அறிவுக்கு விருந்து – 14.10.2019 (திங்கள்)

அறிவுக்கு விருந்து – 14.10.2019 (திங்கள்)


வரலாற்றில் இன்று -  அக்டோபர் 14 (October 14) கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1066நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர்.
·  1582கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
·  1758ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா புருசியாவை ஆக்கிக்ர்க் என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டது.
·  1773உலகின் முதலாவது கல்வி அமைச்சு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
·  1606யோவான் மத்சாக்கர், டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் (. 1678)
·  1643முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (. 1712)
·  1873ஜூல்ஸ் ரிமெட், பிரான்சியத் தொழிலதிபர் (. 1954)
·  1887. இலட்சுமணசுவாமி, இந்திய மருத்துவர், கல்வியாளர் (. 1974)
·  1890டுவைட் டி. ஐசனாவர், அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (. 1969)
இறப்புகள்
·  1803அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1750)
·  1827பிரடெரிக் நோர்த், பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநர் (பி. 1766)
·  1831ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (பி. 1761)
·  1944இர்வின் ரோமெல், செருமானிய இராணுவத் தலைவர் (பி. 1891)
·  1961இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை முன்னோடி (பி. 1915)
·  1977பிங்கு கிராசுபி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1903)
சிறப்பு நாள்

குறளறிவோம்-  81. விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை: விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
மு.வரதராசனார் உரை:விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
Translation: Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.
Explanation: It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
சிந்தனைக்கு  
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமிஆனந்தம்
விடுகதை விடையுடன்
மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?    விழுது
பழமொழி - எவ்வளவோ பானைகள் (என் தலையில்) உடைந்து வீணானதைப் பார்த்துவிட்டேன், ஆனால் தலையில் உடைந்த பானை கழுத்தில் ஆரமாக விழுந்த புதுமையை இன்றுதான் கண்டேன்.
Transliteration Veenaay udaintha chatti ventiyatu untu, poonaram en talaiyil poonta puthumaiyai naan kantatillai.
தமிழ் விளக்கம்/Tamil Explanation மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். கணவனாலோ தப்புச்செய்யாமல் இருக்கமுடியவில்லை. எனவே அவன் களைத்துப்போய் தன் நண்பன் வீட்டுக்குப்போனபோது நண்பனின் மனைவி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு சட்டியை உடைத்துக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான்.
Enrich your   vocabulary
ululate ஊளையிட்டு கதறு
unarm ஆயுதங்களைத் தவிர்
unbend வளையை நிமிர்த்து
Opposite Words 
Despair X Hope
  • She killed herself in despair.
  • When I first arrived in New York, I was full of hope for the future.
Difficult X  Easy
  • The exam was very difficult.
  • Finishing the task will be easy.
மொழிபெயர்ப்பு
பிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்)
ஒருவகை சிறியப் பூசணி
Proverb
A fog cannot be dispelled with a fan
சூரியனை கையால் மறைக்க முடியுமா?
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + [
தேர்வு செய்த எழுத்து சைஸ் குறைக்க.
Ctrl + / + c
இன்செர்ட் (¢)செய்ய
இனிக்கும் கணிதம்      கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
அறிவியல் அறிவோம்
ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUVJ9RnokUlR9K_xScLzqWkMZeUv7qiQOBp2knzN6_KfWqYzQ4nlwDiBNhaHFiOvb8RVBqhbbPvaJ5hK-6cmaeRMOzYrwBbaspX7W7VWIDyIvVtWp9K0yHOkTiKi_mAAgCcHKcx3179c39/s400/PSYLLIUM.JPGஅறிவியல் துளிகள்    - டைனமட் - ஆல்பர்ட் நோபல்
 தினம் ஒரு மூலிகை -  இசப்கோல்.

