அறிவுக்கு விருந்து – 30.07.2019
(செவ்வாய்)
குறளறிவோம்- 38 - அறன்வலியுறுத்தல்
வீழ்நாள் படாஅமை
நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு
வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும்
கல்லாக
அந்த
நற்செயல்களே விளங்கும்.
மு.வரதராசனார் உரை:
ஒருவன்
அறம்
செய்ய
தவறிய
நாள்
ஏற்படாதவாறு அறத்தை
செய்வானானால் அதுவே
அவன்
உடலோடு
வாழும்
நாள்
வரும்
பிறவி
வழியை
அடைக்கும் கல்லாகும்.
Translation:
If no day passing idly, good to do
each day you toil, A stone it will be to block the way of future days of moil.
Explanation:
If one allows no day to pass without
some good being done, his conduct will be a stone to block up the passage to
other births.
சிந்தனைக்கு
உங்கள் கோபத்திற்காக வேறு யாராலும் நீங்கள்
தண்டிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் கோபத்தாலேயே தண்டிக்கப்படுவீர்கள். - புத்தர் -
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள் அணை - வரம்பு
அணை - அணைக்கட்டு
விடுகதை விடையுடன்
வாயிலிருந்து நூல்போடுவான் மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளைத்தாவுவான் குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கி இருப்பான் வேடனும் இல்லை அவன் யார் ? –சிலந்தி
பழமொழி
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்/Tamil Meaning ஒரு மஹாகவியின் தாக்கம் அவர்
வீட்டில் உள்ள
பொருட்களிலும் பயிலும் என்பது
செய்தி.
Transliteration
Kampan veettuk kattut tariyum kavipatum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
’கம்பன்
வீட்டு
வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது
இப்பழமொழியின் இன்னொரு வழக்கு.
வெள்ளாட்டி என்பவள் வீட்டு
வேலைகள் செய்யும் வேலைக்காரி.’கட்டுத் தறி’
என்பது
என்ன?
தறி
என்றால் நெசவு
என்பதால் கம்பர்,
வள்ளுவர் போல
நெசவுத் தொழில்
செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி
உள்ள
கட்டுக் கதைகளில் அவர்
நெசவாளர் என்ற
செய்தி
இல்லை.
சிலர்
’கட்டுத் தறி’
என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று
பொருள்
கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’
என்றதன் சரியான
பொருள்
’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச்
சுவடிகள்’ என்றே
படுகிறது. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச்
சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே,
கம்பர்
பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப்
படாமல்
காலியாக உள்ள
கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே
சரியான
விளக்கம் என்று
தோன்றுகிறது.
Enrich
your vocabulary
·
Fertile.....வளமான
·
Abandoned.....கவனிப்பாரற்ற
·
Vigorous.....தீவிரமான
Opposite Words
Amuse
x Bore
- He made funny faces to amuse the children.
His blue eyes seemed to bore into her.
Ancient x Modern
- So according to history it has been found from the most ancient times, and so it is to our own day.
- They are the youngest children in modern times to face murder charges.
மொழிபெயர்ப்பு
celery
|
ஆஜ்மோடா, ஓமஇலை
|
Chilli, Green chilli
|
பச்சை மிளகாய்
|
Proverb
"Contentment is more than a kingdom."
போதும் என்ற மணமே பொன்செய்யும் மருந்து
இனிக்கும் கணிதம்
கணித மேதை ராமானுஜரைப் பற்றி சில சுவையான தகவல்கள் :
ஹார்டி
சொல்கிறார் – “நான் அவருக்கு சொல்லிக்
கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும்,
ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை
விட நான் அவரிடமிருந்து கற்றதுதான்
அதிகம்.
அறிவோம் அறிவியல்
வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்
. மஞ்சள் மிக நல்ல
கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள
இடங்களுக்குச் சென்று
திரும்பும் நம்
கால்கள் முதலில் மிதிப்பது, நம்
வாசல்
நிலைப்படியைத்தான். அங்கு
மஞ்சள்
தடவப்பட்டிருந்தால், அது
கிருமிகளை உள்ளே
வரவிடாமல் தடுத்து, நோய்த்
தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
அறிவியல் துளிகள்
மின்காந்தக்
கொள்கை - மாக்ஸ்வெல்
தினம்
ஒரு மூலிகை – தகரை
தகரை (Senna tora) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும்.
காசல்பினிஒடிஸ் (Caesalpinioideae) என்றதுணைக்குடும்பத்தைச்
சார்ந்தது என தாவரவியலாளர் லின்னேசியஸ் வகைப்படுத்திக்காட்டுகிறார்.
