அறிவுக்கு விருந்து – 21.10.2019 (திங்கள்)

அறிவுக்கு விருந்து – 21.10.2019 (திங்கள்)

வரலாற்றில் இன்று -  அக்டோபர் 21 (October 21) கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1097முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.
·  1209நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
·  1520பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
·  1805நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
·  1824யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.
·  1854புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.
·  1861அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
·  1876யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[1]
பிறப்புகள்
·  1328கோங்வு, சீனப் பேரரசர் (. 1398)
·  1772சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர்
·  1790அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (. 1869)
·  1833ஆல்பிரட் நோபல், சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர்
·  1877ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவர் (. 1955)
·  1911மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (. 1978)
·  1921இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (. 2015)
·  1925சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி
·  1929அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்
இறப்புகள்
·  1805ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)
·  1949புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874
·  1967எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் ·  1984டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)
·  2002யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (பி. 1909)
·  2010அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)
சிறப்பு நாள்

இந்தியக் காவலர் நினைவு நாள் (இந்தியா)

குறளறிவோம்-  87. விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
மு.வரதராசனார் உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
Translation:  To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.
Explanation:  The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
சிந்தனைக்கு  
கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
நே
 அன்புஅருள்நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல்நோவுவருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டுகவிதை
விடுகதை விடையுடன்
தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?  உப்பு
பழமொழி- இழவு சொன்னவன் பேரிலேயா பழி?
பொருள்/Tamil Meaning  மரணத்தை அறிவிப்பவனைக் குறைசொல்வது தகுமா?
Transliteration  Ilavu connavan perileye pazi?
தமிழ் விளக்கம்/Tamil Explanation ஒரு தூதனிடம் காட்டவேண்டிய கருணையைப் பழமொழி சுட்டுகிறது. ’எய்தவன் இருக்க அம்பை னோவானேன்?’ என்ற பழமொழி இதனின்று சற்று வேறுபட்டது: ஏனென்றால் மரண அறிவிப்பில் மனவருத்தம், அம்பு தைத்ததில் உடல்வருத்தம்.
Enrich your   vocabulary
unearth  தோண்டியெடு, வெளிபடுத்து, ஆராய்ந்து காண்
unfasten  கட்டுப்பிரி
unfold  விரி, திற, வெளியாக்கு, மடக்கதே
Proverb
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
Opposite Words 
East X West
  • He turned and walked away towards the east.
  • A damp wind blew from the west.
Easy X Hard
  • The test was easy.
  • You’ll have to make some hard decisions.
மொழிபெயர்ப்பு
லீக்ஸ்
இலைக்கோசு
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Alt + 1
ஹெட்டிங்1 டெக்ஸ்ட் மாற்ற 
Ctrl + Alt + 2
ஹெட்டிங்டெக்ஸ்ட் மாற்ற 
இனிக்கும் கணிதம்      நீட்டல் அளவை வாய்ப்பாடு
8 அணு – 1 தேர்த்துகள்
8 தேர்த்துகள் – 1 பஞ்சிழை
8 பஞ்சிழை – 1 மயிர் 
அறிவியல் அறிவோம்
உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
அறிவியல் துளிகள் - மரபணு - கிரிகோர் மெண்டல்
தினம் ஒரு மூலிகை -  களா
1) வேறுபெயர் - கிளா.
2) தாவரப்பெயர் --CARRISSA CARANDAS.
3) குடும்பம் -- APRCYANACEAE.
4) வளரும் தன்மை – செம்மண்ணில் நன்கு வளரும். மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும்.ஐந்து முதல் ஆறு அடி உயரம் வரை வளரும்.முட்கள் உள்ள செடி, தடிப்பான பச்சை இலைகளையுடையது. காரைச்செடிபோன்று இருக்கும். வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது.பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை.விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.
5) பயன்தரும் பாகங்கள் --பூ, காய், பழம், வேர்ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
6) பயன்கள் –  காய், பழம், ஆகியவை பசி மிகுக்கும்.  சளியகற்றும்.
காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன்கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும்.
வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக்கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப்பித்தம், சுவையின்மை, தாகம், அதிகவியர்வை, சில்விஷயங்கள் தீரும்.
களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டு வரக் கண்களிலுள்ள வெண்படலம், கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
ஆன்தோசான்தின்கள் (ANTHOXANTHINS) - இவை நிறமற்றவை. வெள்ளைநிற நிலையிலிருந்து மஞ்சள் நிறமுடைய நிறமிகள் இப்பிரிவில் அடங்கும். காய்கறிகளுக்கு வெளிர் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. (.கா) காலிபிளவர், வெங்காயம், பசலைக்கீரை மற்றும் பச்சையிலை காய்கறிகள். பச்சையிலை காய்கறிகளில் ஆன்தோசான்தின்கள் இருப்பினும், குளோரோஃபில்கள் அதிகமாக இருப்பதால் இவற்றின் நிறம் குறைக்கப்படுகிறது.

வரலாற்றுச் சிந்தனை 
விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
தன்னம்பிக்கை கதை -  குணம்
துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது மரத்தின் மேலிருந்து தண்ணீரில் தேள் ஒன்று விழுந்து விட்டது. தண்ணீருக்குள் கை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி. தன்னைக் காப்பாற்றுகிறார் என்ற எண்ணமின்றி நறுக்கென்று கொட்டியது தேள். துடித்து தேளைத் தவறி, தண்ணீரில் விட்டார் துறவி. மறுபடியும் கருணையோடு தூக்கினார் மறுபடியும் கொட்டியது. எத்தனை முறை முயன்றாலும் அதே கதை. கரையிலிருந்து ஒருவர் கேட்டார். சுவாமி, தேள் தான் கொட்டுகிறதுதிரும்பத் திரும்ப ஏன் கொட்டுப்படுகிறீர்கள். விட்டுவிட வேண்டியது தானே.
துறவியின் பதில்… “கொட்டுவது தேளின் இயற்கை குணம். காப்பாற்றுவது மனிதனின் இயற்கை குணம். அதனுடைய இயல்பை அது விடாத போது என்னுடைய இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்”. துறவிக்கு இருந்த இந்த குணத்தை வள்ளுவன் ஒரு படி மேல் சென்று இந்த குணநலன்களே ஒரு மாளிகையின் தூண்கள் என்று தனது சான்றாண்மை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
குறள்:
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பொருள்: மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.
தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!!!
செய்துபார்ப்போம் - பேப்பர் பூ டிசைன்  https://www.youtube.com/watch?v=d36U5Sm_9ZI

இணையம் அறிவோம்   https://www.edsys.in

செயலி - Mental Ability NTSE-NMMS

https://play.google.com/store/books/details/Disha_Experts_NTSE_NMMS_OLYMPIADS_Champs_Class_7_M?id=Ma01DwAAQBAJ


No comments:

Post a Comment