அறிவுக்கு விருந்து – 24.10.2019 (வியாழன்)


அறிவுக்கு விருந்து – 24.10.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று -  அக்டோபர் 24 (October 24) கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  69வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர்.
·  1260சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
·  1605முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது.
·  1795போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
·  1801மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
·  1851யுரேனசு கோளைச் சுற்றும் உம்பிரியல், ஏரியல் ஆகிய நிலாக்களை வில்லியம் இலாசல் கண்டுபிடித்தார்.
பிறப்புகள்
·  51டமிசன், உரோமைப் பேரரசர் (. 96)
·  1632ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (. 1723)
·  1775பகதூர் சா சஃபார், இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் (. 1862)
·  1804வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (. 1891)
·  1827ரிப்பன் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இந்திய வைசிராய் (. 1909)
·  1890சிசிர் குமார் மித்ரா, இந்திய இயற்பியலாளர் (. 1963)
·  1914இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இந்தியத் தேசிய இராணுவப் போராளி (. 2012)
·  1915பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (. 1998)
·  1921ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (. 2015)
·  1921. கே. வேலன், தமிழக எழுத்தாளர்
இறப்புகள்
·  1601டைக்கோ பிராகி, டென்மார்க் வானியலாளர் (பி. 1546)
·  1801மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
·  1869ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1786)
·  1870அந்தோனி மரிய கிளாரட், எசுப்பானிய, கத்தோலிக்க மறைபோதகர் (பி. 1807)
·  1953மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1881)
·  1956எச். என். ரிட்லி, பிரித்தானியத் தாவரவியலாளர், மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர் (பி. 1885)
·  1981எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (பி. 1897)
·  1991இசுமத் சுகதாய், இந்திய எழுத்தாளர் (பி. 1915)

·  1994காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)

சிறப்பு நாள்

குறளறிவோம்-  90. விருந்தோம்பல்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
மு.வரதராசனார் உரை: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
Translation:  The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.
Explanation:  As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.
சிந்தனைக்கு  
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்க போகிறது.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
யா
 ஒரு வகை மரம்யாவைஇல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருகஏவல்
வி
 அறிவுநிச்சயம்ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்புஉளவு
விடுகதை விடையுடன்
வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன?
விளக்கு
பழமொழி- அற்றது பற்றெனில் உற்றது வீடு.
பொருள்/Tamil Meaning உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும்.
Transliteration Arratu parrenil urratu veetu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation அற்றது, உற்றது என்ற சொற்களை இறந்தகாலத்தில் பயன்படுத்தியிருப்பதால், பற்று முழுவதும் அற்ற கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (கம்பராமாயணத்தில் உள்ளஎடுத்தது கண்டார், இற்றது கேட்டார்வரி நினைவுக்கு வருகிறது.)
Enrich your   vocabulary
visit சென்று பார், பார்வையிடு
vitiate களங்கமுண்டாக்கு
vivify  உயிர் தோற்றம் உண்டாக்கு
Proverb
A lie has no legs
கதைக்கு காலில்லை
Opposite Words 
Enter X Exit
  • Silence fell as I entered the room.
  • I exited through a side window.
Evening X Morning
  • I do most of my studying in the evening.
  • I’m not feeling very well this morning.
மொழிபெயர்ப்பு
Mint
புதினா
மிதுனாக்கீரை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Shift + <
செலேக்ட் பண்ண டெக்ஸ்ட் சைஸ் குறைக்க
 F1
ஹெல்ப் பாக்ஸ் ஓபன் செய்ய
இனிக்கும் கணிதம்      நீட்டல் அளவை வாய்ப்பாடு
8 மயிர் – 1 கடுகு
8 கடுகு – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 நெல்
அறிவியல் அறிவோம்
அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது -  கிரிக்கெட் மட்டை
அறிவியல் துளிகள் - X ரே - ரான்ட்ஜன்
தினம் ஒரு மூலிகை -  ஜோதிப்புல்
இந்த புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தரும். இன்றும் கொல்லிமலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்
பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படும் நிறமிகள்
பீட்டாலின்கள் (BETALINS)
சிவப்பு நிறமுடைய நீரில் கரையும் நிறமிகளுக்கு பீட்டாலின்கள் என்று பெயர். இவை பீட்ருட் மற்றும் பெர்ரி போன்றவற்றில் காணப்படுகிறது.
வரலாற்றுச் சிந்தனை 
அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்? முதலாம் சைரஸ்
தன்னம்பிக்கை கதை -  மாற்றம் | லஞ்சம் தவிர் |
ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது. அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார். வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே? இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும். எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

செய்துபார்ப்போம் - How To Make Paper Flowers

https://www.youtube.com/watch?v=4SYJDQg_Uv4

இணையம் அறிவோம்   https://www.edgalaxy.com/education-quotes

செயலி - Mental Ability NTSE-NMMS

https://play.google.com/store/books/details/Disha_Experts_NTSE_NMMS_OLYMPIADS_Champs_Class_6_M?id=M601DwAAQBAJ

No comments:

Post a Comment