்வதைவிட   சுலபம்
சரியான மனிதர்களுடன் அட்ஜட்ஸ் செய்து போவது.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
                                    அமர்             -          யுத்தம்
                                    அமர்             -           போர்
விடுகதை விடையுடன்
எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது. அது என்ன?
                                                                        நாய்
பழமொழி  
*கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!! *
பொருள்: நாயை பார்க்கும் போதெல்லாம் அதை அடிக்க கல் அகப்படுவதில்லை; அதுபோல கல்லை காணும் போதும் அடிவாங்க நாய் சிக்குவதில்லை.
உண்மையான பொருள்: கோவிலில் கால பைரவர் சன்னதியில் நாயின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதை கலை கண்ணொடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய் தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.
Enrich your   vocabulary
·         Habit....பழக்கம் 
·         Habitable....வசிக்கத் தக்க 
·         Habitat.....வழக்கமான 
·         Hack....வெட்டு 
·         Hag....சூனியக்காரி 
·         Haggard....சோர்வு 
·         Hail....வரவேற்பு 
·         Hale.....இழுத்து 
·         Half......பாதி 
·         Hallow....தூய்மையாக்கு 

Opposite Words 
A lot   x    A little
·       We’ve spent a lot on the children’s education.
·       Fortunately I had a little time to spare.
Abate  Increase
·       Steps are to be taken to abate pollution.
·       The population has increased from 1.2 million to 1.8 million.
மொழிபெயர்ப்பு
·         OLIVE – இடலை
·         PARSLEY – வேர்க்கோசு
Proverb

* A cat has nine lives. * 

Cat can survive seemingly fatal events.

Example: I haven’t seen him for several weeks, but I wouldn’t really worry about him. Everyone knows a cat has nine lives.

இனிக்கும் கணிதம்
            ஒரு முக்காலியின் மூன்று கால்கள் வெவ்வேறு நீளமுடையதாக இருந்தாலும்கூட, முக்காலி சாய்ந்துவிடாமல் உறுதியாக நிற்குமென்று சொல்கிறார்கள். இது சரிதானா?
முக்காலி எப்படிச் சாய்ந்தாலும், அதன் மூன்றுபுள்ளிகளின் கீழே உள்ள புவியீர்ப்பு விசையும் ஒரே தளத்தில்தான் கீழே விழும். அதனால் முக்காலிகளின் மூன்று கால்களும் எப்போதும் தரை மீது படிந்தேஇருக்கும். முக்காலி சாய்ந்து கீழே விழாமல் இருப்பதற்கு இதுவே காரணம். வடிவகணிதத்தின் அடிப்படையில்அது வடிவமைக்கப்பட்டிருப்பதே காரணம். இதனால்தான் நில அளவைக் கருவிகளும், கேமரா ஸ்டாண்டுகளும் வசதியாக அமைவதற்கு மூன்று கால்கள் காரணமாக இருக்கின்றன. நான்காவது காலால் உறுதி அதிகமாவதில்லை. மாறாக, ஒன்று சாய்ந்தாலும் பிரச்சினைதான்

அறிவோம் அறிவியல்
காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி அனீமா மீட்டர்
அறிவியல் துளிகள்
மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல்.எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டுவாசலில் கோலம் போட வைத்தார்கள். கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடைஇடுவதே முக்கியமானது. ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம்போடுகிறார் கள். இதனால் எறும்புகள் ஏமாந்தது நமக்குத் தெரியுமா என்ன?  
தினம் ஒரு மூலிகை – அவரை
அவரை என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும். இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும். இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு.. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது.
ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.
·         ஆட்டுக் கொம்பவரை, ஆரால் மீனவரை, ஆனைக் காதவரை, கணுவவரை, கொழுப்பவரை, கோழியவரை, சிவப்பவரை, சிற்றவரை, தீவாந்தர வவரை,நகரவரை, பாலவரை, பேரவரை, முறுக்கவரை, கப்பல் அவரை காட்டவரை, வீ ட்டவரை, சீமையவரை, சீனியவரை, கொத்தவரை, குத்தவரை, சுடலையவரை அல்லது பேயவரை, பட்டவரை, வாளவரை, தம்பட்டவரை, சாட்டவரை.   

