அறிவுக்கு விருந்து – 02.07.2019 (செவ்வாய் )
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
வானம் வழங்கா தெனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இப்பேருலகில் மழை
பொய்த்து விடுமானால் அது,
பிறர்
பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
மு.வரதராசனார் உரை:
மழை
பெய்யவில்லையானால், இந்த
பெரிய
உலகத்தில் பிறர்
பொருட்டு செய்யும் தானமும், தம்
பொருட்டு செய்யும் தவமும்
இல்லையாகும்.
Translation:
If heaven its watery treasures
ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of
'penitence'.
Explanation:
If rain fall not, penance and
alms-deeds will not dwell within this spacious world.
சிந்தனைக்கு
சாதனையும், சுயமுன்னேற்றமும் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருக்கிறது.
தமிழ் அறிவோம்
ஒத்தச் சொற்கள்
அவதூறு - பழிச்சொல்
அவதூறு - நிந்தனை
பழமொழி
* மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? *
பொருள்: மண் குதிரையில்
ஆற்றை கிடந்ததால், உடனே
மண் கரைந்து, ஆற்றில்
மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
Enrich your vocabulary
·
Ugly....அழகற்ற
·
Ultimate.... இறுதியான
·
Umpire......naduvar
·
Unable....இயலாத
·
Unanimous.....போட்டியற்ற
·
Unaware......தெரிந்தநிலையிலில்லாத
·
Unbound....தடையற்ற
·
Unburden....சுமைக்குறை
·
Unconscious....தெரிந்துசெய்யாத
·
Unify....ஒன்றுசேர்
Opposite Words
Past x Future
Peace x War
மொழிபெயர்ப்பு
COLLARD GREENS – சீமை பரட்டைக்கீரை
COLOCASIA – சேப்பங்கிழங்கு
CORIANDER – கொத்தமல்லி
COLOCASIA – சேப்பங்கிழங்கு
CORIANDER – கொத்தமல்லி
Proverb
* Don’t cross the bridge until
you come to it. *
Meaning : This proverb
tells you not to worry so much! Problems will certainly come in the
future. But what can be done about that now? It’s better to think
about what you are doing right now—without worrying about the unknown—and take
care of issues when they happen.
இனிக்கும் கணிதம்
பாதி நீரிலும்,
1/12 பங்கு சேற்றிலும், 1/6 பங்கு மணலிலும் புதைந்திருக்கும் ஒரு கம்பம் 1
½ முழம் வெளியே தெரிந்தால் அதன் நீளம் என்ன ?
கம்பத்தின் நீளம்
x எனில்,
கணக்கின்படி x – (1/2 x + 1/12 x + 1/6 x ) = 1 ½ x – 9/12 x = 3/2 è 3x/12 = 3/2 è
x
= 6
அறிவோம் அறிவியல்
ஹாலி வால்
நட்சத்திரம் சூரியனை 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.
அறிவியல் துளிகள்
மிக வேகமாக விழும்
மழைத்துளியின் வேகம்
மணிக்கு 18 மைல்கள்.
தினம்
ஒரு மூலிகை – நிலாவாரை
நிலாவாரை (Senna
alexandrina) பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இத்தாவரம் அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன் படுகிறது.
எகிப்தின் நைல் நதிபாயும் நுபியா என்ற பகுதியை இது பூர்விகமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தியா, சோமாலியா, மற்றும் சூடான் நாட்டின் கர்த்தூம் என்ற இடத்திலும் காணப்படுகிறது.
இதன் இலைகள் பேதி மருந்தாகப் பயன்படுகிறது. இது புதர் தாவரம் போல் வளரும் இவை 05 முதல் 1 அடி உயரம் மட்டுமே வளர்ந்து பச்சை இலைகளுடன் பல கிளைகளாக உருவாகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – மாதுளை
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித்தருவதால், மாதுளம் பழத்தை 'சூப்பர் ஃபுரூட்ஸ்’ என்று அழைக்கிறோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் கொழுப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பவர்களுக்கும், இந்தப் பழத்தைத் தாரளமாகப் பரிந்துரைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி
(Granatin B) உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் திசுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதால், தோலில் சுருக்கம், கருவளையம் போன்ற சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
கொலஸ்ட்ரால் கொஞ்சமும் இல்லாத பழம். 100
கிராம் மாதுளை 83 கலோரியைத் தருகிறது. 4 கிராம் நார்ச்சத்து இதில் இருப்பதால், நல்ல செரிமானத்துக்கும், செரிமான மண்டல இயக்கத்துக்கும் மிகவும் நல்லது.
வைட்டமின் சி சத்தும் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும். தொடர்ந்து இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு, ப்ராஸ்டேட் புற்றுநோய், ப்ராஸ்டேட் பெரிதாகுதல், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறையும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.
உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுப்போக்கு, நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லது.
வரலாற்றுச்
சிந்தனை
மௌரிய வம்சத்தில் தோன்றிய, சந்திரகுப்த மௌரியர், பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு தென்னிந்தியாவின் சிறு நிலப்பகுதியைத் தவிர பண்டைய இந்தியாவின் பெருநிலப் பகுதியை ஆட்சி செய்தார்; தமது ஆட்சியில் தொழில், வணிகம், நீதி போன்ற பல்வேறு துறைகளைப் பிரித்துத் தமது மந்திரியான சாணக்கியரின் துணையோடு சிறப்பாக நிர்வகித்தார்.
சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அசோகர் ( கி.மு மூன்றாம் நூற்றாண்டு) தனது ஆட்சிக் காலத்தில், மக்கள் உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்கு நலம் தரும் பல திட்டங்களை உருவாக்கினார். தனது
நாட்டை
விரிவு
படுத்தப் பல போர்களைச் செய்து வெற்றிகண்ட அசோகர், கலிங்கப் போருக்குப் பிறகு, 'இனி, போர் செய்வதில்லை' என உறுதி பூண்டு புத்த மதத்தைத் தழுவினார்.
தன்னம்பிக்கை கதை - பேராசை பெருநஷ்டம்!!!
ராமு, சோமு. அம்மு, பொம்மு என்று 4 குறங்குகள் இருந்தன. அவை ஒரு நாள் அருகிலுள்ள பழத்தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.
அவைகள் திருடிய பழக்கூடையை. ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொணடிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக்களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.
பழக்கூடையைத் தூக்கிவந்த குரங்களுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்ததது. “அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு” என்றது ராமு குரங்கு.
ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குதான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்” என்றது சோமு. “அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான், அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்” என்றது அம்மு.
“நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.” என்றது பொம்மு குரங்கு. “பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்” என்றது அம்மு. “இல்லை...இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போத பஞ்சு மிட்டாயை எடுத்துவிட வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தன, ராமுவும் சோமுவும். அவை இரண்டும், பஞ்சுமிட்டாய் கூடையை நெருங்கி அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.
அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.
சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில் பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான், தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.
சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில் பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான், தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.
‘ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள், உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்’ என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.
கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போது மென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, ‘குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்’ என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.
“நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா” என்றது பொம்மு குரங்கு.
“சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெருநஷ்டம் அடைந்தோம்” என்றன மற்ற குரங்குகள்.
Super sir. Very nice.
ReplyDelete