அறிவுக்கு விருந்து – 4.10.2019 (வெள்ளி)

அறிவுக்கு விருந்து – 4.10.2019 (வெள்ளி)

வரலாற்றில் இன்று  -  அக்டோபர் 4 (October 4)
கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  23சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.
·  1227மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.
·  1302பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.
·  1511பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.
·  1537மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.
பிறப்புகள்
·  1542ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (. 1621)
·  1840விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (. 1919)
·  1884சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், எழுத்தாளர் (. 1925)
·  1895பஸ்டர் கீடன், அமெரிக்கத் திரைப்பட நடிகர். இயக்குநர் (. 1966)
·  1904திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (. 1932)
·  1911. எம். . அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (. 1973)
இறப்புகள்
·  1582அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)
·  1669ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)
·  1904கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (பி. 1847)
சிறப்பு நாள்
குறளறிவோம்-  77 . அன்புடைமை
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
மு.வரதராசனார் உரை: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
Translation:  As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.
Explanation:  Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.
சிந்தனைக்கு
மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது.
ஆனால் நமது தவறை உணர்வது கடினம்.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
வா -----> அழைத்தல்                                          வீ -----> பறவை, பூ, அழகு 
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல் 
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் 
விடுகதை விடையுடன்
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை
 பழமொழி - மதுபிந்து கலகம்போல் இருக்கிறது.
பொருள்/Tamil Meaning - துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது.
Transliteration - Mathupinthu kalakampol irukkiratu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation- மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அவை முறையே தேன், துளி என்று பொருள்படும். துளித்தேனுக்கு அடித்துக்கொள்வது என்பது அற்ப விஷயங்களுக்காக சண்டைபோட்டுக்கொள்வதைக் குறிக்கிறது.
Enrich your   vocabulary
unspeak   சொன்னதை திரும்ப பேசு
untie        அவிழ், முடிச்சு அவிழ்த்துவிடு
unwind     கற்றைப்பிரி
Opposite Words 
Crazy X  Sane
  • The neighbors must think we’re crazy.
  • Of course he isn’t mad. He’s as sane as you or I.
Create X Destroy
  • The new factory is expected to create more than 400 new jobs.
  • The scandal destroyed Simmons and ended his political career.
மொழிபெயர்ப்பு
கொத்தமல்லி
கொத்தவரை
Proverb
A cat may look at a king
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + End
ஒரு டாக்குமெண்டில் இறுதிக்கு செல்ல
Ctrl + 1
சிங்கிள் ஸ்பெஸ் லைன் கொடுக்க
இனிக்கும் கணிதம்      முகத்தல் அளவு
2
குறுணி - 1 பதக்கு
2
பதக்கு - 1 தூணி
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
அறிவியல் துளிகள்    - தெர்மோ மீட்டர் - கலிலியோ கலிலி

தினம் ஒரு மூலிகை -  மாதுளை :
மாதுளை சிறுமர இனத்தைச் சோ்ந்த பழமரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும், பலுகிஸ்தானத்திலும் பயிரிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவை.
மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளை (PomegranatePunica granatum) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் 'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது என பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.
மாதுளையின் வகைகள்
·         ஆலந்தி
·         தோல்கா
·         காபுல்
·         மஸ்கட் ரெட்
·         ஸ்பேனிஷ் ரூபி
·         வெள்ளோடு
·         பிடானா
·         கண்டதாரி
ஒவ்வொரு ரகத்திற்கும் தனிப்பட்ட சுவையும் சக்தியும் உண்டு. அது போல் சில ரகத்திற்கு தனிப்பட்ட மருத்துவ குணமும் உண்டு. மஸ்கட் ரெட் மற்றும் ஆலந்தி இனங்களில் உள்ள பழ முத்துக்கள் இளஞ் சிவப்பு, இரத்த சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும். இவைகளில் இளஞ் சிவப்பும், இரத்த சிவப்புமே மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.
பயன்கள்
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மாதுளை மரத்தின் பட்டைகளிலும் வோ்களிலும் "Pyridine" வகுப்பைச் சார்ந்த ஆல்கலாய்டுகள் "Pelletierine" மற்றும் "Iso Pelletierine" உள்ளன. "Tanin" என்னும் மருந்துச் சாரத்துடன் மரப்பட்டைகளிலுள்ள"Pelletierine Tannate" என்னும் சத்துப்பொருள் தான் புழுக் கொல்லி செய்கையை நிலை நிறுத்த செய்கிறது. மாதுளம் பழ விதையில்"Punicic Acid" என்னும் அமிலம் உள்ளது. இது ஒரு நுண் கிருமி கொல்லியாகும்.அதனால் தான் நுண்கிருமிகளால் உண்டாகும் மலட்டு பிரச்சனைக்கு இது மருந்தாகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்பேரீச்சை:
இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.
வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை. இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
வரலாற்றுச் சிந்தனை  அடால்ப் ஹிட்லர் (கி.பி. 1933 - 1945)
1941ல் ஹிட்லரின் படைகள் ஐரோப்பாவில் அநேகமாக எல்லா நாடுகளையும் மற்றும் வட ஆப்ரிக்காவில் பல பகுதிகளையும் கைப்பற்றின.
யூதர்கள், ஸ்லோவாக்கியர்கள், ஜிப்சிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் என பலரையும்  வதைமுகாம்களுக்கு அனுப்பி அங்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையில் பலர் இறந்தனர்! சைவ உணவு மட்டுமே உண்ணும் ஹிட்லரின் ஆட்சியில் மட்டும் 11 மில்லியன் மக்கள் இப்படி கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

தன்னம்பிக்கை கதை -  சிங்கமும் நரியும்

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.
இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.
இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.
ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.
சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.
அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.

செய்துபார்ப்போம் HOW TO PREPARE FOR NMMS EXAM - TAMIL TUTORIAL-PART 1- https://www.youtube.com/watch?v=nIrniWLN2cE

இணையம் அறிவோம்

https://ucmp.berkeley.edu/education-outreach/k-12-resources/teacher-resources/

செயலி MAT Exam


No comments:

Post a Comment