அறிவுக்கு விருந்து – 15.10.2019 (செவ்வாய்)


அறிவுக்கு விருந்து – 15.10.2019 (செவ்வாய்)

வரலாற்றில் இன்று -  அக்டோபர் 15 (October 15) கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1066இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.
·  1529வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.
·  1863அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
பிறப்புகள்
·  கிமு 70வேர்ஜில், உரோமைக் கவிஞர் (. கிமு 19)
·  1218ஊலாகு கான், மங்கோலியப் பேரரசர் (. 1265)
·  1265தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (. 1307)
·  1542அக்பர், முகலாயப் பேரரசர் (. 1605)
·  1829ஆசப் ஆல், அமெரிக்க வானியலாளர் (. 1907)
·  1844பிரீட்ரிக் நீட்சே, செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (. 1900)
·  1855சுப்பராயலு, சென்னை மாகாண முதலமைச்சர் (. 1921)
·  1863நெவின்ஸ் செல்வதுரை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (. 1938)
·  1881பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (. 1975)
இறப்புகள்
·  925முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864)
·  1564ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. 1514)
·  1764மருதநாயகம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1725)
·  1917மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (பி. 1876)
·  1918சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)
சிறப்பு நாள்

குறளறிவோம்-  82. விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
மு.வரதராசனார் உரை: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
Translation:  Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.
Explanation:  It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
சிந்தனைக்கு  
நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையை ஒரு குழந்தையின் புன்னகையை போல எதிர்கொள்ளுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
கா -----> சோலை, காத்தல்                                          கூ -----> பூமி, கூவுதல்
கு  -----> இருள்                                                                   கை -----> கரம், உறுப்பு 
கோ -----> அரசன், தலைவன், இறைவன் 
விடுகதை விடையுடன்
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?  நட்சத்திரங்கள்
பழமொழி-அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
பொருள்/Tamil Meaning - ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள்.
Transliteration  Ancum moonrum untanal ariyappennum camaikkum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation - அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு.
Enrich your   vocabulary
unbraid   குற்றங்கண்டு திட்டு
uncoil     கருணையைப் பிரி
uncoil    சுருளைப் பிரி
Proverb
A friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
Opposite Words 
Dim X Bright
Opposite words examples:
  • Isaac was old and his eyes were dim.
  • Her eyes were hurting from the bright lights.
Discourage X Encourage
  • My father is a lawyer, and he discouraged me from entering the field.
  • I want to thank everyone who has encouraged and supported me.
மொழிபெயர்ப்பு
வெங்காயத்தாள்(பூ
(சிறியவகை) வெண்முள்ளங்கி
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Shift + *
பிரிண்ட் எழுத்துக்களை மறைக்க
Ctrl +
ஒரு வார்த்தை இடது பக்கம் நகர்த்த
இனிக்கும் கணிதம்      கால அளவு..
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
அறிவியல் அறிவோம்
அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
அறிவியல் துளிகள் -டி.என்.ஏவடிவமைப்பு-பிரான்சிஸ் கிரிக் & ஜேம்ஸ் வாட்சன்
தினம் ஒரு மூலிகை -  இன்சுலின் செடி.
இன்சுலின் செடி.
1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.
2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்
3) PLANT FAMILY: Costaceae
4) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்5) பயன் தரும் பாகம் -: இலை.
6) வளரியல்பு -: இந்தச் செடி வளமான ஈரப்பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம். அமேரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும், தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.
5) மருத்துவப் பயன்கள் -: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study: தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. ANTI_Diabetic herb.
பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்போம்ஸ் (POMES)
போம்ஸ் வகை பழங்களில், ஆப்பிள் மற்றும் வால்பேரி அடங்கும். பூக்களில் சூற்பைகளை சுற்றியுள்ள பகுதிகள், பெரிதாகி உண்ணத்தகுந்த சதைப்பற்று மற்றும் சாறு நிறைந்த பழங்களாக மாறுகிறது. சதைப்பற்றுள்ள பகுதி விதைசெல்லை மூடியுள்ளது.
வரலாற்றுச் சிந்தனை  முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

தன்னம்பிக்கை கதை -  பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு...அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது. கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது. கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது.

கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும். கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது. நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
           
அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது. தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது. நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது. அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

செய்துபார்ப்போம் -Easy Paper Butterfly Origami https://www.youtube.com/watch?v=qmPTMNBIz0o

இணையம் அறிவோம்  - https://www.busuu.com/

செயலி - Fast math tricks https://play.google.com/store/apps/details?id=com.eternalapps.a.maths

No comments:

Post a Comment