அறிவுக்கு விருந்து – 3.10.2019 (வியாழன்)



         அறிவுக்கு விருந்து         3.10.2019 (வியாழன்)

வரலாற்றில் இன்று  - அக்டோபர் 3 (October 3)
கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள்.
நிகழ்வுகள்
  கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
  கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
  382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.
  1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.
  1789சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.
  1833இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.[1]
பிறப்புகள்
  1846பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர்
  1849திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)
  1854எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)
  1917பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)
  1930மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)
இறப்புகள்
  1226அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)
  1867எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர்
  1896வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)
  1923கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)
  1932மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)
  1954வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)
சிறப்பு நாள்
குறளறிவோம்-  76 . அன்புடைமை
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:  வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
மு.வரதராசனார் உரை: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
Translation:The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.
Explanation: The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
சிந்தனைக்கு
அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம்,
அந்த அறிவை பெற ஒன்றே ஒன்றுதான் தேவை. அது ஒழுக்கம்.
.
தமிழ் அறிவோம்   ஒத்தச் சொற்கள்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள் 
மோ -----> முகர்தல், மோதல் 
யா -----> அகலம், மரம் 
விடுகதை விடையுடன்
படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன? கனவு
 பழமொழி - மௌனம் கலகநாசம்.
பொருள்/Tamil Meaning - மௌனமாக இருப்பது கலகம் முடிந்ததுக்கு அறிகுறி.
Transliteration  - Maunam kalakanaasam.
தமிழ் விளக்கம்/Tamil Explanation- தீர்வு காணாத ஒரு கலகம் இரு சாராரும் மௌனமாகப் போய்விடும்போது பெரும்பாலும் முடிந்துவிடுவதைப் பார்க்கிறோம். எனவே மௌனம் சம்மதத்துக்கு மட்டுமல்ல, கலக முடிவுக்கும் அறிகுறி என்றாகிறது.
Enrich your   vocabulary
unsay          சொன்னதை திரும்பப்பெறு
unscrew      திருகைச் சுழற்று
unseat         பதவி இழக்கச் செய்
Opposite Words 
Countryman X  Foreigner
  • He didn’t look like a farmer, yet he looked a countryman.
  • Tom felt that people were suspicious of him because he was a foreigner.
Courage X  Cowardice
  • Sue showed great courage throughout her illness.
  • She was ashamed of her cowardice.
மொழிபெயர்ப்பு
சவ்சவுக்காய்
குருந்தக்காளி
Proverb
A bird in hand is worth two in bush
அரசனை நம்பு புருஷனை கைவிடாதே
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + Del
கர்சரின் வலதுபுறத்தில் வார்த்தை நீக்க.
Ctrl + Backspace
கர்சரை இடது பக்கம் நீக்க.
இனிக்கும் கணிதம்      முகத்தல் அளவு
2
உழக்கு - 1 உரி
2
உரி - 1 படி
8
படி - 1 மரக்கால்
அறிவியல் அறிவோம்  மூலிகைப் பொடிகள்
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

அறிவியல் துளிகள்    - நியூட்ரான்- ஜேம்ஸ் சாட்விக்

தினம் ஒரு மூலிகை -  வகுளம்  :
            மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின  மரம் ஆகும். இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரிமெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.
இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண - எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.
குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம். வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்நட்சத்திர பழம்
பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக் குணங்களை தெரிந்துகொள்வோம். நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர்காலமே இதன் சீசன் ஆகும்.
இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். மலச்கிக்கலைப் போக்க - ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும் வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.

வரலாற்றுச் சிந்தனை  ஜோசப் ஸ்டாலின் (கி.பி. 1922 - 1953)
ஸ்டாலின் தொழிற்புரட்சி யையும், தொழிலகத்தையும் மையமாக வைத்து செயல்பட்டார். அவற்றிற்காக மகா கெடுபிடியாக நடக்க ஆரம்பித்ததில், நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, பல்லாயிரம் மக்களை ராணுவ முகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது! அறிவுஜீவிகள், அரசு, ராணுவம் என எல்லா மட்டத்திலும் பெரும் களையெடுப்பு என்ற பெயரில் மரணபயத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திய மிரட்டல் நாயகன் இவர்.

தன்னம்பிக்கை கதை -  புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்..

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.
ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.
ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.
"நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.
""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என கழுதை கூறிற்று.
ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.
# புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்

செய்துபார்ப்போம் Origami perro dachshund

https://www.youtube.com/watch?v=CDxgQTZeDhg

இணையம் அறிவோம் https://www.noaa.gov/education/resource-collections

செயலி NTSE 2019

https://play.google.com/store/apps/details?id=com.careerlift.ntse

No comments:

Post a Comment