வரலாற்றில் இன்று - அக்டோபர் 10 (October 10)
நிகழ்வுகள்
· 680 – முகம்மது நபியின்
பேரன் இமாம் உசைன்
கர்பலா
போரில் முதலாம் யசீத்
கலீபாவின்
படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது.
· 1575
– கத்தோலிக்கப்
படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத்
தோற்கடித்தன.
· 1582
– கிரெகொரியின் நாட்காட்டி
அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி,
போலந்து,
போர்த்துக்கல்,
எசுப்பானியா
ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
· 1760
– டச்சுக்
குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின்
தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர்.
பிறப்புகள்
· 1822
– சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்,
அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884)
இறப்புகள்
சிறப்பு நாள்
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
கலைஞர் மு.
கருணாநிதி
உரை: அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?
மு.
வரதராசனார்
உரை: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
Translation: Though every outward part
complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?.
What good, when soul within, of love devoid, lies halt and maimed?.
Explanation: Of what avail are all
the external members (of the body) to those who are destitute of love, the
internal member.
சிந்தனைக்கு அறிவு ஆட்சி செய்யும் இடத்தில், ஆற்றல் துணை செய்யும்.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
அ
|
சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
|
ஆ
|
பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
|
இ
|
சுட்டெழுத்து, இரண்டில்
ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
|
விடுகதை
விடையுடன்
ஒரு குகை,32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது? வாய்
பழமொழி -கண்ணால் கண்டதை
எள்ளுக்காய் பிளந்ததுபோலச்
சொல்லவேண்டும்.
பொருள்/Tamil Meaning -
எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். அதுபோல
கண்ணால் கண்டதை
நடுநிலையுடன் விவரிக்கவேண்டும்.
Transliteration - Kannaal kantatai
ellukkaay pilanthathupolach sollaventum.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
இது
ஒரு
வழக்கில் சாட்சிக்குச் சொன்ன
ஆலோசனை.
Enrich
your vocabulary
Opposite Words
Damage
X Improve
- Smoking can severely damage your health.
- The doctors say she is improving.
Dark X
Bright
- At the kitchen door she nearly ran into a dark form.
- With his small frame and bright eyes, he’d always reminded her of an elf of some sort.
மொழிபெயர்ப்பு
ஒரு
வகை
கோசு
(சலாது)
|
|
அவரை
(போஞ்சி)
|
Proverb
A contended mind is a continual feet
போதும்
என்ற
மனமே
பொன்
செய்யும் மருந்து
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ Alt + 2
|
ஹெட்டிங்2 டெக்ஸ்ட் மாற்ற
|
Alt
+ Ctrl + F2
|
புதிய டாக்குமெண்ட் ஓபன் செய்ய.
|
இனிக்கும்
கணிதம் பெய்தல் அளவு..
2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 படி 8 படி - 1 மரக்கால்
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
2 உழக்கு - 1 உரி 2 உரி - 1 படி 8 படி - 1 மரக்கால்
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
*மருதாணி
பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை
பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல்,
பல்வலி குணமாகும்.
அறிவியல் துளிகள் - மிதிவண்டி - கிரிக்பேட்ரிக் மெக்மில்லன்
தினம் ஒரு மூலிகை - முருங்கை
முருங்கை மரத்தில் (Moringa
oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு
உணவு ஆகும். இதில் "muringa" என்ற பெயர் ,
"முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது
ஆகும்.
முரி எனும் சொல்
ஒடிதல்,
கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும்
சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில்
ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும். முருங்கை மரவகையைச் சேர்ந்தது.
இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா
மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது.
தாய்லாந்து, தாய்வானிலும் பயிராகிறது. தமிழ்நாட்டில் யாழ்ப்பாண
முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால்
முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில்
கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால்
குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல்
பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு
வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை
அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400
காய்கள் வரை கிடைக்கும்.