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – திராட்சை
திராட்சையைப் 'பழங்களின் அரசி என்கின்றனர். பச்சை/வெள்ளை, சிவப்பு/பர்பிள், கருப்பு/கருநீலம் எனப் பல நிறங்களில் கிடைக்கிறது.
இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்னைகள், வெரிகோசிஸ் வெயின், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. மேலும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும்.
திராட்சையில் உள்ள ஒரு வகையான ரசாயனப் பொருள் குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயில் இருந்தும், இதய ரத்தக் குழாய் நோய்களில் இருந்தும், நரம்பு தொடர்பான பிரச்னைகளில் இருந்தும், வைரல் - பூஞ்சை நோய்த்தொற்றில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மைகொண்டது. இந்த ரசாயனப் பொருள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ரத்த குழாய்களைத் தளர்வுறச் செய்வதால், மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும் தன்மை திராட்சைக்கு உண்டு என்பதால், சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படுகிறது.
வைட்டமின் சி, , கே, கரோட்டினாய்ட், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் ஓரளவுக்கு உள்ளன. தாமிரம், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் அசிடிட்டி, அல்சர், வாயுப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வரலாற்றுச் சிந்தனை
                             தமிழகத்தில், சேரர், பாண்டியர், சாளுக்கிய மன்னர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். பல்லவ மன்னர்களில் 'முதலாம் நரசிம்மவர்மன்' காலத்தில் சிற்பக்கலை செழித்தோங்கியது.


தன்னம்பிக்கை கதை  -  பயத்தால் வந்த உன்மை.
25 வயது ஜார்ஜ் கார்டன் மிசிசிபி நகரில் உள்ள ஒரு வங்கியில் காசாளாராக பணியாற்றி வந்தார். தீடீரென்று ஒரு நாள் அவர், தன் வேலை பார்த்த வங்கியிலேயே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதோடு 55 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் போலீஸ் எவ்வளவோ முயன்றும் கார்டனை யார் கொலை செய்தார் என்பதையும் பணம் எங்கே போனது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதனால் ஆலன் பிங்கெர்டன் என்னும் தனியார் துப்பறியும் துறை அதிகாரி அந்த வழக்கை சவாலாக ஏற்றுக் கொண்டு குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் இறங்கினார். ஆனால் அவருக்கும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
எனினும் கார்டனுடன் பண்புரிந்த சக ஊழியர் டிரைடேல் என்பவர் மீது பலமான சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. டிரைடேல் தானாக ஒப்புக் கொண்டால் மட்டுமே அந்தக் கொலையைச் செய்தவர் அவர்தான் என்பதை நிரூபிக்க முடியும். டிரைடேலிடம் ஆலன் துருவித் துருவி விசாரித்தபோது கூட எந்த வித முன்னேற்றமும் இல்லை. விசாராணையின் ஒரு கட்டத்தில் டிரைடேல் சட்டப்படி என்னை எதுவும் செய்ய முடியாது  என்று கத்தினார். இதனால் ஆலனுக்கு சந்தேகம் வலுத்தது. எப்படியும் டிரைடேலை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நுதான திட்டத்தை தீட்டினார். அதன்படி செயல்படவும் செய்தார்.
ஓரு நாள் இரவு டிரைடேலின் வீட்டிற்கு ஆலன் சென்றபோது தன்னுடன் ஒருவரை அழைத்துச் சென்றார். அவரை வெள்ளை நிற ஆடை அணியும் படிகூறி அழைத்துப்போனார். ஆலனுடன் வந்தவரைப் பார்த்த டிரைடேல் அய்யோ இவன் எப்படி இங்கே வந்தான்?... என்று அலறினார். உடனே ஆலன் யார், என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே என்று அமைதியாகச் சொன்னார். அந்தப் பொய்க்கு நல்ல பலன் இருந்தது.
அய்யோ... அப்படியென்றால் உங்களுடன் வந்திருப்பது ஆவியா?... அந்த ஆவி என்னை எதுவும் செய்துவிடுவதற்குள் நான் கார்டனை கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறேன் என்று கத்தினார். டிரைடேலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தார், ஆலன் சரி, ஆலன் என்ன தந்திரம் செய்தார்?...
இறந்து போன கார்டனைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவரை தனது திட்டத்திற்கு ஆலன் தேர்ந்தெடுத்தார். பின்னர் ஒருநாள்  அவருக்கு வெள்ளையுடை அணியச் செய்து டிரைடேலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆலனின் திட்டப்படி யாருக்கும் தெரியாமல் திடீரென்று வெள்ளையுடை நபர் அங்கே வரவேண்டும். அப்படிச் செய்தால் டிரைடேல் பயந்து போய் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வான் என்பது துப்பறியும் அதிகாரி ஆலனின் திட்டம். அதில் சரியாக டிரைடேல் மாட்டிக் கொண்டான் என்பதே உண்மையான கதை.
ஆலன் டிரைடேல் நடத்திய நிறுவனத்திற்கு பெயர் நேஷனல் டிடெக்டிவ் ஏஜென்சி என்று பெயர். இந்த நிறுவனத்தின் சுலோகம்: நாங்கள் எப்போதும் உறங்குவதில்லை. இதன் அடிப்படையில்தான் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் பல திறந்திருக்கும். அடையாளச் சின்னமாக அதற்கு கண்தொடர்பான பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள்.
செயலி - Tamil Voice To Text Translator

இணையம் அறிவோம்  -  https://www.ck12.org/student/

பயினி மலர் / ஓவியம் வரைவது எப்படி

No comments:

Post a Comment