அறிவுக்கு விருந்து – 11.10.2019 (வெள்ளி)


அறிவுக்கு விருந்து – 11.10.2019 (வெள்ளி)
  
 
வரலாற்றில் இன்று -  அக்டோபர் 11 (October 11)
கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள்.
நிகழ்வுகள்
·  1138சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
·  1531சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார்.
·  1582கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
·  1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
·  1727இரண்டாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடி சூடினார்.
பிறப்புகள்
·  1758ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (. 1840)
·  1826மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (. 1889)
·  1872எமிலி டேவிசன், ஆங்கிலேயக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (. 1913)
·  1884எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (. 1962)
·  1896உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (. 1982)
இறப்புகள்
சிறப்பு நாள்
குறளறிவோம்-  80. அன்புடைமை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
மு.வரதராசனார் உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
Translation: Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.
Explanation: That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.
சிந்தனைக்கு  அறிவாளி முன்யோசனையின் மூலம் தீயவற்றைத் தவிர்க்கிறார்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
 பறக்கும் ஈதாகுகைதேனீ
 சிவன்ஆச்சரியம்சுட்டெழுத்துஇரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சிஉணவுஊன்தசை
விடுகதை விடையுடன்
விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?  உலக்கை
பழமொழி - குழந்தைக் காய்ச்சலும், குண்டன்/குள்ளன் காய்ச்சலும் பொல்லாது.
பொருள்/Tamil Meaning - குழந்தையின் பொறாமையும் குண்டன் அல்லது குள்ளனின் பொறாமையும் எளிதில் தீராது.
Transliteration - Kulantaik kayccalum, kuntan/kullan kayccalum pollatu.
தமிழ் விளக்கம்/Tamil Explanation- காய்ச்சல் என்றது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். ’காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே’--அறநெறிச்சாரம் 22.ஏதேனும் ஒரு காரணத்தால் இக்குணம் மேற்கொண்ட குழந்தை அவ்வளவு எளிதில் அதைக் கைவிடுவதில்லை. இரண்டு குழந்தைகள் ஒருவருக்கொருவர்டூவிட்டுக்கொண்டால் மீண்டும் ஒன்றுசேர நாளாகிறது.குண்டன் என்றது இழியகுணம் உடையவனை. குள்ளனும் பொதுவாக நம்பத்தாகாதவன் ஆகிறான் (’கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’). இவர்களின் வெறுப்பும் பொறாமையும் எளிதில் மாறுவன அல்ல.
Enrich your   vocabulary
urge    தூண்டு, அவசரபடுத்து, வேண்டு, வற்புறுத்து
use      பயன்படுத்து, செலவழி, நடத்து
usher  இட்டுச் செல், அறிமுகமாக்கு
Opposite Words 
Dawn X Sunset
  • It had been the hope which had kept her going through the dawn and early morning.
  • Lovers walked hand in hand towards the sunset.
Daytime X Midnight
  • I can’t sleep in the daytime.
  • We stayed there until way after midnight.
மொழிபெயர்ப்பு
ஒரு வகை கோசு (சலாது)
அவரை (போஞ்சி)
Proverb
A cracked bell never sound well
உடைந்த சங்கு பரியாது
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + F1
டாஸ்க் pane ஓபன் செய்ய
Ctrl + F2
பிரிண்ட் பிரிவியூ ஓபன் செய்திட.
இனிக்கும் கணிதம்      பெய்தல் அளவு..
2
குறுணி - 1 பதக்கு
2
பதக்கு - 1 தூணி
5
மரக்கால் - 1 பறை

அறிவியல் அறிவோம்  ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
`A’, `B’, `AB’, `O’ என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர, உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு.
 O பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், O குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு யுனிவர்சல் டோனர் என்று பெயர்.
அறிவியல் துளிகள்    - பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்
தினம் ஒரு மூலிகை -  அருவதா.
அருவதா.
1) மூலிகையின் பெயர் -: அருவதா.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgznI1D1aFBmUtjcwGq3pFArxrJPkMlEUF2XPsQmHLs8y9zbr_r10ZxfbOEzcvbkgJbFydUuH2ZZywGS0bQTladOz_Cp_qI1bQOzNvEQJAWutyDpXFyCsQPQWsIlJIl8MdKoNbVREpxBCQq/s320/Aruvatha.jpg2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS.
3) தாவரக்குடும்பம் -: RUTACEAE.
4) வேறு பெயர்கள் -: சதாப்பு இலை.
5)தாவர அமைப்பு -: இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இது வறட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, , முதலியன வராது.
6) மருத்துவப் பயன்கள் -: இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும்கிச்சிலிப்பழங்கள் (CITRUS FRUITS)
கிச்சிலிப்பழங்கள், கிச்சிலி (Citrus) இனத்தைச் சார்ந்தது. இவற்றில் 16 வகைகள் உள்ளது. இவை எப்பொழுதும் பச்சையாக இருக்கும். குறுஞ்செடிகள் (Shrubs) மற்றும் முள்நிறைந்த மரங்களில் விளைகிறது.
இவை உலகமெங்கும் சூடான மற்றும் இளஞ்சூடான தட்ப வெப்பநிலைகளில் வளரக்கூடியது. எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு இப்பிரிவில் அடங்கும். நல்ல நிறம், விரும்பத்தக்க மணம் மற்றும் இனிப்புச்சுவை போன்றவைகளால், இப்பழங்கள் விரும்பத்தக்கதாகிறது. இப்பழங்கள் பழச்சாறுகளாகவும், பழங்களாகவும் உண்ணப்படுகின்றன.

வரலாற்றுச் சிந்தனை  இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ தன்னம்பிக்கை கதை -  முதலையும் குரங்கும்

சயோசித புக்தியால் உயிர் தப்பிய குரங்கு
ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது. அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.
ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து 'நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?' எனக் கேட்டது. குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது 
குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது. அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.
அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.  வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது. 
தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.  அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.
முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது. வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது. முதலையும் ஏமாந்து திரும்பியது.
நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும். முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.  
செய்துபார்ப்போம் - Origami Dragon  https://www.youtube.com/watch?v=kUsxMXwCW8A
இணையம் அறிவோம்  - https://ta.wikipedia.org/

செயலி -Math Tricks  https://play.google.com/store/apps/details?id=example.matharithmetics

No comments:

Post a Comment