அறிவுக்கு விருந்து – 01.08.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 01.08.2019 (வியாழன்)
குறளறிவோம்-  40 - அறன்வலியுறுத்தல்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
கலைஞர் மு.கருணாநிதி உரை: பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
மு.வரதராசனார் உரை: ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
Translation: 'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.
Explanation: That is virtue which each ought to do, and that is vice which each should shun.

சிந்தனைக்கு
உன் கைரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பி விடாதே                             ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு
 தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்                                                       
·         அரும்பு        -           மொட்டு      
·         அரும்பு        -           இளமீசை

விடுகதை விடையுடன்
கடைசி வார்த்தையில் மானம் உண்டு முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள்  காஞ்சியில் நான் யார்  ? பட்டுத்துணி

பழமொழி  
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.
விளக்கம். உரு மாறியிருக்கும் பழமொழி இது.  ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்பது உண்மையான பழமொழி.
ஆ என்றால் பசு.  பசுவின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யை இளமைக்காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வனப்பு ஏற்படும். பூ என்றால் பூவினால் கிடைக்கும் தேனை முதுமைக்காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது என்றும்  பொருள்.
Enrich your   vocabulary
·         Mirror.....கண்ணாடி 
·         Beckon... சைகை செய் 
·         Quiver.....அசைதல் 
·         Foreign....   அயல்நாடு 
·         Pleasant.....இனிமையான 

Opposite Words 
Arrive X  Leave
  • He arrived late as usual.
  • My baby gets upset when I leave the room.
Arrive X Depart
  • What time does the plane arrive in New York?
  • Flights by Air Europe depart Gatwick on Tuesdays.

மொழிபெயர்ப்பு
Corn, Indian Corn, Maize
மக்காச் சோளம்
Cucumber
வெள்ளரிக்காய்

Proverb
Coming events cast their shadow before
ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே

இனிக்கும் கணிதம்

கணிதத்தின் ஆறு முகங்கள்
*கணிதத்தின் ஒரு முக்கியமான அங்கம்கணித்தல்’.* இது யாவரும் அறிந்ததே. ஆனால் கணிதத்திலோ கணிதத்தைக் கற்பிக்கும் துறையிலோ ஆழமான நோக்குடையவர்கள் கணிதத்திற்கு இதைத்தவிர இன்னும் ஐந்து அங்கங்கள் இருப்பதை அறிவார்கள். இந்த ஆறு அங்கங்களையும் கணித விசுவரூபத்தின் ஆறுமுகங்கள்என்றே சொல்லலாம்.
1.      *கணித்தல் (Evaluation)*
2.      *துல்லியம் (Precision)*
3.      *தர்க்க நியாயம் (Logic)*
4.      *அடிக்கூறு பிரித்தல் (Essentialisation)*
5.      *கருத்தியல் வழிகாணல் (Abstraction)*
6.      *குறியீட்டமர்வு (Symbolism)*

அறிவோம் அறிவியல் 
                                                                                
உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.
            உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு

அறிவியல் துளிகள்
மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

தினம் ஒரு மூலிகை – தழுதாரை
      தழுதாரை (Clerodendrumphlomidisவாதமுடக்கி)இதுஒரு பூக்கும் தாவரம்ஆகும். இதன் குடும்பப் பெயர் லேமேசிஸ்  (Lamiaceae) என்று அழைக்கப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில்மூலிகையாகப்பயன்படுத்தப்படுகிறது.
இத்தாவரம் இந்தியாஇலங்கை மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர்.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் நெல்லிக்காய் :
ஒரு நெல்லிக்காயிலுள்ள சத்துக்கள் இரண்டு ஆரஞ்சுப் பழங்களில் உள்ள சத்துக்குகளுக்கு நிகர் என்பர். வைட்டமின் சி வெப்பத்தில் எளிதில் அழிந்துவிடக் கூடியவை. ஆகவே சீக்கிரத்தில் உபயோகப்படுத்துவது நல்லது. பச்சையாக நெல்லிக்காயை சாப்பிடுவது அதன் சத்துக்களை அப்படியே நமக்கு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வரலாற்றுச் சிந்தனை                                                                         
குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள செயலி [ APP ] என்ன ?
  –  CHIRAG  App [ CHILD HELPLINE FOR INFORMATION ON THEIR RIGHTS AND TO ADDRESS THEIR GRIEVANCES ]
தன்னம்பிக்கை கதை தேவதை கொடுத்த பரிசு!
நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை; மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.
""நண்பனே, இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத் திற்கும் போதிய உணவுப் பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றான் பிரகாஷ்.
""அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே.... நீயே எடுத்துக்கொள்,'' என்றான் ஜெகதீஸ். ""இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றான் பிரகாஷ்.
""இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமை யில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன்,'' என்று அழுத்தமாகக் கூறினான் ஜெகதீஸ்.
பிரகாஷும், ஜெகதீஸும் ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர்.
""மீனவர்களே, என்ன அப்படிப் பார்க் கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இரு வரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப் பது போன்று தெரிகிறது. அது என்ன வென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன்,'' என்றாள் கடல் தேவதை.
""தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.
""என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல் கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும் படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று!'' என்றான் பிரகாஷ்.
கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது.
""நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத் தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இரு வருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன்,'' என்றது கடல் தேவதை.
பிறகு, பிரகாஷ் முன்பும், ஜெகதீஸ் முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன.
இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக் காரர்கள் ஆயினர்.

இணையம் அறிவோம் https://www.crayola.com/for-educators.aspx

Bird drawing | Pelican | How to use watercolor pencils https://www.youtube.com/watch?v=qieeyq39upI