1.
மூலிகையின் பெயர் -: இசப்கோல்.
2. தாவரப் பெயர் -: PLANTAGO OVATA.
3. தாவரக் குடும்பப் பெயர் -: PLANTAGINACEAE.
4. வேறு பெயர்கள் -: இஸ்கால், ஆங்கிலத்தல் PSYLLIUM’ என்று பெயர்.
5. வகைகள் -: ப்ளேன்டகோ சில்லியம், ப்ளேன்டகோ இன்சுல்லாரிஸ், ஜிஐ 1, ஜிஐ 2, மற்றும் நிஹாரிக்கர் போன்றவை.
6. பயன்தரும் பாகங்கள் -: விதை, விதையின் மேல் தோல் முதலியன.
7. வளரியல்பு -:
இசப்கோல் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு அடி முதல் 1.5 அடி வரை உயரம் வளர்க்கூடியது. இதற்கு மணல் பாங்கான களிமண் நிலங்களில் பயிரிட ஏற்றது. வடிகால் வசதி வேண்டும். விதைகளை விதைத்து 2 மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். பூக்க அரம்பித்தவுடன் நீர் பாய்ச்சக் கூடாது. பின் 4 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அடிப்பகுதியிலிருந்து நீண்ட காம்புகள் பூக்கும். விதைகள் மெல்லியதாகவும், இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். விதைகள் முதிர்ச்சி அடையும் போது செடிகளின் அடிபாக இலைகள் மஞ்சள் நிறமாகும், பழங்கள் லேசாக அமுக்கினால் 2 விதைகள் வெளிவந்து விடும். காலை 10 மணிக்கு மேல் அறுவடை சிறந்தது. செடிகளை வேறுடன் பிடுங்கி பெரிய துணிகளில் கட்டி எடுத்து களத்திற்குக் கொண்டு வத்து விரித்துப் பரப்பி, காயவைக்க வேண்டும். 2 நாட்கள் கழித்து டிராக்டர் அல்லது மாடுகள் கொண்டு தாம்பு அடிக்க வேண்டும். விதைகளைப் பிரித்தெடுத்த பின்பு செடிகள் மாட்டுத் தீவனமாகப் பயன் படுத்தலாம். பின் இயந்திரங்கள் மூலம் விதையின் மேல் தோலைப் பிரித்தெடுக்க வேண்டும்.
இந்தச் செடியின் விதைகளின் மேல் தோல்கள் தான் மருந்துக் குணம் அதிகமுடையது. விதையின் மேல் தோலுக்குப் பிசுபிசுப்புத் தன்மை உண்டு. இந்த விதையின் ஒரு வித எண்ணெய் மற்றும் சிறுய அளவில் அக்யுபின் மற்றும் டானின் என்ற க்ளோக்கோஸைடுகள் உள்ளது. இதன் தோல் தண்ணீரை உறிஞ்சி தன்னிடத்தில் நிறுத்திக் கொள்ளும் தன்மை உடையது. குஜராத்திலும், ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. இது இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மருந்துப் பொருளாகும். விதைகளின் மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.
8. மருத்துவப் பயன்கள் -:
இசப்கோல் விதைகள் குடல்புண், மலச்சிக்கலை நீக்கப் பயன்படுகிறது. மேல்தோல் வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறது. தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்த, தேனுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. இம்மூலிகைச் சாயங்கள், அச்சு ஐஸ்கிரீம் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தோல் நீக்கப்பட்ட விதைகளில் 17-19 சதம் வரை புரதச் சத்து உள்ளதால் கால் நடைத் தீவனமாகப் பயன் படுகிறது
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்மெலன்கள் (MELONS)
மெலன்கள் வெள்ளரிக்காய் வகையைச் சார்ந்தது. மெலன்கள் பொதுவாக பச்சையாக (raw) உண்ணப்படுகிறது. இதன் சதைப்பகுதியில் 94% தண்ணீரும், 5% சர்க்கரையும் உள்ளது. இப்பழங்களின் விதை, மேலுறையை நீக்கி, உண்ணப்படுகிறது. இல்லையெனில், எண்ணெய் எடுப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. (.கா.) தர்பூசணி, முலாம்பழம்
வரலாற்றுச் சிந்தனை  உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
தன்னம்பிக்கை கதை -  பேராசை பெரும் நஷ்டம்
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல...அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி ...'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்...இது இப்படியே நீடித்தால்....வறுமை தாங்காது...நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க....அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்...அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட ...அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர். ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று 'தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது,
இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது. உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். "ஆ" என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.
ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

செய்துபார்ப்போம் -origami paper fish https://www.youtube.com/watch?v=Wtn0m7feRug

இணையம் அறிவோம்  - https://www.nexteducation.in/

செயலி - Math Tricks Competitive Exahttps://play.google.com/store/apps/details?id=com.mthe.trke


1 comment: