அறிவுக்கு விருந்து –
12.07.2019 (வெள்ளி)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
வகைதெரிவான் கட்டே உலகு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஐம்புலன்களின் இயல்பை
உணர்ந்து அவற்றை
அடக்கியாளும் திறன்
கொண்டவனையே உலகம்
போற்றும்.
மு.வரதராசனார் உரை: சுவை, ஒளி,
ஊறு,
ஓசை,
நாற்றம் என்று
சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய
வல்லவனுடைய அறிவில் உள்ளது
உலகம்.
Translation: Taste, light, touch, sound, and
smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway.
Explanation: The world is within the knowledge of
him who knows the properties of taste, sight, touch, hearing and smell.
சிந்தனைக்கு
மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்.
தமிழ் அறிவோம் ஒத்தச் சொற்கள்
ஆசை - அவா
ஆசை -
விருப்பம்
விடுகதை விடையுடன்
கடிபடமாட்டான், பிடிபடமாட்டான் அவன் யார்? - தண்ணீர்
பழமொழி
*போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.
பொருள்: என்ன வேலைக்கு
போவது என தெரியாமல்
நிற்பவன் தான்
போலிஸ் வேலைக்கு போவான்;
வேறு வேலைக்கு போக
வழி தெரியாதவன் வாத்தியார்
வேலைக்கு போவான்.
உண்மையான பொருள்: மற்றவருக்கு போக்கு
கற்று கொடுப்பவனுக்கு போலீஸ்
வேலை; வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை
என்பது சரியான பொருள்.
Enrich your
vocabulary
·
Abeyance....ஒத்திவை
·
Abhor.....வெறு
·
Abide....காத்திரு
·
Ability.....திறமை
·
Abject....இழிவான
·
Abjure......ஏமாற்று
·
Applause.....பாராட்டு
·
Ablaze.....பிரகாசமான
·
Able.....சக்தியுள்ள
·
Ablution.....கழுவிவிடல்
Opposite Words
Absent x Present
- Students who are regularly absent from school.
- The gases present in the Earth’s atmosphere.
Abundant x Scarce
- Fish are abundant in the lake.
- Food was often scarce in the winter.
மொழிபெயர்ப்பு
· SNAKE
GOURD – புடல், புடலங்காய்
· SPRING
ONION – வெங்காயத்தடல்
Proverb
A bird in hand is worth two in the bush.
Things we already have are
more valuable than what we hope to get.
Example: X: Why did you turn down
that job offer when you don’t have anything concrete in hand at the moment?
Y:
Well, I’m confident I’ll land one of the two jobs I interviewed for last week.
And they’re better than this one.
X: In my opinion, you should’ve taken it. A bird in
hand is worth two in the bush.
இனிக்கும் கணிதம்
0 முதல் 9 வரை பத்து பல வகை எண் முறை இலக்கங்களில் எல்லாவற்றையும் பயன்படுத்தி 1யை கொண்டு வர முடியுமா?
1யை
இரு பின்னங்களின் கூட்டுத்தொகையாகக் காட்ட வேண்டும். அவ்வளவுதான். 148/296+ 35/70 = 1
அறிவோம் அறிவியல்
பாலின் தரத்தை அளவிடப்பயன்படுத்தும் கருவி – லாக்டோமீட்டர்
அறிவியல் துளிகள்
பகல்
நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
தினம்
ஒரு மூலிகை – ஆமணக்கு
ஆமணக்கு (Ricinus communis) வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து இருப்பதாலும், பொருளாதாரப் பலன்கள் அதிகளவில் இருப்பதாலும் தமிழக அரசு இதனை அதிகளவில் வளர்க்க பெரிதும் ஊக்கப்படுத்துகிறது. எண்ணெய் வித்துக்கள் பலவகைகளில் காணப்படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கெண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.
ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.
பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
·
சிற்றாமணக்கு
·
பேராமணக்கு
செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடியாகவும் ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் - களாப்பழம்
இந்த பழம் (Fruit Benefits In Tamil) வருடத்தில் ஒரு
முறை
மட்டுமே கிடைக்கும். இந்த
பழம்
காயாக
இருக்கும் போது
இந்த
பழத்தை
ஊருகாய் போட
பயன்படுத்துவார்கள்.
களாப்பழம் காயாக இருக்கும் போது
மிகவும் புளிப்பாக இருக்கும், இந்த
பழம்
பழுத்த
பிறகு
மிகவும் இனிப்பு சுவையாக இருக்கும். இந்த
பழத்தை
அதிகமாக சாப்பிட்டால் உணவு
எளிதில் ஜுரணமாகி நமக்கு
பசி
தன்மையை அதிகரிக்கும் மற்றும் உடல்
உஷ்ணத்தினால் ஏற்படும் தொண்டை
வலியை
குணப்படுத்தும் தன்மை
வாய்ந்தது.
உடல் சூட்டினால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும் தன்மை
வாய்ந்தது களாப்பழம்.
வரலாற்றுச் சிந்தனை
மொகலாய
அரசர்களில் பாபரும் அக்பரும் சிறந்த
அரசர்களாக விளங்கினார்கள். அக்பர்
இந்தியர்களோடு; திருமண
உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். சிற்பக்கலையும் கட்டிடக்கலையும் மேன்மை
அடைந்தன. எல்லா
மதங்களையும் நேசித்தார். மன்னர்
ஷாஜஹான் தன்
மனைவி
மும்தாஜின் நினைவாகக் கட்டிய
'தாஜ்
மஹால்'
உலக
அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தன்னம்பிக்கை
கதை –
உயர
உயரப்
பறந்தாலும்
ஊர்க்குருவி
பருந்தாகுமா?
ஒரு ஊரில் ஒரு
கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன்.
எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு
ஊரில் நல்ல பெயர் இல்லை.
ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை
கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி
பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை
வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய
தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி
அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம்
கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.
அவர்
முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம்
பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.
பின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில்
நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு
சந்யாசியா? பணத்தின் மீது இவ்வளவு ஆசை
ஏன்? சீ! சீ! வெளியே
போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக்
கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக்
கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன்.
இந்தா நீ கொடுத்த 55 ரூபாய்
என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப்
போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா? ஒரு
ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக்
கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா? என்று
ஊரே சிரித்தது. வான
மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும்
அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.
செயலி - Animal 4D+
பலாசம்
மலர் / ஓவியம் வரைவது எப்படி
No comments:
Post a Comment