வரலாற்றில் இன்று - நவம்பர் 2 (November 2) கிரிகோரியன் ஆண்டின்
306 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
307 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
619 – மேற்குத் துருக்கிய கானேடின்
ககான்
சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார்.
·
1889 – வடக்கு டகோட்டா,
தெற்கு டகோட்டா
ஆகிய குடியேற்றங்கள் ஐக்கிய அமெரிக்காவின்
39வது,
40வது
மாநிலங்களாக
முறையே இணைந்தன.
·
1899 – இரண்டாம் பூவர் போர்:
தென்னாபிரிக்காவில்
பூர்கள்
பிரித்தானியர்கள்
வசம் இருந்த லேடிசிமித் பகுதியை 118 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
·
1914 – முதலாம் உலகப் போர்:
உருசியா
உதுமானியப் பேரரசுடன்
போரை ஆரம்பித்தது. இதனை அடுத்து தார்தனெல்சு நீரிணை
மூடப்பட்டது.
·
1917 – பிரித்தானியாவின்
வெளிவிவகார செயலாளர் ஆர்தர் பால்போர் வெளியிட்ட பிரகடனத்தில்
யூதர்களுக்கு
பாலத்தீன
நிலத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து
அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
·
1920 – அமெரிக்காவில் பென்சில்வேனியா, பிட்சுபர்கில்
முதலாவது வணிக-நோக்கு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
· 1988 – பி. தாணுலிங்க நாடார், தமிழக அரசியல்வாதி (பி. 1915)
சிறப்பு நாள்
- கல்லறைத் திருநாள் (கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்)
- இறந்தோர் நாள், (மெக்சிக்கோ)
- இந்தியர் வருகை நாள் (மொரிசியசு)
குறளறிவோம்- 96. விருந்தோம்பல்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
நாடி இனிய சொலின்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை:
தீய
செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி
நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
பிறர்க்கு
நன்மையானவற்றை நாடி இனிமை உடையச்
சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
Translation:
Who seeks out
good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
In him the power of vice declines, and virtues grow.
Explanation:
If a man, while
seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his
virtue increase.
சிந்தனைக்கு
பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை
தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
வீ
|
மலர் , அழிவு
|
வே
|
வேம்பு, உளவு
|
வை
|
வைக்கவும், கூர்மை
|
வௌ
|
வவ்வுதல்
|
விடுகதை
விடையுடன்
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள்
யார்?
மெழுகுதிரி
பழமொழி- சுவாமி இல்லையென்றால்
சாணியை
பார்;
மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்;
பேதி
இல்லை
என்றால் (நேர்)
வானத்தைப் பார்.
பொருள்/Tamil Meaning
கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
கடவுள் இல்லை என்பவன் சாணியைப் பார்த்தால் தெரிந்துகொள்ளட்டும்; மருந்து இல்லை என்பவன் வாணவேடிக்கைகளைப் பார்க்கட்டும்; மலம் சரியாக இறங்காதவன் பேயாமணக்கு விதைகளைத் தேடட்டும்.
Transliteration
Cuvami illaiyenral saaniyai paar; maruntillai enral panattaip paar; peti illai enral (ner) vanattaip paar.
Cuvami illaiyenral saaniyai paar; maruntillai enral panattaip paar; peti illai enral (ner) vanattaip paar.
தமிழ் விளக்கம்/Tamil Explanation
சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
சுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. இந்த வழக்கம் முன்னாட்களில் சிற்றூர்களிலும், இப்போதுகூட சில வழிபாடுகளிலும் கடைப்பிடக்கப்படுவாதத் தெரிகிறது.மருந்து என்றது வெடிமருந்தைக் குறிப்பது; பாணம் என்றால் வாணவேடிக்கைகளில் பயன்படும் ராக்கெட் வாணம்: ’பாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு.நகர.24). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது.
Enrich your vocabulary
Proverb
A man in debt is caught in net
கடன்
பட்டவன் தூண்டிலில் அகப்பட்ட மீனாவான்
Opposite Words
Fall X
Rise
- The rate of inflation was falling.
- Sales rose by 20% over the Christmas period.
Famous
X Unknown
- Many famous people have stayed in the hotel.
- An unknown number of people were killed.
மொழிபெயர்ப்பு
வானவில் கோசுக்கீரை
|
|
பிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ B
|
போல்ட் தனிப்படுத்தப்பட்ட தேர்வு ஆகும் .
|
Ctrl
+ C
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை நகலெடுக்கும் .
|
இனிக்கும் கணிதம் பொன்நிறுத்தல்..
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
அறிவியல் அறிவோம் - மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
அறிவியல் அறிவோம் - மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
அறிவியல் துளிகள் - செயற்கை கதிரியக்கம் - கியூரி ஜுலியட்
தினம் ஒரு மூலிகை இறும்பிலி
இறும்பிலி (Diospyros ferrea) இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் கருங்காலியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பர்மா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், பிலிபைன்ஸ், தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் பரவிக்காணப்படுகிறது. மரப்பொருட்கள் செய்ய இதன் பலகை உபயோகமாக உள்ளது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பழுப்பாதல்
(BROWNING)
பழுப்பாதலை தடுக்கும் முறைகள்
- நொதிகள் வினை புரியாதவாறு pHன் மதிப்பை மாற்றுதல்.
- காய்கறி மற்றும் பழங்களை சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு (அ) பிரைன்) கரைசலிலோ (அ) சர்க்கரை கரைசலிலோ மூழ்க வைத்தல்.
வரலாற்றுச் சிந்தனை ஆண்டுகள்
முக்கிய நிகழ்வுகள்
1707 அவுரங்கசீப் இறப்பு
1707 அவுரங்கசீப் இறப்பு
1724 ஐதராபாத்தில்
சுதந்திர நிசாம் உருவாதல்
1740 வங்காள
நவாப் சுதந்திரத்தை அறிவித்தல்
தன்னம்பிக்கை
கதை- நாயின்
வால்
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்.
அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment