அறிவுக்கு விருந்து –
15.07.2019 (திங்கள்)
நிறைமொழி மாந்தர்
பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
மறைமொழி காட்டி விடும்.
கலைஞர் மு. கருணாநிதி உரை: சான்றோர்களின் பெருமையை, இந்த
உலகில்
அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி
நூல்களே எடுத்துக் காட்டும்.
மு. வரதராசனார் உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல
சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
Translation: The might of men whose word is never
vain, The 'secret word' shall to the earth proclaim.
Explanation: The might of men whose word is never
vain, The 'secret word' shall to the earth proclaim.
சிந்தனைக்கு
எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம்
இல்லை
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
அளை - வளை
அளை - தயிர்
விடுகதை விடையுடன்
இளமையில் பச்சை,முதுமையில் சிகப்பு,குணத்திலே எரிப்பு விடை தெரியுமா? - மிளகாய்
பழமொழி
* சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்*
பொருள்: சட்டியில் என்ன
(சோறு) இருக்கிறதோ அது
தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்: சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
Enrich your vocabulary

·
Abacus....மணிச்சட்டம்
·
Abandon....கைவிடு
·
Abase.....தாழ்த்து
·
Abbey...மடாலயம்
·
Abbot....மடாதிபதி
·
Abbrevate.....சுருக்கு
·
Abdicate....கைவிடுதல்
·
Abdomen.... அடிவயிறு
·
Abduct...பலாத்காரம்
·
Abate....தூண்டு
Opposite Words
Accept
x Decline
- Rick accepted her offer of coffee.
- His school reports said that he never declines a challenge.
Accept
x Refuse
·
He accepted the invitation to stay with us.
·
The chairman refused to answer any more
questions
மொழிபெயர்ப்பு
·
SQUASH GOURD – சீமைப்பூசனி(க்காய்)
·
SWEET POTATO – வத்தாளக்
கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு
Proverb
A cat has nine lives.
Cat can survive seemingly fatal events.
Example: I haven’t seen him for several weeks, but I wouldn’t really worry about him. Everyone knows a cat has nine lives.
இனிக்கும் கணிதம்
வட்ட வடிவ கடிகாரத்தை பார்த்திருக்கிறீர்கள் தானே. அந்த கடிகாரத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அதை 6 துண்டுகளாகப் பிரிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு துண்டிலும் கிடைக்கும் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை ஒரே மாதிரி வர வேண்டும்.
கடிகாரத்தில்
உள்ள எல்லா எண்களின் கூட்டுத்தொகை 78. ஆகவே, ஆறு துண்டுகளில் ஒவ்வொன்றிலும்
எண்களின் கூட்டுத்தொகை 78 /6 = 13 என்று வர வேண்டும். இதன்
அடிப்படையில் 12 + 1,
11+ 2, 10 + 3, 9 + 4, 8 + 5, 7 + 6 எனப்
பிரிக்கலாம்/
அறிவோம் அறிவியல்
ஒரு
பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் – நிறை எனப்படும்
அறிவியல் துளிகள்
அனிமாலியாவுக்கு
எடுத்துக்காட்டு – மண்புழு
தினம் ஒரு மூலிகை – ஆல்
ஆல் அல்லது ஆலமரம் (Ficus
benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள், பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
·
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
·
நல்ல நிழல் தரும்.
·
இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
·
ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
·
பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
·
இது நல்ல நிழல் தருகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - வேப்பம்பழம்:
பொதுவாக இந்த
பழத்தை (Fruit
Benefits In Tamil) அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை, இந்த
பழம்
நன்றாக
முற்றி
மரத்தில் இருந்து தானாக
கிழே
விழும்
பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கும்.
இந்த பழத்தை
நாம்
சாப்பிட்டால் உடலுக்கு எந்த
ஒரு
நோயும்
அண்டாது மற்றும் இது
பித்தத்தை தணிக்கும் தன்மை
வாய்ந்தது. இவற்றை
அதிகமாக நாம்
உட்கொண்டால் சொரி,
சிரங்கு, தோல்
நோய்கள் ஆகியவை
குணமாகும்.
வரலாற்றுச் சிந்தனை
மொகலாயர்களைத் தொடர்ந்து இந்தியாவின் இயற்கைச் செல்வங்களின்மேல் ஆசை
வைத்த
ஆங்கிலேயர்களும் மற்றும் சில
ஐரோப்பியர்களும் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு முதல்
இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
தன்னம்பிக்கை
கதை – கதை கேட்ட நாயை ……………. அடி!
ஒரு ஊரில் ஒரு அம்மையார் தனிமையில் வாழ்ந்தார். கணவரும் இல்லை- குழந்தைகளும் கிடையாது. ஆனால் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தார். பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பார். முதலில் நாய்க்கு உணவு படைத்துவிட்டு தானும் சாப்பிடுவார்.
ஒரு நாள், அந்த நாய் மிகவும் அதி காலையில் எழுந்து பசிக்கிறது, அம்மா! சோறு போடுங்கள் என்றது. அவள் வீட்டிலோ அரிசியோ தானியமோ இல்லை. நாய் சொன்னது, அம்மா! அடுத்த வீட்டு அம்மணியிடம் அரிசி கடன் வாங்குங்கள். நான் சாப்பிட்ட உடனே போய் பிச்சை வாங்கி வருகிறேன். அந்த அரிசியை அவரிடம் இன்றே கொடுத்து விடலாம்.
அவளும் அப்படியே செய்தாள். நாயும் சொன்னபடியே சாப்பிட்டு விட்டு வாயில் பிச்சைப் பாத்திரத்தைக் கவ்விக் கொண்டு வீடு வீடாகச் சென்றது. எல்லோருக்கும் ஒரே அதிசயம். வழக்கமாகப் போடும் பிச்சையைவிட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாகவே பிச்சை இட்டனர். அது எடை தாங்காமல், பக்கத்திலுள்ள செட்டியார் கடையில் கொடுத்தவுடன் அவர் அதற்கான பணம் கொடுத்தார். நாய் மீண்டும் ஒரு ரவுண்டு போனது.
பக்கத்தில் வாரச் சந்தை (மார்க்கெட்) கூடி இருந்தது. ஒரே கூட்டம். நாயும் பிச்சைப் பாத்திரத்துடன் சென்றவுடன் மக்கள் எல்லோரும் அதிசயமாக அதைப் பார்த்துவிட்டு, காசை அள்ளி வீசினார்கள். நாய் அதைத் தூக்க முடியாமல் சுமந்து சென்றது. சந்தையில் ஒரு ஓரத்தில் மக்கள் கூட்டமாக நின்று ராமாயண கதாகாலேட்சபம் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தனர். அன்று அவர் சொன்ன கதை — சீதாப் பிராட்டியிடம் அனுமன் மோதிரம் கொடுத்துவிட்டு அவள் கொடுத்த சூளாமணியை வாங்கிச் செல்லும் கட்டம். இது போன்ற தருணத்தில் எல்லோரும் பாகவதருக்கு மோதிர, நகைகள் வாங்கித் தருவர். அது முடியாதவர், அவர் தட்டில் காசு போடுவர்.இதை எல்லாம் வேடிக்கை பார்த்த நாய் , கதை கேட்ட உற்சாகத்தில், தனது பிச்சைப் பாத்திரத்தில் இருந்த பணம், தானியம், எல்லா வற்றையும் ராமாயண பாகவதர் தட்டில் கொட்டியது. எல்லோரும் கைதட்டி ஆரவாரித்து நாயின் பக்தியைப் பாராட்டினர்.

இதற்குள் எஜமானி அம்மா வீட்டில் பலரும் நாயின் புகழைப் பாடிக் கொண்டிருந்தனர். அடீ! இனிமேல் உனக்கு ஒரு குறையும் இராது. உனது நாய் ஒரு வருஷத்துக்கான பத்தைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. அடியே! இனிமேல் உன் நாயையே பிச்சைக்கு அனுப்பு. நீ பணக்காரி ஆகிவிடுவாய்.
இப்படி எல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது நாய் வாலைக் குழைத்துக் கொண்டு ஆவலுடன் வந்தது. அவளும் மிக ஆசையோடு நாயை வரவேற்று உபசார மொழிகள் கூறி என்ன இது? பிச்சைப் பாத்திரம் காலியாக இருக்கிறது? என்று கோபத்தோடு கேட்டாள். நாய், தான் கதை கேட்ட விஷயத்தையும் எல்லோரைப் போலத் தானும் பாகவதருக்கே எல்லாவற்றையும் தானம் கொடுத்ததாகவும் பெருமையாகச் சொன்னது.
அவளுக்கிருந்த கோபம் பெரிதாக வெடித்தது. நாயைக் கண்டபடி திட்டி, கதை கேட்ட நாயைச் செருப்பால அடி – என்று சொல்லி நாலு அடிபோட்டாள். நாய் வெளியே ஓடிப் போய்விட்டது.

இதுதான் தமிழில் “கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி” – என்ற பழமொழிக்குக் காரணமாம்!
செயலி_ Space 4D+
பசும்பிடி மலர் / ஓவியம் வரைவது எப்படி
No comments:
Post a Comment