முருங்கைக் காய்
நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். இது நீர் சுத்திகரிப்பு மற்றும் இதன்
நஞ்சு எதிர்ப்பு பண்புகள் மற்றும் சோப்பு பண்புகளால் கை கழுவுதலில் பயன்படுத்த
முடியும்,
மற்றும் பழங்காலத்தில் இருந்து முருங்கை மூலிகை மருத்துவத்தில்
பயன்படுத்தப்படுகிறது.
இலைகள் மிகவும்
சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள்
அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின்,
மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது
ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
இந்த பச்சைக்
காய்கறியின் இலைகள் மற்றும் காய்கள், இரத்தத்தை
சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாக
செயல்படுகிறது. முருங்கைக்காய்களை ரசமாகவோ அல்லது சாறு வடிவத்தில் வழக்கமாக
உட்கொள்வதால், முகப்பரு மற்றும் பிற தொடர்புடைய தோல்
பிரச்சினைகள் குறைக்கிறது.
பழங்களும் அவற்றின்
பயன்பாடுகளும் – பெர்ரிகள் (BERRIES)
பெர்ரி வகைப் பழங்கள் (Pericarp) (தோலைத் தவிர) ஓரினவகையைச் (Homogenous) சார்ந்ததாகும். இவ்வகைப் பழங்கள் சதைப்பற்றுடன், சாறுத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கும். இவற்றில், விதைகள் சதையுடன் இணைந்து காணப்படும். பழங்கள் மிக எளிதில் உடையக்கூடிய
செல் அமைப்பினை கொண்டுள்ளது. கவனமின்றி கையாளுதல் மற்றும் உறையசெய்தல் பழங்களை பழுதடையச் செய்கிறது. (எ.கா.) நெல்லிக்காய்,
திராட்சை, ஸ்ட்ராபெர்ரி
வரலாற்றுச் சிந்தனை அகஸ்டோ பினோசெட்
(கி.பி. 1973 - 1990)
1973ல் சிலி அரசைத் தூக்கி எறிந்துவிட்டு,
அமெரிக்கா உதவியுடன் ஆட்சியை பிடித்தார்! இவர் ஆட்சியில் பலர் காணாமல் போயினர். 35
ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்களுக்காக
சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு முன் மரணமடைந்தார். விடுதலை
வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர் சுப்பிரமணிய பாரதி. தமிழ்
கவிதையிலும் உரைநடையிலும் தன்னிகரற்று விளங்கும் பாரதி, நவீன தமிழ் கவிதைக்கு
முன்னோடியாகத் திகழ்பவர். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை
ஊட்டியவர். இவரது கவித்திறனை எட்டப்ப நாயக்கர் வியந்து பாராட்டி பாரதி என்ற
பட்டத்தை வழங்கினார். 1949ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்ட பாரதியாரின் படைப்புகள்
இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியமாகும். பால
கங்காதர திலகர், உ.வே.சாமிநாதையர், வ.உ.சிதம்பரனார், மகான் அரவிந்தர்,
விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதா தேவி ஆகியோரைப் போற்றி பின்பற்றியவர்.
சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை
மிருகங்களின் இராசா என்றும் கூறுவர். அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற
சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.
ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை
வேட்டையாடி தின்று வந்தது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து
வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும்
கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி
ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத்
நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு
தீர்மானித்தன. எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும்
சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத்
தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என
தெரிவித்தன.
அத்துடன் நீங்கள் பல மிருகங்களை
ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு
உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு
மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது, ஒருநாள் ஒரு
முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது. அதனால்
சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன்
தாமதமாகினாய் என கர்ச்சித்தது. அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம்
என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது. என்னைவிட
பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று
இறுமாப்புடன் கேட்டது. அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக்
காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.
அதனை நம்பிய சிங்கம் கிணற்றை
எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள்
இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது. பிம்பமும்
கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு
கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில்
மூழ்கி மாண்டது.
முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.
செய்துபார்ப்போம் - +2 Maths
Integral Calculus https://www.youtube.com/watch?v=hg56EaRcfkA
No comments:
Post a Comment