அறிவுக்கு விருந்து – 03.07.2019 (புதன் )

அறிவுக்கு விருந்து – 03.07.2019  (புதன் )
குறளறிவோம்-  20   வான்சிறப்பு
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
Translation:
When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.
Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
சிந்தனைக்கு
வேலைக்கு முன் வெற்றி என்பதை அகராதியில்கூட காண முடியாது.
தமிழ் அறிவோம்
     ஒத்தச் சொற்கள்
                        ஆறு  -           நதி
                        ஆறு  -           வழி
பழமொழி  
* ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள் ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:   கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

Enrich your   vocabulary
·         Uncovered....திறந்துவைக்கப்பட்ட 
·         Under....கீழே 
·         Undergo....அனுபவப்படு 
·         Underground.....நிலப்பரப்பிற்குக்கீழே 
·         Underhand....மறைவாக 
·         Underline......அடிக்கோடிட்டு 
·         Underling.....கீழாள் 
·         Underneath.....கீழாக 
·         Undersigned.....கையொப்பமிட்ட 
·         Understand.....பொருள் அல்லது இயல்பு

Opposite Words
            Yes                  x          No
            Yesterday       x          Tomorrow

மொழிபெயர்ப்பு
·         DRUM STICK – முருங்கைக்காய்
·         ELEPHANT YAM – கருணைக்கிழங்கு
·         FRENCH BEANS – நாரில்லா அவரை
Proverb
* Don’t make a mountain out of an anthill.
Meaning : People sometimes get very upset over small problems. This proverb reminds you to take a moment and see how important (or not important) the issue is. Messing up your laundry or being late for work is not very important when you consider your entire life. So it’s important to stay calm and not get angry about tiny problems.

இனிக்கும் கணிதம்

ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகளில் ஒரு தங்க காசு கலந்து விட்டது அதை எவ்வாறு பிரிப்பது என்று ராஜாவிற்க்கு குழப்பம் ராஜாவிடம் ஒரு தராசு மட்டும் தான் இருந்தது . அமைச்சர் உடனே விடை கூறிவிட்டார் அந்த விடை உங்களுக்கு தெரியுமா ?

தங்க காசு நிறை அதிகம் உடையது எனவே 24 காசுக்களையும் எட்டு எட்டாக உடைய மூன்று தொகுதிகளாக பிரித்து கொண்டார் . இப்போது தராசின் இரண்டு பக்கமும் இரண்டு தொகுதிகளை வைத்தார் தராசு இரண்டு பக்கமும் சமமாக இருந்தால் மூன்றாவது தொகுதியில் தங்க காசு இருக்கும் இல்லை எனில் எந்த பக்கம் அதிகம் இழுக்கிறதோ அந்தபக்கம் தங்க காசு இருக்கும் இப்பொழுது தங்க காசு உள்ள தொகுதி உறுதியாக தெறிந்து இருக்கும் .தெரிந்த தொகுதியின் எட்டுகாசுகளை தாராசில் மூன்று மூன்றாக வைக்கிறார் மீதி இரண்டு காசுகளையும் தனியே வைக்கிறார். இப்பொழுதும் அதே நடைமுறை இரண்டு பக்கமும் சமமாக இருந்தால் மீதி உள்ள இரண்டு காசுகளில் ஒன்று தங்க காசு இல்லை எனில் அதிகம் இழுக்கும் பகுதியில் உள்ளது தங்க காசு. இதே நடைமுறையை மூன்றாது முறைய தொடர்ந்தால் தங்க காசு உள்ள பக்கம் அதிகமாக கீழ் இறங்கும்.


அறிவோம் அறிவியல்
பாதரசத்தில் இரும்பு மிதக்கும்
அறிவியல் துளிகள்
            மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல்கள்.
தினம் ஒரு மூலிகை – அதிவிடயம்
அதிவிடயம் (Aconitum heterophyllum) மலைப்பகுதிகளில் வளரும் ஒரு குறுஞ்செடியாகும். அகன்ற இலைகளுடன் நீலநிற பூக்களுடைய இச்செடி மருத்துவகுணம் கொண்டது.[1] ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சுரம், அதிசாரம், சளிஅஜீரணம் போன்ற நோய்களைக் குணமாக்க சித்த மருத்துவர்கள் அதிவிடயத்தைப் பயன் படுத்துகிறார்கள்.  நேபாள பரம்பரை மருத்துவர்கள் அதிவிடய பொடியுடன் தேன் சேர்த்து இருமல்,வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களுக்கு தருகிறார்கள். அதிவிடயத்தை காய்ச்சி வயிற்று வலிக்கு கொடுக்கிறார்கள். ஜம்முகாஷ்மீரத்து மலைவாழ் மக்கள் பசியின்மைக்கு பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத முறையில் அதிவிடயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 
ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்திலும் அதிவிடயம் உபயோகிக்கப் படுத்தப்படுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – கொய்யா
குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.
100 கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது ஒரு நாள் தேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் கிருமித் தொற்று, சில வகையான புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காக்கிறது. மேலும் ரத்தக் குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புக்கள் போன்ற உறுப்புக்களின் அடிப்படைக் கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இருக்கிறது.
வைட்டமின் சி-யைத் தவிர வைட்டமின் -வும் இதில் நிறைவாக இருப்பதால், கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. வாழைப் பழத்தைப்போலவே இதிலும் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. பொட்டாசியமானது செல்களின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் மிகவும் அவசியம். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயல் இழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.