இத்தாவரத்தின் பெயர் சிங்கள மொழியிலிருந்து வந்ததாகக்
கூறப்படுகிறது. இலங்கையில் இத்தாவரம் நிறைய இடங்களில் காணப்படுகிறது. இதன்
பூர்வீகம் எதுவென்று தெரியாவிட்டாலும், தெற்கு ஆசியப்
பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் பச்சை திராட்சை
வைட்டமின்
சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.
வரலாற்றுச்
சிந்தனை 5வது சர்வதேச சுற்றுலா அங்காடி எங்கு நடைபெற்றது ? – இம்பால் ( மணிப்பூர்) [5TH INTERNATIONAL TOURISM MART]
தன்னம்பிக்கை கதை – காவல்காரன்
பஞ்சமி நாட்டின் மன்னர்
பஞ்சோபகேசன். இவர்
புதிதாக அமைத்த
அழகிய தென்னந் தோப்பைக்
காவல் காக்க, பொறுப்பான
ஆள் தேவை. அந்த
வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை
செய்தார். அப்போது
அவனுக்கு, விவேகன்
நினைவு வந்தது. அரசவை
கோமாளியான அவன்
அங்கும், இங்கும்
சுற்றி வருகிறான். எந்த
வேலையும் செய்வது
இல்லை. அவனுக்கு இந்த
வேலையை கொடுப்பது என்று
முடிவு செய்தார்.
""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம்.
இவற்றைப் பாதுகாக்கும்
பொறுப்பு உன்னுடையது.
இந்தக் கன்றுகளை இரவிலும்,
பகலிலும் நன்றாக
பார்த்துக் கொள்ள
வேண்டும். கவனமாக
நடந்து கொள்,'' என்றார்.
""அரசே! நீங்கள்
சொன்னது போலவே
நடந்து கொள்வேன்,'' என்றான்
விவேகன். அங்கே
தென்னங்கன்றுகள் நடப்பட்டன.
அவற்றிற்கு காவல்
இருக்கத் தொடங்கினான்
விவேகன்.
பகல் வேளையில், அவற்றைப்
பார்த்துக் கொள்வது
அவனுக்கு எரிச்சலாக
இருந்தது. இரவு
வந்தது. வீடு செல்ல
வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள
வேண்டும். என்ன
செய்வது என்று
சிந்தித்தான். நல்ல
வழி ஒன்று அவனுக்குத்
தோன்றியது.
தென்னங்கன்றுகளை எல்லாம்
பிடுங்கி, ஒன்றாகக்
கட்டினான். அவற்றைத்
தூக்கி கொண்டு, தன்
வீட்டிற்கு வந்தான்.
தன் கண் பார்வையிலேயே
அவற்றை வைத்திருந்தான்.
பொழுது விடிந்தது. அந்தக்
கன்றுகளைத் தூக்கிக்
கொண்டு நிலத்திற்கு வந்தான்.
முன்பு இருந்தது போலவே
அவற்றை நட்டு வைத்தான்.
பொழுது சாய்ந்ததும் அவற்றைப்
பிடுங்கி எடுத்துக்
கொண்டு, தன் வீட்டிற்குச்
சென்றான். இப்படியே
தொடர்ந்து நடந்து
வந்தது.
ஒரு வாரம் சென்றது- தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.
ஒரு வாரம் சென்றது- தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.
தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.
கோபம் கொண்ட
அவர்,
""நீ
பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல்
காப்பாய் என்று
உன்
பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக்
கிடக்கின்றன. என்ன
செய்தாய்?'' என்று
கத்தினார்.
""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான்
காவல்
காக்க
வேண்டும் என்றீர்கள். இரவில்
நான்
இவற்றை
வீட்டிற்கு எடுத்துச் சென்று
பாதுகாத்தேன். பகலில்
மீண்டும் இவற்றை
இங்கே
நட்டேன். நீங்கள் சொன்னது போலவே
நடந்து
கொண்டேன். இவை
ஏன்
வாடி
விட்டன!
என்று
எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.
இதைக் கேட்ட
அரசர்,
"இவனிடம் போய்
இந்த
வேலையை
கொடுத்தோமே...' என்று
தலையில் அடித்துக் கொண்டார்.
"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்
நன்றி
சிறுவர்மலர்
செயலி - Kids GK for Class 3 to 5
Elephant drawing for kids | How to draw elephant easy https://www.youtube.com/watch?v=YaNVph43OEY
No comments:
Post a Comment