வரலாற்றுச் சிந்தனை
                           குப்தர்களின் காலத்தில் (கி.பி.மூன்றாம் நூற்றாண்டு) நாட்டின் கல்வி மற்றும் கலைகள் பெரும் வளர்ச்சியை அடைந்தன.  குப்தர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் 'பொற்காலம்' எனப்பட்டது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் சான்றாகத் திகழ்கின்றன.
                கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஹர்ஷவர்த்தனர், மிகப் பெரிய யானைப் படையையும் குதிரைப் படையையும் கொண்டிருந்தார். நாட்டைப் ,பெரும் மற்றும் சிறு நிலப்பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தார். படை பலத்தால் மட்டுமன்றி நட்பு முறையிலும் அண்டை நாடுகளுடன் வாணிபத்தைப் பெருக்கினார்.

தன்னம்பிக்கை கதை  -  தொல்லை?
பசுமையைன புல்வெளி. நிரைய பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்து தின்றன. கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகில் ஏறும். வாய் அருகில் செல்லும். இது மாடுகளுக்கு தொந்தரவாக இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்கு கொக்குகளின் இந்த செயல் பிடிக்க வில்லை. ஒருநாள்  அந்த பசு கொக்குகளை கண்டித்தது. “நான் புற்களை கடிக்கும் இடத்தில் நீங்கள் நின்றுகொண்டு எனக்கு தொந்தரவு செய்யக்கூடாதுஎன்று எச்சரித்தது.
இல்லை நண்பா!, எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள் மறைந்துகொள்ளும் எங்களால் அவைகளை எளிதாக பிடிக்க முடியாது. ஆனால் நீங்கள் புற்களை மேயும்போது உங்கள் மூச்சுக்காற்று பட்டு புற்கள் அசையும். அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப் பிடித்து உண்டு எங்கள் பசியாற்றிக் கொள்வோம். உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டோம்என்று கொக்கு பணிவுடன் சொன்னது.
அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்து உண்ண நாங்கள் உதவணுமா? முடியவே முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கடைசியாக நான் உங்கள் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே வரக்கூடாதுமீறி வந்தீர்களென்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம் செய்துவிடுவேன். ஜாக்கிரதைஎன்று கடும் கோபத்தோடு பசு கொக்குகளை விரட்டியடிக்க, பயந்தோடியது கொக்குகள்.
அன்றிலிருந்து அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், “பார்த்தாயா நண்பா, என்பக்கம் எந்த கொக்கும் வருவதில்லை. எந்த தொந்தரவும் தருவதில்லை. டென்ஷன் இல்லாமல் புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான் உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றனஎன்றது.
நீ சொல்லுவதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லஎன்றது மற்றொரு பசு. “சரி உன் இஷ்டம்என்று சொல்லிவிட்டு இந்தப் பசு மேயத் தொடங்கியது. சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்தது. உடனே பசு மூச்சுவிட முடியாமலும் பங்கர வலியாலும் அலறித் துடித்தது. அருகில் அமர்ந்து இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து. ‘பசு நண்பா எதற்காக இப்படி கத்துகிறாய்என்றது.‘என் மூக்கினுள் ஏதோ பூச்சி நுழைந்துவிட்டது. வலி தாங்க முடியவில்லைஎன்றது.
கவலைப்படாதே நண்பா, கிழே படுத்துக்கொள் நான் பார்க்கிறேன்என்றது கொக்கு. பசு சாய்ந்து படுத்ததும், பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு, “ஒன்றுமில்லை நண்பா, பூச்சி உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ எடுத்துவிடுகிறேன்என்ற கொக்கு தனது நீண்ட அலகால், மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியே போட்டது. பசு வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது. “நண்பா உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காதபோதும், ஆபத்து என்று வந்தபோது எனக்கு உதவி செய்துவிட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள் புகுந்துவிடக்கூடாது என்ற இயற்கை ஏற்பட்டால்தான் நீங்கள் எங்களுடன் அமர்ந்து இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட வேண்டும்என்றது பசு.
கொக்குகளும், பசுவுடன் அமர்ந்து இரைதேட புல்வெளி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
கதையின் நீதி: எல்லாமே நன்மைக்காதான் என்று செயல் பட்டால் தீவினைகள் அதிகம் ஏற்படாது.

செயலி - Text to Speech (TTS) - Text Reader & Converter

இணையம் அறிவோம்  -  www.topedusites.com/
பலாசம் மலர்   | ஓவியம் வரைவது எப்படி?

https://www.youtube.com/watch?v=JxZunPGN3JI


1 comment: